தானம் பெற அரண்மனைக்கு வந்த தமது நண்பர் சுதாம பிராமணரை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வழிபட்டதையும் , தங்கள் ஆன்மீக குருவான சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் வாழ்ந்தபொழுது தாங்கள் லீலைகளைப் பகிர்ந்து கொண்டதைப் பற்றி அவர்கள் உரையாடியதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது . பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரான சுதாம பிராமணர் பௌதிக ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்தார் . தானாக வருவதைக் கொண்டு அவர் தன்னையும் , தன் மனைவியையும் பராமரித்து வந்ததால் அவர்கள் ஏழ்மையில் வாடினர் . ஒருநாள் , தன் கணவருக்கு அளிப்பதற்கு எந்த உணவும் இல்லாததைக் கண்ட சுதாமரின் மனைவி , துவாரகைக்குச் சென்று நண்பரான ஸ்ரீ கிருஷ்ணரிடம் யாசித்து வரும்படி தன் கணவரிடம் வேண்டினான் . சுதாமர் தயஙகினார் . ஆனால் அவள் வற்புறுத்தியதால் அவர் செல்ல ஒப்புக் கொண்டார் . பகவானைத் தரிசிக்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்று அவர் எண்ணினார் . அவரது மனைவி ஸ்ரீ கிருஷ்ணருக்கு ’ கொடுப்பதற்காக சிறது அவலை யாசித்துப் பெற்று வந்தாள் . அதை எடுத்துக்கொண்டு சுதாம...