Skip to main content

Posts

பரதனின் மகிமை (பகுதி 1)

பரதனுடைய ஆதர்ச வாழ்க்கை ஸ்ரீபரதனுடைய வாழ்க்கை மிகவும் பொலிவு மிக்கது. எடுத்துக்காட்டாகத் திகழ்வது. அவரிடம் எந்த இடத்திலும், எந்தக் குறையும் காணப்படவில்லை. அவருடைய மஹிமை எல்லையற்றது. பரதன் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சாவதாரம் என்றே வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அத்துடன் அவருடைய சரித்திரம், அவரை ஒரு ஸாதுக்களில் தலைசிறந்தவராகவும், பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு யஜமான பக்தராகவும். மஹாத்மாவாகவும், பற்றற்றவராகவும், பக்தியை முதன்மையாகக் கொண்ட கர்மயோகியாகவும் நிரூபிக்கிறது. பரதன் தர்மத்தையும், நீதியையும் அறிந்தவர்; நற்குணங்கள் நிறைந்தவர்; தியாகசீலர்; புலனடக்கமும், நன்னடத்தையும் உள்ளவர். அன்பு, பணிவு இவற்றின் உருவமாய்த் திகழ்ந்தார். சிரத்தை கொண்டவராகவும், அறிவாளியாகவும் விளங்கினார். வைராக்யம், ஸத்யம், தவம், பொறை, சகிப்பு, கருணை, வாத்ஸல்யம், தீரம், வீரம், ஆழம், எளிமை, சாந்தம், இனிமை, தற்பெருமை கொள்ளாமை, எல்லோரையும் நண்பராக்கிக் கொள்ளும் தன்மை, முதலிய குணங்கள் இவரிடத்தில் சிறப்பாக வளர்ச்சியடைந்து காணப் படுகின்றன. ஸஹோதர பாசத்துக்கு இவர் உயிருள்ள உருவே போன்றவர். பரதனுக்குத் தந்தையிடமிர...

பகவத் அன்பு ( பிரேமை)

 

காதல் மற்றும் பிரேமை

 

பக்தித் தொண்டின் முடிவான பலன்

 

பகவான் மூன்று நிலைகளில் உணரப்படுகிறார்.

 

பக்தர்களின் மரணமும் மற்றவர்களின் மரணமும்

 

அசிந்த்ய-பேதாபேத தத்துவம்

  ஏஷ நித்யோ ‘வ்யய: ஸூக்ஷ்ம ஏஷ ஸர்வாஸ்ரய: ஸ்வத்ருக் ஆத்மமாயா - குணைர் விஸ்வம் ஆத்மானம் ஸ்ருஜதே ப்ரபு: மொழிபெயர்ப்பு உண்மையில் ஜீவராசி ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதால், அவன் நித்தியமானவனும், அழிவற்றவனுமாவான். அவன் பிறப்பதுமில்லை, மடிவதுமில்லை. எல்லா வகையான உடல்களுக்கும் அவனே அடிப்படைத் தத்துவம் என்றாலும், அவன் உடலின் பிரிவைச் சேர்ந்தவனல்ல. ஜீவராசி மிகவும் பரிசுத்தமானவான் என்பதால் அவன் குணத்தில் பரமபுருஷருக்குச் சமமானவனாவான். இருப்பினும், அவன் மிகமிகச் சிறியவன் என்பதால், புறச்சக்தியினால் மயக்கப்படக் கூடியவனாக இருக்கிறான். இவ்விதமாக, தனது பல்வேறு உடல்களை ஏற்படுத்திக் கொள்கிறான். பொருளுரை இச்சுலோகத்தில், அசிந்த்ய-பேதாபேத தத்துவம், அதாவது, “ஒரேசமயத்தில் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்ட தத்துவம்” விவரிக்கப்படுகிறது. ஜீவராசி பரமபுருஷரைப்போல் நித்தியமானவன் (நித்ய). ஆனால் வேறுபாடு என்னவெனில், பரமபுருஷர் அனைவரிலும் பெரியவராவார். அவருக்குச் சமமானவரோ, அவரைவிட உயர்ந்தவரோ ஒருவருமில்லை. ஆனால் ஜீவராசியோ, மிகமிகச் சிறியவனாவான் (சூக்ஷ்ம). ஜீவராசியின் பரிமாணம், தலைமுடியின் நுனியின் பத்தா...