Skip to main content

Posts

கிருஷ்ணரும், பீஷ்மரும்

  சித - விசிக - ஹதோ விசீர்ண - தம்ச : க்ஷதஜ - பரிப்லுத ஆததாயினோ மே ப்ரஸபம் அபிஸஸார மத் - வதார்தம் ஸ பவது மே பகவான் கதிர் முகுந்த : மொழிபெயர்ப்பு முக்தி அளிப்பவரான , அந்த பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எனது முடிவான இலக்காக இருப்பாராக , எனது கூரிய அம்புகளால் ஏற்பட்ட காயங்களினால் கோபமடைந்ததைப் போல் , போர்க்களத்தில் என்னை அவர் திடீரென்று தாக்க முற்பட்டார் . அவரது கேடயம் சிதறிப் போயிருந்தது . மேலும் காயங்களினால் அவரது உடலில் இரத்தம் தோய்ந்திருந்தது . பொருளுரை கிருஷ்ணரும் , பீஷ்மரும் போர்க்களத்தில் நடந்து கொண்ட முறை கவனத்தைக் கவர்வதாக இருந்தது . ஏனெனில் , கிருஷ்ணரின் செயல் அர்ஜுனனுக்குச் சாதகமாகவும் , பீஷ்மருக்கு பாதகமாகவும் இருந்ததைப் போல் காணப்பட்டது ; ஆனால் உண்மையில் சிறந்த பக்தரான பீஷ்மதேவருக்கு விசேஷ அன்பைக் காட்டுவதற்காகவே இவ்வளவும் நிகழ்ந்தன . ஓரெதிரியைப் போல் நடந்துகொள்வதாலும் பக்தரால் பகவானை மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதே இத்தகைய விவகாரங்களின் பிரமிக்கச் செய்யும் அம்சமாகும் . பகவான் பரிபூரண...

ஶ்ரீ அத்வைதாசாரியர்

சைதன்ய ஸம்ப்ரதாயத்தின் ப்ரதான ஸ்தம்பம் போன்றவரும், கௌர லீலைகளின் முதல் ப்ரவர்த்தகரும் ஆகிய அத்வைத ஆசார்யரியர் வயதினாலும், கல்வியினாலும், அறிவினாலும் முதியவராக இருந்த போதிலும், பாலகனான ஸ்ரீ மஹாப்ரபுவின் பாததூளியை சிரோபூஷணமாகக் கொண்டவர்.பகவான் ஶ்ரீ சைதன்ய மாஹாபிரபுவின் அவதாரத்துக்கு முன்னரே தோன்றி , கௌர லீலைகளுக்கு வழி வகுத்துத்தானும் பல லீலைகள் செய்து மகிழ்ந்தவர். இவரும் ஷில்ஹட் ஜில்லாவில் இருக்கும் நவக்ராமம் என்னும் நகரின் ஒரு சிறு கிராமவாசியே! அந்நாட்களில் பல சிற்றரசுகள் இருந்தன. அதில் லாவுட் என்னும் சிற்றரசை பரம தார்மீகமான ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனது ராஜ சபையில் அத்வைத ஆசார்யரின் தந்தை 'பண்டித குபேர தர்க்க பஞ்சானன்', ராஜ பண்டிதராக இருந்து வந்தார். தர்க்கபஞ்சானன் சிறந்த நியாயாதிபதி. அவர் புகழ் வாய்ந்த வித்வான். அத்துடன் நல்ல செல்வந்தர். குழந்தை இல்லாத குறையினால், அவரும் அவரது மனைவி லாபாதேவியும் மிகுந்த வருத்தமுற்று இருந்தனர் அவரகளுக்குப் பல குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. இதனால் அவர்கள் மிகவும் வருத்தமும் வேதனையடைந்தனர், நித்தமும் பாகவானிடம் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்க பக...