புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ண சைதன்யர் வழங்கியவர் :- தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி பரம்பொருளான முழுமுதற் கடவுள் தனது நித்தியமான திவ்ய ஸ்வரூபத்தில் அவ்வப்போது இப்பிரபஞ்சத்தில் அவதரிக்கின்றார். அவ்வாறு வருவதற்கு எந்த கட்டாயத்திற்கும் அவர் உட்பட்டவரல்ல என்றபோதிலும், அவரைப் பற்றிய அறிவை இழந்து இப்பௌதிக உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை தாழ்ந்த கட்டுண்ட ஆத்மாக்களின் நன்மைக்காக அவர் வருகிறார். பகவானின் அவதாரம் லௌகீகத்தில் மூழ்கியுள்ளவர்களுக்கு மிகப்பெரிய புதிராகும். கடவுளைப் பற்றிய குறுகிய கருத்தைக் கொண்டுள்ள பெரும்பாலான ஆன்மீகவாதிகள்கூட, கடவுள் எவ்வாறு இவ்வுலகத்திற்கு தனிப்பட்ட முறையில் வர இயலும் என்று சந்தேகம் கொள்கின்றனர். ஆனால் தான் விரும்பும் எதையும் முழுமுதற் கடவுளால் செய்ய இயலும்; தனது திவ்யமான லீலைகளை அரங்கேற்றுவதற்காகவும் தனது பக்தர்களைக் காப்பாற்றுவதற்காகவும் பிரபஞ்சத்தை உய்விப்பதற்காகவும் இவ்வுலகில் தோன்றுவதில் அவர் மகிழ்ச்சியடைகிறார் என்று வேத இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கவியலாத ஒரே நபராக இருப்பினும், அவர் பல்வேறு ரூபங்களை ஏற்றுக் க...