Skip to main content

Posts

ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்

  ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பிரேமையின் உயர்நிலை 🍁🍁🍁🍁🍁🍁🍁 தமது அவதாரத்தின் இறுதி பதினெட்டு வருடங்களில் பகவான் சைதன்யர் புரியை விட்டு எங்கும் செல்லவில்லை. அச்சமயத்தில் கிருஷ்ணரின் பிரிவினால் எழக்கூடிய கசப்பும் இனிப்பும் கலந்த பரவசத்தில் மேன்மேலும் மூழ்கியபடி இருந்தார். பகலில் பல்வேறு செயல்கள் அவரது மனதை ஓரளவிற்கு திசை திருப்பும், ஆனால் இரவில் கிருஷ்ணரின் பிரிவு அவருக்கு சொல்லவியலா பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அத்துன்பம் கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு மதுராவிற்குச் சென்றதால் ராதாராணி அனுபவித்ததைப் போன்றதாகும். அக்காலக் கட்டத்தில், சில நேரங்களில் பகவான் வெளிப்புற உணர்வை வெளிப்படுத்தி, உலக நடைமுறைக்கு ஏற்ப மக்களிடம் பேசவும் பழகவும் செய்வார்; மற்ற நேரங்களில் பகலா இரவா என்பதைக்கூட அறியாமல் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பற்றி சற்றும் அறியாத அளவிற்கு கிருஷ்ணரின் நினைவில் மூழ்கியிருப்பார்; சில சமயங்களில் இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட உணர்வில் இருந்தார். ஸ்வரூப தாமோதரர், இராமானந்த ராயர், கோவிந்தர் ஆகிய மூவரும் அவரது நிலையான தோழர்கள். இரவில் இராமானந்த ராயர் அல்லது ஸ்...

ஹரிதாஸ தாகூரின் மறைவு

  ஹரிதாஸ தாகூரின் மறைவு 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒருமுறை மஹாபிரபுவின் சேவகரான கோவிந்தர் வழக்கம்போல ஜகந்நாதரின் பிரசாதத்தை ஹரிதாஸ தாகூருக்கு கொண்டு வந்தார். அப்போது, பார்ப்பதற்கு உடல் நிலை சரியில்லாத நிலையில், ஹரிதாஸர் மெதுவாக ஜபம் செய்தபடி படுத்திருப்பதைக் கண்டு, கோவிந்தர் வினவினார், “என்ன பிரச்சனை?” “என்னால் எனது ஜபத்தை நிறைவு செய்ய முடிவதில்லை,” என்று ஹரிதாஸர் பதிலளித்தார். பிரசாதத்தை அங்கு வைத்துவிட்டு, மஹாபிரபுவிடம் திரும்பிய கோவிந்தர், ஹரிதாஸரின் நிலையை அவருக்கு எடுத்துரைத்தார். மறுநாள் அங்கு வந்த பகவான் சைதன்யர் ஹரிதாஸரின் உடல்நலனை விசாரித்தபோது, “நான் ஜபிக்க வேண்டிய சுற்றுகளை நிறைவு செய்ய இயலவில்லை, இதுவே எனது நோய்,” என்று ஹரிதாஸர் மீண்டும் உரைத்தார். மஹாபிரபுவோ, “தற்போது உங்களுக்கு வயதாகிவிட்டது. மேலும், ஏற்கனவே பக்குவமடைந்த பக்தர் என்பதால், நீங்கள் இத்தனைச் சுற்றுகள் ஜபிக்க வேண்டிய தேவையில்லை,” என்று பதிலளித்தார். மறைவதற்கான விருப்பம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 “எம்பெருமானே, தயவுசெய்து எனது உண்மையான விருப்பத்தைக் கேளுங்கள். நீங்கள் இவ்வுலகில் நீண்ட காலம் தங்கப் போவதில்லை, நீங்களின்றி இங்கு வாழ்...

மஹாபிரபுவின் அற்புதமான கீர்த்தனங்கள்

    ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள வழங்கியவர்  :- பக்தி விகாஸ ஸ்வாமி வங்காள கவிஞரும் ஸ்வரூப தாமோதரரும் ஒருமுறை ஒரு வங்காள கவிஞர் பகவான் ஜகந்நாதரையும் பகவான் சைதன்யரையும் ஒப்பிட்டு நாடகம் ஒன்றை இயற்றியிருந்தார். அனைத்து பக்தர்களும் அதனைப் பாராட்டினர், மஹாபிரபுவும் அதனைக் கேட்க வேண்டுமென்று விரும்பினர். ஆனால் ஸ்வரூப தாமோதரரால் சோதிக்கப்படாமல் எதையும் கெளராங்கரிடம் காட்டக் கூடாது என்ற சட்டம் அங்கே வழக்கத்தில் இருந்தது; ஏனெனில், தூய பக்தித் தொண்டின் கொள்கையிலிருந்து துளியளவு விலகினாலும் கெளராங்கர் அதனை விரும்ப மாட்டார். வங்காள கவிஞருடைய நாடகத்தின் அறிமுக வரிகளைக் கேட்ட மாத்திரத்தில், அதிலிருந்த தவறான தத்துவக் கருத்துக்களை ஸ்வரூப தாமோதரர் கண்டுபிடித்தார். தூய கிருஷ்ண பக்தரிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்கும்படியும் சைதன்ய மஹாபிரபுவிடம் முழுமையாக சரணடையும்படியும் ஸ்வரூப தாமோதரர் அவருக்கு அறிவுறுத்தினார்; அதன் மூலமாக அவர் மஹாபிரபுவின் கருணையைப் பெற்று கிருஷ்ண உணர்வின் தத்துவத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள இயலும். அப்போது மட்டுமே கிருஷ்ண உணர்வின் இலக்கியங்களை எழுதுவதற்க...

பகவானாசாரியரும் மாயாவாதிகளின் தொடர்பும்

    ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள் வளங்கியவர் :- பக்தி விகாஸ ஸ்வாமி பகவானாசாரியரும் மாயாவாதிகளின் தொடர்பும் புரியில் வாழ்ந்த மஹாபிரபுவின் பக்தர்களில் ஒருவரான பகவானாசாரியர் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார். ஆனால் கண்டிப்புடன் திகழ்ந்த ஸ்வரூப தாமோதரர் தூய பக்தித் தொண்டின் கொள்கைகளுக்கு எதிரான எதையும் சகித்துக்கொள்ள மாட்டார், சில நேரங்களில் பகவானாசாரியரின் முடிவுகளை சந்தேகிப்பார். ஒருமுறை பகவானாசாரியரின் இளைய சகோதரனான கோபாலன் அவரைக் காண வந்தான். வாரணாசியில் படித்ததால் சங்கராசாரியரின் வியாக்கியானத்தின் அடிப்படையில் வேதாந்த சூத்திரத்திற்கு விளக்கமளிப்பதில் கோபாலன் நிபுணனாக இருந்தான். சங்கரரின் வியாக்கியானம் மிகச்சிறிய ஜீவாத்மாவை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுடன் அர்த்தமற்ற முறையில் சமப்படுத்த முயல்கின்றது. தனது சகோதரனின் மேலோட்டமான ஆன்மீக நிபுணத்துவத்தினால் கவரப்பட்ட பகவானாசாரியர் கோபாலனின் விளக்கங்களைக் கேட்பதற்கு ஸ்வரூப தாமோதரரை அழைத்தார். ஆனால் பகவானாசாரியர் தமது அறிவை இழந்துவிட்டார் என்று கோபத்துடன் உரைத்த ஸ்வரூப தாமோதரர், மாயாவாத வியாக்கியானங்களைக் கேட்ப...