ஆரம்பத்தில் ஒரே ஒரு வேதம் மட்டும் இருந்தது . அதைப் படிக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை . ஒரு முறை குருவிடம் கேட்ட மாத்திரமே புரிந்துகொள்ளக் கூடிய புத்தி கூர்மையும் நினைவாற்றலும் மக்களுக்கு இருந்தன . முழுக் கருத்தையும் நொடியில் புரிந்து கொள்வார்கள் . ஆனால் 5,000 ஆண்டுகட்கு முன்னர் , கலியுக மக்களின் வசதிக்காக வியாசதேவர் வேதங்களை எழுத்தில் வடித்தார் . நாளடைவில் மக்களின் வாழ்நாள் குன்றி , நினைவாற்றல் குறைந்து , புத்தி மழுங்கிப் போய் விடுமென்பதை அறிந்திருந்த வியாசர் வேத ஞானத்தை எழுத்தில் வடித்துவிடுவது நல்லதென்று எண்ணினார் . அவர் வேதங்களை நான்காகப் பிரித்தார் : ரிக் , சாம , யஜுர் , அதர்வ , பின்னர் இந்த வேதங்களைத் தனது பல்வேறு சீடர்களிடம் ஒப்படைத்தார் . பிறகு , புத்தியில் குறைந்தவர்களான ஸ்த்ரி , சூத்திரர் , த்விஜ - பந்து ஆகியோரைப் பற்றி எண்ணினார் . பெண்கள் , தொழிலாளிகளான சூத்திரர்கள் , உயர் குடியில் பிறந்தும் உரிய தகுதிகளைப் பெறாத த்விஜ - பந்துக்களையும் பற்றி அவர் எண்ணினார் . பிராமண குலத்தில் பிறந்தும் பிராமணர்...