Skip to main content

Posts

ஸ்ரீல பிரபுபாதர்

  ஸ்ரீல பிரபுபாதர் புலனின்பமே பிரதானம் ” என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.   தோற்றம் ஸ்ரீல பிரபுபாதர் என்று அனைவராலும் அழைக்கப்படும் தெய்வத்திரு. அபய சரணாரவிந்த பக்திவேதாந்த சுவாமி அவர்கள், 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் கல்கத்தாவில், கௌர் மோகன் தே மற்றும் ரஜனி என்போரின் நன்மகனாய் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர், அபய் சரண் தே. அவரின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர், வருங்காலத்தில் இக்குழந்தை கடல் கடந்து சென்று, மிகப்பெரிய ஆன்மீக குருவாகி, 108 கோவில்களை நிறுவுவார் என்று முன்னுரைத்தார்.   இளமைப்பருவம் அபயின் தந்தை அவருக்கு சிறுவயதிலிருந்தே பக்தி நெறிகளை ஊட்டி வளர்த்தார். ஸ்ர...

அணைவரையும் பாதுகாக்கும் பரம புருஷரான பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்

அணைவரையும் பாதுகாக்கும் பரம புருஷரான பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் ஜீவன்கள் எண்ணிலடங்காதவை. “அனந்த” என்றால் “எல்லையற்றவை” இந்த ஜீவன்கள் (உயிர்வாழிகள்) எல்லாம் பரமபுருஷனான பகவானால் பராமரிக்கப்படுகின்றன. சிறிய எறும்பு முதல் பெரிய யானை போன்ற 84,00,000 உயிரின வகைகள் பகவானால் பராமரிக்கப்படுகின்றன. நம்மை அவர் காப்பாற்றமாட்டாரா என்று நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? பகவானின் பக்தர்களாயிருந்து அவரது பாதகமலங்களில் சரணடைந்து அவருக்குத் தொண்டாற்றுவதற்காக மற்றெல்லாவற்றையும் துறந்திருப்பவர்கள் நிச்சயமாகக் கவனித்துக் கொள்ளப்படுவார்கள். எமது கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் 350க்கும் மேலான மையங்கள் உள்ளன; கிருஷ்ணர் அவற்றையெல்லாம் பராமரித்து வருகிறார். எமது பக்தித் தொண்டர்களில் எவரும் தனிப்பட்ட வருவாய்க்காக உழைக்கவில்லை, எனினும் அவர்கள் எல்லோரும் பராமரிக்கப்படுகிறார்கள். பகவத் கீதையில் கிருஷ்ணர் “நீ இதைச் செய், அதைச் செய், நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்” என்று சொல்லவில்லை. நம்மைப் பராமரிப்பது மட்டுமின்றி நமது பாவங்களின் விளைவுகளிலிருந்து நம்மைப் பாதுகாப்பதாகவும் அவர் கூறுகிறார். (ப.கீ. 18.66) இந்த உறுதிமொழிகளெல்லாம் தரப்...

தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணங்கள்

  தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் 🍁🍁🍁🍁🍁🍁🍁 தீபம் + ஒளி என்ற சொல்லின் கூட்டு சேர்க்கை தான் தீபவொளி. பின்னர் மருவி தீபாவளி ஆனது,  எனவே தீபம் என்றால் " வெளிச்சம் வருவதையோ, அல்லது வெளிச்சம் வெளிப்டபடுவதையோ குறிக்கிறது.  "தமஸோமா ஜோதிர்கமய" என்று வேத இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இருளில் இருக்காதே, வெளிச்சத்திற்கு வாருங்கள்', என்று அர்த்தம். இதன் உள் அர்த்தம் என்ன வென்றால்  'ஆன்மீக விழிப்புணர்வு  வரவேண்டும் என்பதே'. கலங்கப்பட்ட மனதை   பகவானின் திருநாமங்களாலும், அவரது அற்புதமான லீலைகளை கேட்பதாலும், அவருக்கு சுயநலம் இல்லாமல் தூய அன்பு தொண்டை புரிவதாலும்.ஆன்மீக விழிப்புணர்வு அடையாளம். திருவிழா மற்றும் பண்டிகை கொண்டாடங்களின் நோக்கம் அந்த நாளில் இறைவன் செய்த அற்புதமான லீலைகளை நினைவு கூர்ந்து அவரை வழிபடுவதாகும். இந்த திருவிழா மற்றும் கொண்டாட்டங்களின் உண்மையான அர்த்தங்களை புரிந்து கொள்ளாவிட்டால், அவை வெறும் பெயரளவில் சடங்குகளாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம். இந்த திருவிழா மற்றும் கொண்டாட்டங்களின் உண்மையான காரண காரியங்களை அறிந்து அதை ந...

ராதா குண்டம்

 

ராதா குண்டம்

 

ராதா குண்டம்

 

ராதா குண்டம்