Skip to main content

Posts

மனதின் கட்டளைகள்

  ப்ராருத்வ்யம் ஏனம் தத் அதப்ர - வீர்யம் உபேக்ஷயாத்யேதிதம் அப்ரமத்த குரோர் ஹரேஸ் சரணோபா ஸனாஸ்த்ரோ ஜஹி வ்யவீகம் ஸ்வயம் ஆத்ம - மோஷம் மொழிபெயர்ப்பு அடக்க முடியாத இந்த மனமே உயிர் வாழியின் ஆற்றல் மிகுந்த பகைவனாவான் . ஒருவன் இதனைப் புறக்கணித்தாலோ அல்லது இதற்குச் சந்தர்ப்பம் அளித்தாலோ , இது மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெறும் நிலையினை எய்துகிறது . உண்மையன்று என்ற போதிலும் இது மிகவும் வலிவுடையதாகும் . இது ஆத்மாவின் சட்டபூர்வ நிலையினை மறைத்திருக்கிறது . ஒ , மன்னனே ! ஆன்மீக குரு மற்றும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்வது என்னும் ஆயுதத்தினால் இம் மனத்தை மிகுந்த கவனமுடன் வெற்றி கொள்ள முயல்வாயாக . இதனைச் செய்வாயாக . பொருளுரை மனிதனை வெல்லவோ புறக்கணிக்கவோ ஒரே ஒரு எளிமையான கருவிதான் இருக்கிறது . மனம் எப்போதும் நம்மிடம் இதைச் செய் , அதைச் செய் என்று கூறிக்கொண்டிருக்கிறது . எனவே மனதின் கட்டளைகளுக்குப் பணியாதிருக்க நாம் மிக்க தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் . படிப்படியாக மனம் ஆ...

"ஆத்மா" பிறப்பற்றவனும், நித்தியமானவனும், என்றும் நிலைத்திருப்பவனும், மரணமற்றவனும், மிகப் பழமையானவனுமாவான்

ந ஜாயதே ம்ரியதே வா கதாசின் நாயம் பூத்வா பவிதா வா ந யூய : அஜோ நித்ய : சாஸ்வதோ ‘ யம் புராணோ ந ஹன்யதே ஹன்யமானே சரீரே “ ஆத்மாவிற்கு பிறப்போ , இறப்போ கிடையாது . ஒரு முறை இருந்து பிறகு அவன் இல்லாமற் போவதும் இல்லை . அவன் பிறப்பற்றவனும் , நித்தியமானவனும் , என்றும் நிலைத்திருப்பவனும் , மரணமற்றவனும் , மிகப் பழமையானவனுமாவான் . உடல் அழிக்கப்படும் பொழுது அவன் அழிவதில்லை .” பௌதிக உடலின் காரணத்தால் உண்டாகும் சேதத்திலிருந்தும் , மாற்றத்திலிருந்தும் விடுபட்டிருபூபதால் , ஜீவாத்மா நித்தியமானதாகும் . ஒரு மரமும் , அதன் பழங்களும் , மலர்களும் பற்றிய உதாரணம் மிகவும் எளிமையாகவும் , தெளிவாகவும் இருக்கிறது . ஒரு மரம் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கிறது . ஆனால் பருவங்களின் மாற்றத்தினால் அதன் பழங்களும் , மலர்களும் ஆறுவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன . இரசாயண சேர்க்கைகளினால் உயிரை உண்டாக்க முடியும் என்ற நவீன இரசாயண விஞ்ஞானிகளின் முட்டாள்தனமாக கொள்கையை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது . சினை முட்டை மற்றும் விந்து ஆகியவற்றின் கலப்படத்தினால் ஒர...