Skip to main content

Posts

பரமபுருஷரைத் துதிக்கும் முறையே கீர்த்தனம் எனப்படுகிறது,

  அஹம் ச காயம்ஸ் தத் - வித்வான் ஸ்த்ரீபி : பரிவ்ருதோ கத : ஞாத்வா விஸ்வ - ஸ்ருஜஸ் தன் மே ஹேலனம் சேபுர் ஓஜஸா யாஹி த்வம் சூத்ரதாம் ஆக நஷ்ட - ஸ்ரீ : க்ருத - ஹேலன : மொழிபெயர்ப்பு நாரதமுனிவர் தொடர்ந்து கூறினார் : அவ்விழாவிற்கு அழைக்கப்பட்டதால் நானும் அதில் கலந்து கொண்டேன் . நான் பெண்களால் சூழப்பட்டபடி தேவர்களின் பெருமைகளை வாத்தியத்துடன் பாட ஆரம்பித்தேன் . இதனால் பிரபஞ்ச விவகாரங்களின் பொறுப்பாளிகளான பிரஜபாதிகள் ( சக்தி வாய்ந்த தேவர்கள் ), “ நீ இக்குற்றத்தைப் புரிந்ததனால் , அழகை இழந்து உடனே ஒரு சூத்திரனாக ஆகக் கடவாய் ” என்ற சொற்களால் என்னைச் சபித்தனர் . பொருளுரை ஒருவன் பரமபுருஷரின் மகிமைகளையும் , அவரது புனித நாமத்தையும் பாட வேண்டும் ( ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ :) என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன . அதாவது , ஒருவன் பகவான் விஷ்ணுவைப் பற்றியும் , அவரது மகிமைகளைப் பற்றியும் பாட வேண்டும் , தேவர்களின் மகிமைகளை அல்ல . துரதிர்ஷ்டவசமாக சில முட்டாள்கள் தேவர்களின் பெயர்களைத் தொகுத்து கீர்த்தனமாகப் பாடும் முறையைக் கண்டு ...

ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தின் வலிமை

    நெருப்பானது , ஒன்றுமறியாத ஒரு குழந்தையால் கையாளப்பட்டாலோ அல்லது அதன் சக்திகளை நன்கறிந்த ஒருவனால் கையாளப்பட்டாலோ அது செயற்படவே செய்யும் . உதாரணமாக , காய்ந்த வைக்கோல் அல்லது புல் உள்ள ஒரு வயலில் , நெருப்பின் சக்தியை அறிந்த ஒரு முதியவர் தீ வைத்தாலோ அல்லது ஒன்று ம்  மறியாத ஒரு குழந்தை தீ வைத்தாலோ அது எரிந்து சாம்பலாகிவிடும் என்பது நிச்சயம் . அதுபோலவே , ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தின் வலிமையை ஒருவன் அறிந்தோ அல்லது அறியாமலோ இருக்கக் கூடும் . ஆனால் அப்புனித நாமத்தை ஒருவன் ஜபித்தால் , எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் அவன் விடுபடுவான் . ஒரு குறிப்பிட்ட மருந்தின் நல்ல பலனளிக்கும் சக்தியை அறியாத ஒருவன் , அந்த மருந்தை உட்கொண்டால் , அல்லது வலுக்கட்டாயமாக உட்கொள்ளச் செய்யப்பட்டால் கூட , அவனுக்குத் தெரியாமலேயே அது செயற்படுகிறது . ஏனெனில் , அதன் ஆற்றல் நோயாளிக்குத் தெரியுமா , தெரியாதா என்பதைப் பொறுத்ததல்ல . அதுபோலவே , பகவானின் புனித நாம ஜபத்தின் மகிமையை ஒருவன் அறிந்திருக்கவில்லை என்றாலும் , அறிந்தோ , அறிய...

ஸ்ரீ மாயாபுரைக் கண்டுபிடித்தல்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த மாயாபுர் அல்லது நவத்வீபம் எனப்படும் ஊரானது கிபி 1800ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது. மேலும், பகவான் சைதன்யரின் தத்துவங்களை முறையாக அறிந்தவர்கள் வெகு சிலரே இருந்தனர். அம்மாதிரியான நபர்களில் ஒருவர்தான் பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் தந்தையான ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆவார். ஸ்ரீல பக்திவினோத தாகூர் முறையான சீட பரம்பரையில் பகவான் சைதன்யரின் உபதேசங்களை ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜரிடமிருந்து பெற்றிருந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை உண்மையாகப் பின்பற்றுபவர் என்ற வகையில், ஸ்ரீல பக்திவினோத தாகூர் பகவான் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நவத்வீபம் என்ற பெயரில் அப்போது அறியப்பட்ட ஊர் சுமார் நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்பதை அறிந்து, ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆச்சரியம் அடைந்தார். ஏனெனில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த நவத்வீபம் நிச்சயம் மிகவும் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். எனவே, மஹாபிரபு அவதரித்த அன்றைய நவத்வீபமும் மக்கள் கூறும் நவத்வீபமும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்...

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...

  கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... ***********     5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள் நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.      5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!... 1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.   [பாகவத புராணம் 12.2.1] 2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும் மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அட...