சீமந்தத்வீபம் 🔆🔆🔆🔆🔆 “ஸத்ய-யுகத்தில் ஒருசமயம் சிவபெருமான், கௌராங்கரின் நாமத்தை உச்சரித்தபடி பயங்கரமாக நடனமாடத் தொடங்கினார். அவரிடம் பார்வதிதேவி வினவினாள். 'தயவுசெய்து கௌரங்கர் யார்? என்று எனக்குக் கூறுங்கள்; தங்களின் ஆச்சரியமான நடனத்தைக் கண்டும், கௌரங்கரின் நாமத்தைக் கேட்டும் எனது இதயம் உருகுகிறது. இதுவரை, இந்த மந்திர-தந்திரங்களின் வழியில் நான் கேட்டவை அனைத்தும் இவ்வுயிர்வாழிகளுக்கு இன்னும் நெருக்கமான பந்தத்திற்கே வழிகாட்டுகின்றன. அன்புள்ள பிரபுவே, கௌராங்கரைப் பற்றிய விஷயங்களைக் கூறுங்கள். அவரை வழிபடுவதின்மூலம் நான் உண்மையான வாழ்வை அடைய இயலுமா?' மஹாதேவன் கூறினார். “இராதையின் முழுமை பகுதியும், அனைத்து ஆற்றல்களும் சக்தியும் (ஆதி சக்தி) நீயேயாவாய், ஒரு ரகசியமான உண்மையை இப்போது உனக்குக் கூறுகிறேன். இராதாராணியின் மனோபாவத்தை ஏற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் மாயாப்பூரில் சச்சி தேவியின் கருவிலிருந்து கௌரங்க என்ற பெயர் கொண்டு பிறக்கவிருக்கிறார். நாம சங்கீர்த்தனம் அதாவது பகவானுடைய புனித நாமங்கள் ஜபம் செய்வதில் பகவான் கௌரங்கர் பித்துப் பிடித்தவனைப் போல காணப்படுவார். தகுதிய...