Skip to main content

Posts

மனிதர்கள் அறியாமையால் செய்யும் செயல்கள், அவனை பல்வேறு வகையான உடல்களை ஏற்றுக் கொள்ளும்படிக் கட்டாயப்படுத்துகின்றது

எல்லாப் பக்கங்களிலும் தன்னைச் சுற்றி ஆபத்து சூழ்ந்திருந்த போதிலும் அதனை அறியாது அம்மான் ஓர் அழகிய நந்தவனத்தில் புல்லை மேய்ந்த கொண்டிருந்தது . மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் குடும்பவாழ்க்கையின் நடுவில் தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தான் எண்ணிக் கொண்டிருக்கின்றனர் . ஒரு நந்தவனத்தில் தும்பிகளின் இனிய ஒசையினைக் கேட்டுக் கொண்டு வாழ்வது , குடும்பத்திற்கு எழில்சேர்க்கும் மனைவியுடன் ஒவ்வொருவரும் வாழ்வது போன்றதாகும . தும்பிகளின் இனிய இசை குழந்தைகளின் மழலைமொழியோடு ஒப்பிடக் கூடியது . மானைப் போன்ற மனிதன் தன் முன்னே காலம் என்னும் புவி தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதை அறியாமல் இல்லற வாழ்வில் மகிழ்ந்து கொண்டிருக்கிறான் . உயிர்ப்பொருள்கள் செய்யும் செயல்கள் மற்றொருவகையான ஆபத்தினை உருவாக்கி அவனைப் பல்வேறு வகையான உடல்களை ஏற்றுக் கொள்ளும்படிக் கட்டாயப்படுத்துகின்றது . பாலை வனத்தில் ஒன்றல்ல . சிற்றின்பத்திலும் மானுக்குத் தீராத மோகமுண்டு . இதன் முடிவு என்னவென்றால் மானைப் போல் வாழ்பவன் உரிய காலத்தில் கொல்லப்படுவான் . அதனா...

ஒருவனது முன்வினைப் பயனுக்கேற்ப அடுத்து அவனுக்கு எந்தவுடலைக் கொடுக்கலாம் என்பதை யமராஜனே தீர்மானிக்கிறார்

யமராஜனும் அவரது தூதர்களும் ஓர் உயிரினை நியாயத் தீர்ப்பிற்கு அழைத்துச் செல்லும் பொழுது , உயிர் , உயிர்க் காற்று , மற்றும் ஆசைகள் என்னும் அவனது துணைவர்களும் அவனுடன் செல்கின்றனர் . இது வேதங்களிலம் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது . ஓர் உயிர் எடுத்துச் செல்லப்படும் பொழுதோ அல்லது யமராஜனால் ( தம் உத்க்ராமந்தம் ) கைது செய்யப்படும்பொழுதோ உயிர்க்காற்றும் அவனுடன் சேர்ந்தே செல்கிறது ( ப்ராணோ ( அ ) னுத்க்ரமதி ). இவ்வாறு உயிர்க்காற்று செல்லும் பொழுது ( ப்ராணம் அனுத்க்ராமந்தம் ) அனைத்துப் புலன்களும் ( ஸர்வே ப்ராணா :) அதனுடன் சேர்ந்து செல்கின்றன . ( அனுத்க்ராமந்தி ). உயிரும் , உயிர்க் காற்றும் செல்லும் பொழுது நிலம் , நீர் , காற்று , நெருப்பு , வானம் என்னும் ஐம்பூதங்களினால் செய்யப்பட்ட விஷயம் புறக்கணிக்கப்ப்டடு , பின் தள்ளப்படுகிறது . பின்னர் அவன் யமராஜானின் நீதிஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான் . அங்கே அவன் எந்த உடலைப் பெறப்போகிறான் என்பதை யமராஜன் தீர்மானிக்கிறார் . இம்முறை நவீன விஞ்ஞானிகளுக்குத் தெரியாது . ஒவ்வொரு உயிரும் இம்மையில...

கணவனும் மனைவியும் எந்தவொரு சூழ்நிலையிலும் பிரிய கூடாது

  புன்-நாம்னோ நரகாத் யஸ்மாத் பிதரம் த்ராயதே ஸுத: தஸ்மாத் புத்ர இதி ப்ரோக்த: ஸ்வயம் ஏவ ஸ்வயம்புவா புத் என்ற நரகத்தில் தந்தை தண்டனை பெறுவதிலிருந்து மகன் அவரை விடுவிக்கிறான். இதனால் அவன் புத்திரன் என்று அழைக்கப்படுகிறான். இந்த நியதியின்படி, தாய்க்கும் தந்தைக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்படும் பொழுது, புத்திரனானவன் தன் தந்தையைத் தான் விடுதலை செய்கிறானேயொழிய தாயை அல்ல. இவ்வாறாக வேத இலக்கியத்தில் விவாகரத்து என்பதே கிடையாது. ஒரு மனைவி தன் கணவனிடம் எப்பொழுதும் விசுவாசமும், பதிபக்தியும் கொண்டிருக்கும்படி பயிற்சி அளிக்கப்படுகிறாள். ஏனெனில், எந்த ஒரு வெறுக்கத்தக்க பௌதிக சூழ்நிலையிலிருந்தும் விடுதலையடைய இது அவளுக்கு உதவியாக இருக்கும். புத்ரோ நயதி நரதேவ யம-க்ஷயாத் என்று இச்சுலோகம் தெளிவாகக் கூறுவது போல், “புத்திரன் யமராஜனின் காவலிலிருந்து தன் தந்தையைக் காப்பாற்றுகிறான்”. அது, புத்ரோ நயதி மாதரம், “புத்திரன் தன் தாயைக் காப்பாற்றுகிறான்” என்று ஒருபோதும் கூறவில்லை. வித்தளிக்கும் தந்தைதான் விடுவிக்கப்படுகிறார். கிடங்கின் அதிகாரியான தாய் அல்ல. ஆகவே கணவனும் மனைவியும் எந்த சூழ்நிலையிலும் பிரியக்கூ...

தாமேஸ்வர் மஹாபிரபு ஆலயம்

  தாமேஸ்வர் மஹாபிரபு ஆலயம் 🔆🔆🔆🔆🔆 இந்த ஆலயத்தில் இருக்கும் பகவான் சைதன்ய மஹாபிரபு விக்கிரஹத்தை பகவான் சைதன்ய மஹாபிரபுவின் மனைவியான ஸ்ரீமதி விஷ்ணுபிரியா, அவர் சந்நியாசம் ஏற்ற பிறகு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பகவான் சைதன்ய மஹாபிரபுவின் இந்த விக்கிரஹத்துடைய இரு கரங்களும் அன்புடன் பக்தர்களை ஏற்றுக்கொள்ளும் விதமாக நீட்டப்பட்டு இருக்கிறது. பகவான் சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்றுக் கொண்ட போது விஷ்ணுபிரியா பதினாறு வயது உடையவராக இருந்தார். இந்த ஜடவுலகில் இருந்து தொண்ணூற்றாறு வயதில் மறைந்தார். சுமார் எண்பது ஆண்டுகள் இந்த விக்ரஹத்தை அவர் வழிபட்டுள்ளார். இந்த ஆலயத்திலிருக்கும் மரக் காலணிகள் பகவான் சைதன்யர் அனிந்ததாக கூறப்படுகிறது. விஷ்ணுபிரியா தேவியின் மறைவிற்குப் பிறகு அவருடைய உறவினர் இந்த விக்கிரஹத்தை தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்றார். அச்சமயம் கங்கையின் கிழக்குப் பகுதியில் அவர் வாழ்ந்து வந்தார். கங்கையின் நீரால் அவருடைய இல்லம் அடித்து செல்லப்பட்டது. கங்கையின் மேற்கு பகுதியில் இருக்கும் குலியா கிராமத்திற்கு இடம் பெயர்ந்தார். குலியா கிராமம் என்பது தற்போது நவத்வீப நகரமாக அறியப்படுகிறது....

நரசிம்மபள்ளி அல்லது தேவபள்ளி

  நரசிம்மபள்ளி அல்லது தேவபள்ளி 🔆🔆🔆🔆🔆 ஸ்ரீ நவத்வீப தாம் மஹாத்மியத்தின் பரிக்கிரமா காண்டத்தில் தேவபள்ளி என்ற மிகவும் சக்திவாய்ந்த இடத்தை பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி மற்றும் ஸ்ரீவாச தாகூரருடன் சுவர்ண விஹாருக்கு சென்றபிறகு பகவான் நித்தியானந்தர் நரசிம்மபள்ளி என்னும் கிராமத்திற்கு முன்னேறிச் சென்றார். இந்த இடத்தை நரசிம்மபள்ளி என்றும்  தேவபள்ளி என்றும் அழைப்பார்கள்.  சத்ய யுக காலத்திலிருந்தே பகவான் நரசிம்மதேவருக்கென்று பிரத்தியேகமான ஒரு ஆலயம் இந்த கிராமத்தில் இருக்கிறது என்பதை பகவான் ஶ்ரீ நித்யானந்தர், விளக்கினார். தன்னுடைய பிரியமான பக்தனான பிரகலாதனின் மீது கொண்ட பெரும் கருணையால் , பிரஹலாதருக்கு அதிகமான தொல்லைகளைக் கொடுத்து வந்த அவனுடைய தந்தையான ஹிரண்யகசிபுவை பகவான் நரசிம்மர் வதம் செய்த பின்னர் இந்த இடத்திற்கு ஓய்வெடுக்க வருகிறார் என்பதை அறிந்த பிரம்மா உட்பட அனைத்து தேவர்களும் அந்த இடத்தில் தங்களுக்குத் தேவையான இல்லங்களை அமைத்து ஒரு கிராமத்தையே உருவாக்கினார். மந்தாகினி நதியில் கரையோரமாக இருக்கும் சிறு குன்றின் மீது தங்களுடைய இல்லங்களை அமைத்து பகவானின்...

கெளர பாகவதத்தை கேட்பதற்காக நைமிசாரண்யத்திற்கு பகவான் சிவன் வருதல்

கெளர பாகவதத்தை கேட்பதற்காக நைமிசாரண்யத்திற்கு பகவான் சிவன் வருதல் 🔆🔆🔆🔆🔆🔆 நவத்வீப-தாம-மஹாத்மியத்தின் பரிக்கிரமா காண்டத்தில் பகவான் நித்தியானந்தர் ஸ்ரீ ஜீவ கோஸ்வாமிக்கு கூறியது: மத்திய த்வீபத்தின் தென்திசையில் கோமதி நதி உள்ளது. இந்த நதியின் கரையோரமாக நைமிசாரண்யம் அமைந்துள்ளது. கலியுகத்தின் ஆதிக்கத்திலிருந்து ஜீவன்களை பாதுகாக்க சௌனக ரிஷி தலைமையிலான பலரும் சூத கோஸ்வாமியின் திருவாயிலிருந்து கெளர பாகவதத்தை கேட்பதற்காக அங்கே கூடியிருந்தனர்.  கார்த்திகை (தாமோதர) மாதத்தின் போது எவரொருவர் இங்கு அமர்ந்து புராணங்களை படிக்கிறாரோ அவர் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் விடுபட்டு கௌரங்கருக்கு சேவை செய்வதன் மூலம் வ்ரஜ தாமத்தை சுலபமாக அடைந்து விடும் வாய்ப்பை பெறலாம். ஒருமுறை நைமிசாரண்ய வனத்தில் கௌரங்கரின் புகழைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்து அதனைக் கேட்க வேண்டுமென்று பகவான் சிவன் விருப்பம் கொண்டார். தன்னுடைய வாகனமான காளையின் மீது அமர்ந்து கயிலாயத்திலிருந்து இந்த இடத்திற்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.குறிப்பிட்ட நேரத்தில் சென்று கௌர கதையை கேட்க தான் இன்னும் வேகமாகச் செல்ல வேண்...

சீமந்தத்வீபம்

  சீமந்தத்வீபம் 🔆🔆🔆🔆🔆 “ஸத்ய-யுகத்தில் ஒருசமயம் சிவபெருமான், கௌராங்கரின் நாமத்தை உச்சரித்தபடி பயங்கரமாக நடனமாடத் தொடங்கினார். அவரிடம் பார்வதிதேவி வினவினாள். 'தயவுசெய்து கௌரங்கர் யார்? என்று எனக்குக் கூறுங்கள்; தங்களின் ஆச்சரியமான நடனத்தைக் கண்டும், கௌரங்கரின் நாமத்தைக் கேட்டும் எனது இதயம் உருகுகிறது. இதுவரை, இந்த மந்திர-தந்திரங்களின் வழியில் நான் கேட்டவை அனைத்தும் இவ்வுயிர்வாழிகளுக்கு இன்னும் நெருக்கமான பந்தத்திற்கே வழிகாட்டுகின்றன. அன்புள்ள பிரபுவே, கௌராங்கரைப் பற்றிய விஷயங்களைக் கூறுங்கள். அவரை வழிபடுவதின்மூலம் நான் உண்மையான வாழ்வை அடைய இயலுமா?' மஹாதேவன் கூறினார். “இராதையின் முழுமை பகுதியும், அனைத்து ஆற்றல்களும் சக்தியும் (ஆதி சக்தி) நீயேயாவாய், ஒரு ரகசியமான உண்மையை இப்போது உனக்குக் கூறுகிறேன். இராதாராணியின்  மனோபாவத்தை ஏற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் மாயாப்பூரில் சச்சி தேவியின் கருவிலிருந்து கௌரங்க என்ற பெயர் கொண்டு பிறக்கவிருக்கிறார். நாம சங்கீர்த்தனம் அதாவது பகவானுடைய புனித நாமங்கள் ஜபம் செய்வதில் பகவான் கௌரங்கர் பித்துப் பிடித்தவனைப் போல காணப்படுவார். தகுதிய...