Skip to main content

Posts

இரன்யகசிபுவின் கேள்விகளுக்கு பிரகலாதனின் பதில்கள்

  இரண்யகசிபு  :- மூடனே பிரகலாதா, நான் கோபப்படும்பொழுது மூவுலகங்களும் அவற்றின் அதிபதிகளும் நடுங்குகின்றனர் என்பதை நீ அறிவாய். யாருடைய பலத்தினால் அயோக்கியனான நீ, பயமற்றவனாகி என் அதிகாரத்தையும் மீறும் அளவிற்கு இவ்வளவு புத்தியற்றவன் ஆனாய்? பிரகலாத மகாராஜன் கூறினார்:- அரசே, என்னுடைய பலத்திற்கு மூலம் எதுவோ, அதுவே தங்களுடைய பலத்திற்கும் மூலமாகும். உண்மையில், எல்லா வகையான பலத்திற்கும் ஆதிமூலம் ஒன்றுதான். அவரே எனக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கும், மற்றுமுள்ள எல்லா பலசாலிகளுக்கும் ஒரே பலமாக விளங்குகிறார். அவரன்றி எவராலும் எந்த சக்தியையும் பெற முடியாது. பிரம்மதேவர் உட்பட, அசைவன, அசையாதன. உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய அனைவருமே பரமபுருஷரின் பலத்தினால்தான் ஆளப்படுகின்றனர். எவர் பரம ஆளுனராகவும், கால சொரூபமாகவும் இருக்கிறாரோ, அந்த பரமபுருஷரே இந்திரிய சக்தியாவும், மனோபலமாகவும், சரீர பலமாகவும், புலன்களின் உயிர்ச்சக்தியாகவும் இருக்கிறார். அவருடைய செல்வாக்கு எல்லையற்றதாகும். அவரே அனைத்து ஜீவராசிகளிலும் மிகச் சிறந்தவரும், ஜட இயற்கையின் முக்குணங்களை ஆள்பவருமாவார். அவர் தமது சொந்த சக்திகளால் இப்பிரபஞ்ச த...

குழந்தை பிரகலாதருக்கு உயர்ந்த ஞானம் எவ்வாறு கிடைத்தது?

குழந்தை பிரகலாதருக்கு உயர்ந்த ஞானம் எவ்வாறு கிடைத்தது? 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 அசுரன் ஹிரண்யகசிபுவின் மகனாகப் பிறந்த பிரகலாதர் சிறு வயதிலேயே மாபெரும் ஞானத்துடன் திகழ்ந்தார். இஃது அனைவருக்கும் தெரிந்த கதை. அந்த ஞானம் பிரகலாதருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தெரியாத துணுக்கு. ஹிரண்யகசிபு தன் ராஜ்ஜியத்தை விட்டு, கடுந்தவம் புரிவதற்காக மந்தராசல மலைக்குச் சென்றான். அப்பொழுது அவனது மனைவியான கயாது கர்ப்பவதியாக இருந்தாள். அவள் இன்னுமோர் அசுரனைக் கருவில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்று எண்ணிய தேவர்கள் அவளைச் சிறைப்பிடித்தனர். குழந்தைப் பிறந்தவுடன் அதைக் கொன்று விட வேண்டும் என்பது அவர்களுடைய திட்டம். அவர்கள் கயாதுவை ஸ்வர்க லோகத்திற்குக் கொண்டுச் சென்றபொழுது, வழியில் அவர்களைத் தடுத்து நிறுத்திய நாரத முனிவர், கருவில் இருப்பது மாபெரும் பக்தர்,” என்று கூறி, ஹிரண்யகசிபு திரும்பி வரும்வரை அவளைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, அவளைத் தமது ஆஷ்ரமத்திற்கு அழைத்துச் சென்றார். ஆஷ்ரமத்தை அடைந்த கயாது, கர்ப்பத்திலுள்ள தன் குழந்தைக்குப் பாதுகாப்பளிக்கும்படி நாரதரிடம் வேண்டினாள், தன் கணவர் தவத்திலிருந்து திரும்பி வந்த பின...

பரம பக்தர்களுள் சிறந்த பிரகலாதர்

  பரமபுருஷராகிய நரசிம்மதேவர் எப்படி பிரகலாத மகாராஜனை மகிழ்வித்த பின் மறைந்தருளினார் என்பதைப் பற்றியும், சிவபெருமானால் அருளப்பட்ட ஒரு வரத்தைப் பற்றியும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பகவான் நரசிம்மதேவர் ஒன்றன்பின் ஒன்றாக பிரகலராத மகாராஜனுக்கு வரங்களை அருள விரும்பினார். ஆனால் அவற்றை ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடைகளாக எண்ணிய பிரகலாதர் அவற்றில் ஒன்றைக்கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, அவர் பகவானுடைய தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதியடைந்து, “பகவானுடைய தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதியடைந்து, “பகவானுடைய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள ஒருவன் சொந்த புலன் நுகர்வுக்காக பகவானிடம் பிரார்த்திப்பானாயின், அவனைத் தூய பக்தன் என்று அல்லது பக்தன் என்றுகூட அழைக்க முடியாது. கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள ஒரு வியாபாரியாகவே அவன் அழைக்கப்படுவான். அது போலவே, தன் சேவகனிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொண்ட பின் அவனை திருப்திப்படுத்த விரும்பும் எஜமானரும் உண்மையான எஜமானரல்ல” என்று கூறினார். எனவே பிரகலாதர் பகவானிடமிருந்து எதையும் யாசிக்கவில்லை. மாறாக, பகவான் தனக்கு வரமருள விரும்பினால், பௌதிக வரங்களுக்கு தான் மயங்கிவிடாத...

அட்சய திரிதியை

  அட்சய திரிதியை 🌼🌼🌼🌼🌼🌼🌼 🌾1. பரசுராமர் அவதரித்த திருநாள் 🌾2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த நாள் 🌾3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள். 🌾4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள், 🌾5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது. 🌾6. திரேதாயுகம் தொடங்கிய நாள் 🌾7. “கனகதரஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியரால் இன்று இயற்றப்பட்டது. 🌾8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது, 🌾9. அன்னபூரனிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது. 🌾10. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும். 🌾11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள் 🌾12. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு, வைசாக மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மேற்கு வங்கம் மாயாபூரில் பகவான் ஸ்ரீ ராதா மாதவர் , பகவான் ஶ்ரீ  நரசிம்ம தேவர், பகவான் ஶ்ரீ ஜெகந்தார்  பலதேவர் சுபத்ர தேவி விக்ரகங்களுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். 🌾13. இன்றிலிருந்து 21 நாட்கள...

வேணு கீதை

 

வேணு கீதை

 

வேணு கீதை