Skip to main content

Posts

புத்தி என்பது என்ன?

புத்தி என்பது, விஷயங்களை அதன் முறையான கண்ணோட்டத்தில் ஆராய்ந்து அறியும் சக்தியைக் குறிக்கும். ஞானம் (அறிவு) என்பது, ஜடம் என்றால் என்ன, ஆன்மா என்றால் என்ன, என்பதைப் புரிந்துகொள்வதைக் குறிக்கும். பல்கலைக்கழகத்தில் பெறப்படும் சாதாரண அறிவு, ஜடத்துடன் மட்டுமே தொடர்புடையதாக உள்ளது. அதனால் அஃது இங்கே ஞானமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஞானம் என்றால் ஜடத்திற்கும் ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாட்டை அறிவதாகும். நவீனக் கல்வி முறையில் ஆத்மாவைப் பற்றிய அறிவுஇல்லை, ஜடப் பொருள்களிலும் உடல் தேவைகளிலும் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். எனவே பல்கலைக்கழகத்தின் அறிவு முழுமையானது அல்ல. அஸம்மோஹ, ஐயம் மற்றும் மயக்கத்திலிருந்து விடுதலை, ஒருவன் சந்தேகங்களைத் தாண்டி திவ்யமான தத்துவத்தைப் புரிந்துகொள்ளும் போது இந்நிலை அடையப்படுகின்றது. மெதுவாக, ஆனால் நிச்சயமாக அவன் மயக்கத்திலிருந்து விடுபடுகிறான். எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. அனைத்தையும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். பகவத் கீதை உண்மையுருவில்10.4-5 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிரு...

பக்தர்களைக் காக்கும் பகவான்

பாண்டவர்கள் தங்களது மனைவியான திரெளபதியுடன் வனவாசத்தில் இருந்தபோது, துர்வாசரும் அவரது சீடர்களும் வனத்திற்குச் சென்று பாண்டவர்களை சந்தித்தனர். சத்திரியர்கள் என்ற முறையில் பாண்டவர்கள் பிராமணர்களை வரவேற்று உபசரிக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் துர்வாசரின் வருகைக்கு முன்னரே உணவருந்தி முடித்திருந்தனர் என்பதால், விருந்தினர்களுக்கு வழங்க அவர்களிடம் உணவு ஏதுமில்லை. குழப்பமடைந்த பாண்டவர்கள் உணவளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குள் ஸ்நானம் செய்து விட்டு வருமாறு அவர்களை கேட்டுக் கொண்டனர். பகவான் கிருஷ்ணர் தமது பக்தர்களை எப்போதும் காக்க வேண்டும் என சபதம் கொண்டுள்ளார். எனவே, பாண்டவர்கள் குழப்பத்திலிருந்தபோது கிருஷ்ணர் அங்கே சென்று, “என்ன பிரச்சனை?” என்று வினவினார். அவர்கள் நடந்ததை விளக்கினர். கிருஷ்ணர் திரௌபதி உணவருந்தி விட்டாளா என்பதை விசாரித்தார். அவளும் தான் உண்டு முடித்து விட்டதாகக் கூறினாள். [திரெளபதியிடம் ஒரு அட்சய பாத்திரம் இருந்தது: அவள் உணவருந்தாத வரை அந்த பாத்திரத்திலிருந்து எத்தனை விருந்தினர்கள் வந்தாலும், அவளால் உணவளிக்க முடியும்.] சமையலறையில் சிறிதளவேனும் உணவு உள்ளதா என கிருஷ்ண...

விஷ்ணு ரூபமே தியானத்தின் இறுதியான இலட்சியம்

  தத்ரைக்காவயவம் த்யாயேத் அவ்யுச்சினனேன சேதஸா மனோ நிர்விஷயம் யுக்த்வா தத : கிஞ்சன ந ஸ்மரேத் பதம் தத் பரமம் விஷ்ணோர் மனோ யத்ர ப்ரஸீததி மொழிபெயர்ப்பு அதன் பிறகு , விஷ்ணுவின் அங்கங்களின் மீது ஒவ்வொன்றாக , முழு உடலைப் பற்றிய கருத்திலிருந்து விலகி விடாமல் நீர் தியானிக்க வேண்டும் . இவ்வாறாக , அனைத்துப் புலன் பொருட்களிலிருந்தும் மனம் விடுபடுகிறது . வேறெதைப் பற்றியும் , நினைக்கக் கூடாது . பரம புருஷ பகவானாகிய விஷ்ணுவே பரம சத்தியமாக இருப்பதால் , அவரில் மட்டுமே மனதால் பூரணமாக ஒத்துப்போக முடியும் . பொருளுரை விஷ்ணுவின் புறச் சக்தியால் தடுமாற்றத்திற்கு உள்ளாகும் மூடர்கள் , இன்பத்தைத் தேடி அலைவதன் இறுதி இலட்சியம் முழு முதற்கடவுளாகிய ஸ்ரீ விஷ்ணுவுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதுதான் என்பதை அறிவதில்லை . விஷ்ணு - தத்துவம் எனப்படுவது முழுமுதற் கடவுளின் எண்ணிலடங்காத உன்னத உருவங்களின் விரிவங்கங்களாகும் . மேலும் விஷ்ணு - தத்துவத்தின் மூல உருவமாக இருப்பவர் எல்லாக் காரணங்களுக்கும் பரம காரணமான கோவிந்தன் அல்லது ஸ்ரீகிருஷ்...

நம்பிக்கை யற்ற அபக்தர்கள் தெளிவான இவ்விஷயத்திணைக் காண்பதில்லை.

  த்வொ பூத ஸர்கௌ லோகே 'ஸ்மின் தைவ ஆஸுர ஏவ ச விஷ்ணு பக்த ஸ்ம்ருதோ தைவ ஆஸுரஸ் தத் விபர்யய படைக்கப்பட்ட உலகில் இருதரப்பட்ட மனிதர்கள் உள்ளனர்:அசுர குணம் கொண்டவர்கள்.தேவ குணம் கொண்டவர்கள்.பகவான் விஷ்ணுவின் பக்தர்கள் தேவ குணம் கொண்டவர்கள் அதற்கு எதிர்நிலையில் இருப்பவர்கள் அசுரர்கள் எனப்படுகின்றனர். (ஶ்ரீ சைதன்ய சரிதாமிருதம் ஆதிலீலை 3.91) அஸுர ஸ்வபாவே கிரிஷ்ணே கபு நாஹி ஜானே லுகாஇதே நரே க்ரிஷ்ண பக்த ஜன ஸ்தானே அசுர சுபாவம் கொண்டவர்களால் கிருஷ்ணரை ஒருபோதும் அறிய முடியாது ஆனால் தமது தூய பக்தர்களிடமிருந்து கிருஷ்ணரால் தம்மை மறைத்துக்கொள்ளவும் முடியாது. (ஶ்ரீ சைதன்ய சரிதாமிருதம் ஆதிலீலை 3.90) தேகியா நா தேகே ஜத அபக்தேர கண உலூகே நாதேகே ஜேன ஸூர்ஜேர கிரண இருப்பினும், ஆந்தைகள் சூரியக் கதிர்களைப் பார்க்காமல் இருப்பதைப் போல நம்பிக்கை யற்ற அபக்தர்கள் தெளிவான இவ்விஷயத்திணைக் காண்பதில்லை. (ஶ்ரீ சைதன்ய சரிதாமிருதம் ஆதிலீலை 3.86) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற...

புண்ணியச் செயல்களை திருநாம கீர்த்தனத்துடன் ஒருபோதும் ஒப்பிட கூடாது.

  புண்ணியச் செயல்களை திருநாம கீர்த்தனத்துடன் ஒருபோதும் ஒப்பிட கூடாது. கோடி அஷ்வமேத ஏக க்ரிஷ்ண நாம ஸம ஜேஇ கஹ ஸே பாஷண்டீ தண்டே தாரே ஜம கோடி அஸ்வமேத யாகங்களை செய்வது கிருஷ்ணருடைய நாமத்தை ஒருமுறை உச்சரிப்பதற்கு சமமானது என்று யாரேனும் கூறினால், அவன் நிச்யமாக நாஸ்திகனாவான்,அவன் எமராஜரால் தண்டிக்கப்படப் போவது உறுதி வேத இலக்கியங்கள் கூறுவது யாதெனில். கோ கோடி தானம் க்ரஹணே ககஸ்ய ப்ரயாக கங்கோ தக கல்ப வாஸ: யஜ்ஞாயுதம் மேரு ஸுவர்ண தானம் கோவிந்த கீர்தேர் ந ஸமம்'ஷதாம்ஷை "ஒருவன் சூரிய கிரகணத்தின் போது ஒரு கோடி பசுக்களை தானமளித்தாலும்,பல கோடி ஆண்டுகள் கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில். வாழ்ந்தாலும் தங்க மலையிணை பிராமணர்களுக்கு தானமளித்தாலும் அவன் ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தால் அடையப்படும் பலனில் நூற்றில் ஒரு பங்குகூட அடைவதில்லை.. வேறுவிதமாக கூறினால் ஹரே கிருஷ்ண உச்சாடனத்தினை ஏதோவொரு புண்ணிய. செயலாக ஏற்பவன் நிச்சயமாக முற்றிலும் தவறாக வழிநடதப்பட்டுள்ளான். ஹரே கிருஷ்ண கீர்த்தனை என்பது நிச்சயமாக ஒரு புண்ணிய செயலே.ஆயினும் உண்மை என்னவென்றால் கிருஷ்ணரும் அவரது திருநாமும் தெய்வீகமானவையாக இருப்பத...