கீழ்கண்ட லீலைகள் ஶ்ரீ ராஜாபூர் ஜகந்நாதரின் கோயிலை இஸ்கான் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்ற பிறகு நடந்தது. பாழடைந்த நிலையில் இருந்த ராஜாபூர் ஜகந்நாதரின் கோவிலை நன்றாக பராமரிக்கவும் ஜகந்நாதரின் நித்திய பூஜைகள், நைவேத்தியம் போன்றவைகள் தடையின்றி நடைபெற ஜகந்நாதரின் கட்டளை பேரில் இஸ்கான் அமைப்பிற்கு கோவில் உரிமையாளர் தர தீர்மானித்தார். இஸ்கான் அமைப்பு பாதுக்காக்கும் பொறுப்பேற்ற சமயம் ராஜாபூர் கோவிலில் சமையல் செய்வதற்கு ஏற்ற இடவசதி இல்லாமல் இருந்ததாகையால், இஸ்கான் அமைப்பின் மற்றொரு கோவில்லான ஸ்ரீ மாயாபூர் ராதா மாதவரின் சந்த்ரோதய மந்திரில் அதிகமாக சமைத்து பின்னர், ஒரு பூஜாரி அதனை ஒரு உணவு பாத்திரத்தில் வைத்து கொண்டு மிதிவண்டியில் ஜகந்நாதர் கோயிலுக்கு எடுத்து வருவார். ஒரு நாள் நைவேத்தியத்திற்கான உணவு வகைகளை (ராஜ போக்) தயார் செய்த பிறகு, தான் துளசி இலையை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்தார். அப்போது ராஜாபூர் ஜகந்நாதரின் கோவில் மிகவும் பழையதாகவும் சிதைந்த நிலையில் இருந்தமையால். கதவுகளை சரியாக மூட முடியாது. அவர் யோசிக்க ஆரம்பிதார் "நான் சென்று துள...