Skip to main content

Posts

சாலபேகா

பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முகாலய மன்னருக்கு கீழ் படைத்தளபதி பொறுப்பு வகித்தவர் 'லால்பேகா'. இவர் ஜெகன்னாதரின் பக்தை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் தந்தைக்கும் சநாதன தர்மத்தை சார்ந்த ஜெகந்நாதரின் பக்தைக்கும் பிறந்தவர் தான் சாலபேகா. லால்பேகாவை போன்று, சாலபேகாவும் மிகச் சிறந்த போர் வீரராகத் திகழ்ந்தார். தன் தந்தைக்கு பின், சலபேகா போர் விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு சாதனைகள் பல படைத்தார். ஒருசமயம் நடந்த போரில், எதிரிகளின் கடுமையான தாக்குதல்களால் படுகாயம் அடைந்தார் சாலபேகா. எத்தனையோ மருந்துகள் அளித்தும் பயனளிக்கவில்லை. வேதனையால் மிகவும் துடித்தார் சாலபேகா. அப்போது அவரது தாயார், ஜெகன்னாதரை வழிபடுமாறு அறிவுரை கூறினார். தாயின் அறிவுரையை ஏற்ற சால பேகா, ஜெகன்னாதரின் திருநாமங்களை உச்சரித்து மனம் உருகி வழி பட்டார். ஆச்சர்யப்படத் தக்க வகையில் சாலபேகா அன்றிரவே, ஜெகன்னாதரின் அருளால் பூரண குணம் அடைந்தார். ஜெகன்னாதரை தரிசிக்க முதல் முயற்சி 🌷🌷🌷🌷🌷🌷 உடல் நலம் பெற்ற உடனேயே சாலபேகா, ஜெகன்னாதரை தரிசித்து நன்றி செலுத்த வேண்டும் என்று, ஜெகன்னாதர் கோயிலுக்கு விரைந்து சென்றார். ...

பணிவினால் பக்குவம் பெற்ற பிரதாபருத்ரர்

  அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் பொருளுரையிலிருந்து எடுக்கப்பட்டது.                                🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 சுமார் ஐந்நூறுவருடங்களுக்கு முன்பு பிரதாபருத்ரர் என்னும் மன்னர் ஒரிசா மாகாணத்தை ஆண்டு வந்தார். அவர் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பக்தர். ஜகந்நாத பூரியிலுள்ள ஸ்ரீ ஜகந்நாதரை அவர் வழிபட்டு வந்தார். பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரியிலே வசிப்பதைக் கேள்விப்பட்டு. அவரை தரிசிப்பதற்கு ஆவல் கொண்டார். ஆனால் கிருஷ்ணருக்கான தூய பக்தித் தொண்டை பிரச்சாரம் செய்வதற்காகத் துறவறம்மேற்கொண்டிருந்த ஸ்ரீசைதன்ய மஹாபிரபு. சந்நியாச வாழ்விற்கான அனைத்து விதிமுறைகளையும் தீவிரமாகப் பின்பற்றியதால், பெளதிக விஷயங்களில் ஈடுபட்டுள்ள மன்னர் பிரதாபருத்ரரைப் போன்றவர்களைச் சந்திப்பதை அவர் விரும்பவில்லை. பகவான் சைதன்யர் பண்டிதரான சர்வபௌம் பட்டாசாரியரின் இல்லத்தில் தங்கியிருப்பதை அறிந்த ம...

கிருஷ்ணரைக் காண்பதற்கான தகுதி

  பாகவத உபன்யாசகர் ஒருவர் தமது உபன்யாசத்தில், பகவான் கிருஷ்ணர் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு காட்டில் மாடுகளை மேய்க்கச் செல்வதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அந்த உபன்யாசத்தில் ஒரு திருடனும் இருந்தான். உபன்யாசத்தைக் கேட்ட அவன். 'நான் ஏன் விருந்தாவனக் காட்டிற்கு சென்று கிருஷ்ணரிடமுள்ள நகைகளைக் கொள்ளையடிக்கக் கூடாது?' என்று யோசிக்கலானான். அவன் இதைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தான். ''கிருஷ்ணரைக் கண்டு அவர் அணிந்திருக்கும் நகைகளைக் கொள்ளையடித்தால், ஒரே நாளில் நான் கோடீஸ்வரனாகி விடுவேன்" என்று தீவிரமாக சிந்திக்கலானான். கிருஷ்ணரைக் காண வேண்டும் என்ற உணர்வு திருடனிடம் இருந்தது. அதுவே அவனது தகுதி. அவனது அந்த ஆர்வமிகுதியுடன் விருந்தாவனத்திற்குச் செல்ல. அங்கே அவன் பகவான் கிருஷ்ணரை நேரில் கண்டான். பாகவத உபன்யாசகர் விவரித்த விதத்திலேயே அவன் கிருஷ்ணரைக் கண்டான். அப்போது, அவன் கிருஷ்ணருக்கு அருகில் சென்று. ''கிருஷ்ணா! நீ மிகவும் நல்ல பையன். செல்வந்த குடும்பத்தைச் சார்ந்தவன், நான் உனது நகைகளைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளட்டுமா?"  என்று  கூறினா...

பக்தவத்சலர் பிரபு ஜகந்நாதர்

கீழ்கண்ட லீலைகள்  ஶ்ரீ ராஜாபூர் ஜகந்நாதரின்  கோயிலை இஸ்கான் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்ற பிறகு நடந்தது. பாழடைந்த நிலையில் இருந்த ராஜாபூர் ஜகந்நாதரின் கோவிலை நன்றாக பராமரிக்கவும் ஜகந்நாதரின் நித்திய பூஜைகள், நைவேத்தியம் போன்றவைகள் தடையின்றி நடைபெற ஜகந்நாதரின் கட்டளை பேரில் இஸ்கான் அமைப்பிற்கு கோவில் உரிமையாளர் தர தீர்மானித்தார். இஸ்கான் அமைப்பு பாதுக்காக்கும் பொறுப்பேற்ற சமயம்  ராஜாபூர் கோவிலில் சமையல் செய்வதற்கு ஏற்ற இடவசதி இல்லாமல் இருந்ததாகையால், இஸ்கான் அமைப்பின் மற்றொரு கோவில்லான ஸ்ரீ மாயாபூர் ராதா மாதவரின் சந்த்ரோதய மந்திரில் அதிகமாக சமைத்து பின்னர்,  ஒரு பூஜாரி அதனை ஒரு உணவு பாத்திரத்தில் வைத்து கொண்டு மிதிவண்டியில் ஜகந்நாதர் கோயிலுக்கு எடுத்து வருவார். ஒரு நாள் நைவேத்தியத்திற்கான  உணவு வகைகளை (ராஜ போக்)   தயார் செய்த பிறகு, தான் துளசி இலையை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்தார்.  அப்போது ராஜாபூர் ஜகந்நாதரின் கோவில் மிகவும் பழையதாகவும்   சிதைந்த நிலையில் இருந்தமையால். கதவுகளை சரியாக மூட முடியாது. அவர் யோசிக்க ஆரம்பிதார் "நான் சென்று துள...

கடுகளவு ஆசையும் கடல் அளவு பேராசையாக மாற வெகு நேரம் ஆகாது.

  அரண்மனையில் பணிபுரியும் ஒரு சாதாரன சேவகர் எப்போதும் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்டான் அரசன். பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள், மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத நிம்மதி…! மகிழ்ச்சி…!இவனுக்கு இருப்பது எப்படி.? என அவனையே நேரில் விசாரித்தார் அரசர். மேன்மை தங்கிய மன்னரே…, நான் ஓர் ஏழைக் காவலன். எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு. மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை…, வயிறு நிரம்ப சிறிதளவு உணவு…, மானம் காக்க ஆடை …, இதற்கு என் வருமானம் போதுமானது. வேறு எந்த ஆசைகளையும் நான் வளர்த்து கொள்வதே இல்லை…, அதனால், நிம்மதியாக இருக்கிறேன்... என்று பணிவுடன் கூறினான் சேவகன்.. இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்ட மன்னர்..... வேண்டுமேயானால் அவனையும் நமது கவலைப் படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்..! என்று சிரித்தார் அமைச்சர். அதென்ன கவலைப்படுவோர் சங்கம்.? என்று வியப்புடன் கேட்டார் மன்னர். அரசே…! ஒரு பையை எடுத்து அதில் 99 தங்கக் காசுகளைப் போட்டுக் அந்த ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வ...

இரு ஜீவராசிகளுக்கிடையில் உண்டாகும் விரோதத்திற்குக் காரணம்.

 

நாம் ஏன் பிறந்தோம்?