Skip to main content

Posts

கருணை

அதிகாலை பொழுதில் இமயமலைப் பகுதியில் உள்ள பத்ரிகாஸ்ரமத்தில் சூரியன் உதிக்கும் நேரம். அவ்வேளையில் வியாச முனிவர் சரஸ்வதி நதியில் குளித்து தனது நித்யானுஷ்டானங்களை முறையாக செய்த பின்னர், தனியாக அமர்ந்து தியானம் செய்தார். முக்காலமும் அறிந்த மகாமுனியான அவர் ஞான திருஷ்டியில் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தையும் அவரால் பார்க்க முடிந்தது. அப்போது  துவாபர யுகத்தின் முடிவு காலம் .  வெகுவிரைவில் கலியுகம் நெருங்கிக் கொண்டிருப்பதையும், கலியுகத்தில் பிறக்கப்போகும் மக்களிடம் பல்வேறு குறைகளைக் கண்டார். மாமுனிவர் வியாசர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சத்யாவேஷ  அவதாரம். கலியுக மக்களுக்கு நன்மை செய்ய நினைத்த அவர் "கலியுகத்தின் மக்கள் பெரும்பாலும் அற்ப ஆயுளுள்ளவர்களாகவும், சண்டைப் பிரியர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், அதிர்ஷ்டமற்றவர்களாகவும், அனைத்திற்கும் மேலாக எப்பொழுதும் அமைதியற்றவர்களாகவும் உள்ளனர் என்பதை கண்ட அவர், மனிதகுலத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வுகள் மற்றும் நல்வழிகள் வேதங்களில் மட்டுமே சிறப்பாக உள்ளது, ஆதலால், வேதங்களின் அறிவை  மிகவும் எளிமையான வடிவத்தில் அ...

அலர்நாத் திருக்கோயில்

  அலர்நாதரின் வரலாறு  வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி பக்தி உணர்ச்சியை தூண்டக்கூடிய சின்னஞ்சிறிய இக்கோயில் ஆன்மீக ஏக்கத்தின் இருப்பிடமாகத் திகழ்கிறது. ஜகந்நாத் புரியில் வருடாந்திர ரத யாத்திரைக்கு முன்பாக பகவான் ஜகந்நாதர் இரண்டு வாரம் ஓய்வெடுக்கும் காலம் அனவஸர எனப்படும். அச்சமயத்தில் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அலர்நாத்தில் தங்கியிருப்பார். தனது அன்பிற்குரிய ஜகந்நாதரின் தரிசனமின்றி பகவான் சைதன்யரால் புரியில் தனிமையில் வசிக்க இயலாது. பகவானை பிரிந்த ஏக்கத்தால் எழும் உயர்ந்த ஆன்மீக உணர்ச்சிகளை அவர் அலர்நாத்தில் வெளிப்படுத்துவார். அலர்நாத் திருக்கோயில் புரிக்குப் பதினேழு கிலோ மீட்டர் மேற்கில், கடலுக்கு ஐந்து கிலோ மீட்டர் உட்புற நிலத்தில் அமைந்துள்ளது. . அலர்நாத் செல்வதற்கு பகவான் சைதன்யர் கடற்கரையின் ஓரமாக நடந்து செல்வார், ஆனால் இன்று பெரும்பாலான யாத்திரிகள் பேருந்தில் செல்கின்றனர். 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 பகவான் அலர்நாதர் நான்கு கரங்களுடைய மஹாவிஷ்ணுவாக வீற்றுள்ளார், அவரது வாகனமான கருடன் கைகூப்பி குனிந்து அவரது பாதத்தில் பிரார்த்தனை செய்கிறார், அவரது துணைவியர்களான ஸ்ரீதேவி...

நான்கு சம்பிரதாயங்கள் அடிப்படை விளக்கம்

  ஸம்ப்ரதாய விஹினா யே மந்த்ராஸ் தே நிஷ்ஃபலா: மத: அத: கலௌ பவிஷ்யந்தி சத்வார: ஸம்ப்ரதாயின:  ஸ்ரீ-ப்ரஹ்ம-ருத்ர-சனகா வைஷ்ணவா: க்ஷிதி-பாவனா: சத்வாரஸ் தே கலௌ பாவ்யா ஹி உத்கலே புருஷோத்தமாத்  ராமானுஜம் ஸ்ரீ: ஸ்வீ-சக்ரே மத்வாசார்ய சதுர்முக: ஸ்ரீவிஷ்ணு-ஸ்வாமினாம் ருத்ரோ நிம்பாதித்யம் சது:ஸன: குருசீடப் பரம்பரையில் இடம்பெறாத மந்திரங்கள் பலனை அளிக்காது. ஆகையால் நான்கு சீடப் பரம்பரையின் ஸ்தாபகர்களான  ஸ்ரீலக்ஷ்மி,  பிரம்மதேவர், ருத்திரர்  (சிவபெருமான் ), நான்கு குமாரர்கள் ஆகியோர் கலியுகத்தில் இவ்வுலகினைத் தூய்மைப்படுத்த புருஷோத்தம க்ஷேத்ரமான  உத்கலத்தில்(ஒரிஸா )தோன்றி லக்ஷ்மி ராமானுஜரையும் நான்கு முகம் கொண்ட பிரம்ம தேவர் மத்வாசாரியரையும் ருத்ரர் விஷ்ணுஸ்வாமியையும் நான்கு குமாரர்கள் நிம்பாதகத்யரையும் ஏற்றுக் கொள்வர்  (பத்ம புராணம் ) ருத்ர சம்பிரதாயம்:  💐💐💐💐💐💐💐💐💐💐💐 இது சிவபெருமானால் விஷ்ணு ஸ்வாமியை ஆச்சாரியராகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டதாகும். மிகச்சிறந்த வைஷ்ணவரான சிவபெருமான் எப்பொழுதும் ராம நாமத்தை ஜபம் செய்வதாகவும் அதுவே தனக்கு திருப்தியளிப்பதாக...

ஹேரா- பஞ்சமி

"ஜகந்நாதர் கோயிலிலிருந்து குண்டிசாவிற்குச் செல்லும் வீதியை ஒட்டியுள்ள தோட்டத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பல்வேறு லீலைகளை நிகழ்த்தினார். கிருஷ்ணதாஸர் எனும் பிராமணர் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரவிற்கு அபிஷேக நிகழ்ச்சியினை நடத்தினார்." "குண்டிசா கோயிலில் நடனமாடிய பின்னர், மஹாபிரபு தமது பக்தர்களுடன் நீரில் விளையாடினார், ஹேரா- பஞ்சமி தினத்தன்று அவர்கள் அனைவரும் செல்வத் திருமகளான லக்ஷ்மி தேவியின் செயல்களைக் கண்டனர்." - ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் 1.144-145 ஹேரா-பஞ்சமி உற்சவம் என்பது ரத  யாத்திரைக்கு ஐந்து நாள்களுக்குப் பின்னர் வருகிறது. பகவான் ஜகந்நாதர் தமது மனைவி லக்ஷ்மியினைக்  கைவிட்டு குண்டிசா கோயிலான விருந்தாவனத்திற்குச் சென்று விட்டார். பகவானின் பிரிவினால், லக்ஷ்மி தேவி அவரைக் காண்பதற்காக  குண்டிசாவிற்கு வர முடிவு செய்கிறாள். லக்ஷ்மி தேவி குண்டிசாவிற்கு வருவது ஹேரா-பஞ்சமி என்று  கொண்டாடப்படுகிறது. சில  நேரங்களில் இது ஹரா - பஞ்சமி  என்று அதிவாடீ, மக்களுக்கு மத்தியில் தவறாக உச்சரிக்கப்படுகிறது. ஹேரா என்னும் சொல் "பார்ப்பதற்கு" என்று பொருள்படுகிறது, இது பகவான் ஜகந்நாத...

சாலபேகா

பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முகாலய மன்னருக்கு கீழ் படைத்தளபதி பொறுப்பு வகித்தவர் 'லால்பேகா'. இவர் ஜெகன்னாதரின் பக்தை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் தந்தைக்கும் சநாதன தர்மத்தை சார்ந்த ஜெகந்நாதரின் பக்தைக்கும் பிறந்தவர் தான் சாலபேகா. லால்பேகாவை போன்று, சாலபேகாவும் மிகச் சிறந்த போர் வீரராகத் திகழ்ந்தார். தன் தந்தைக்கு பின், சலபேகா போர் விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு சாதனைகள் பல படைத்தார். ஒருசமயம் நடந்த போரில், எதிரிகளின் கடுமையான தாக்குதல்களால் படுகாயம் அடைந்தார் சாலபேகா. எத்தனையோ மருந்துகள் அளித்தும் பயனளிக்கவில்லை. வேதனையால் மிகவும் துடித்தார் சாலபேகா. அப்போது அவரது தாயார், ஜெகன்னாதரை வழிபடுமாறு அறிவுரை கூறினார். தாயின் அறிவுரையை ஏற்ற சால பேகா, ஜெகன்னாதரின் திருநாமங்களை உச்சரித்து மனம் உருகி வழி பட்டார். ஆச்சர்யப்படத் தக்க வகையில் சாலபேகா அன்றிரவே, ஜெகன்னாதரின் அருளால் பூரண குணம் அடைந்தார். ஜெகன்னாதரை தரிசிக்க முதல் முயற்சி 🌷🌷🌷🌷🌷🌷 உடல் நலம் பெற்ற உடனேயே சாலபேகா, ஜெகன்னாதரை தரிசித்து நன்றி செலுத்த வேண்டும் என்று, ஜெகன்னாதர் கோயிலுக்கு விரைந்து சென்றார். ...

பணிவினால் பக்குவம் பெற்ற பிரதாபருத்ரர்

  அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் பொருளுரையிலிருந்து எடுக்கப்பட்டது.                                🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 சுமார் ஐந்நூறுவருடங்களுக்கு முன்பு பிரதாபருத்ரர் என்னும் மன்னர் ஒரிசா மாகாணத்தை ஆண்டு வந்தார். அவர் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பக்தர். ஜகந்நாத பூரியிலுள்ள ஸ்ரீ ஜகந்நாதரை அவர் வழிபட்டு வந்தார். பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரியிலே வசிப்பதைக் கேள்விப்பட்டு. அவரை தரிசிப்பதற்கு ஆவல் கொண்டார். ஆனால் கிருஷ்ணருக்கான தூய பக்தித் தொண்டை பிரச்சாரம் செய்வதற்காகத் துறவறம்மேற்கொண்டிருந்த ஸ்ரீசைதன்ய மஹாபிரபு. சந்நியாச வாழ்விற்கான அனைத்து விதிமுறைகளையும் தீவிரமாகப் பின்பற்றியதால், பெளதிக விஷயங்களில் ஈடுபட்டுள்ள மன்னர் பிரதாபருத்ரரைப் போன்றவர்களைச் சந்திப்பதை அவர் விரும்பவில்லை. பகவான் சைதன்யர் பண்டிதரான சர்வபௌம் பட்டாசாரியரின் இல்லத்தில் தங்கியிருப்பதை அறிந்த ம...