முன்பொரு சமயம் , சரஸ்வதி நதிக்கரையில் அநேக ரிஷிகள் சேர்ந்து ஒரு ஸ்ரயாகம் செய்தார்கள் . அப்பொழுது பிரம்மா , விஷ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளுள் யார் சிறந்தவர் என்ற விவாதம் எழுந்தது . இவ்விஷயத்தை அறிந்து வருவதற்காக அவர்கள் பிருகு முனிவரை அனுப்பி வைத்தனர் . பொறுமை என்பது உயர்வைக் குறிக்கும் நிச்சயமான ஓர் அறிகுறி என்பதால் , அதைக் கொண்டே மும்மூர்த்திகளையும் சோதிப்பதென அவர் முடிவு செய்தார் . முதலில் அவர் தம் தந்தையான பிரம்மதேவரின் சபைக்குச் சென்று அவரை வணங்காமலிருந்தார் . இதனால் பிரம்மா அதிக கோபமடைந்தார் . ஆனால் பிருகு தன் புத்திரன் என்பதால் தன் கோபத்தை அவர் தனித்துக் கொண்டார் . அடுத்து பிருகு , தன் தமையனான சிவபெருமானிடம் சென்றார் . அவரும் தம் தம்பியை தழுவிக் கொள்ள அவரது ஆசனத்திலிருந்து எழுந்தார் . ஆனால் நீ ஆசாரத்திலிருந்து நழுவியவன் என்று கூறி , அவரது ஆலிங்கனத்தை பிருகு ஏற்க மறுத்துவிட்டார் . இதனால் கோபங்கொண்ட சிவன் தன் கணவரைத் தடுத்து அவரை சமாதானப்படுத்தினாள் . பிறகு பிருகுமுனி பகவான் நாராயணரை ...