Skip to main content

Posts

பாவக்ராஹீ ஜனார்தனர் (தூய பக்தர் ஸ்ரீ நரசிம்மானந்த பிரம்மசாரி)

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குச் செல்ல உள்ளார் என்பதை ஸ்ரீ நரசிம்மானந்த பிரம்மசாரி கேள்விப்பட்டபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியுற்று தமது மனதினால் அந்தப் பாதையினை அலங்கரிக்கத் தொடங்கினார். (ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.155 ) முதலில் நரசிம்மானந்த பிரம்மசாரி குலியா நகரத்திலிருந்து தொடங்கும் ஓர் அகலமான சாலையினை தியானித்தார். அவர் அச்சாலையினை இரத்தினங்களால் அலங்கரித்து, அதன்மீது காம்பு இல்லாத மலர்களின் படுக்கையை விரித்தார்.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.156) அவர் தமது மனதாலேயே சாலையின் இரு புறங்களையும் மலர்கள் மிகுந்த மகிழ மரங்களினால் அலங்கரித்தார், இடையிடையே இரு புறங்களிலும் தெய்வீகத் தன்மையைக் கொண்ட ஏரிகளை வைத்தார்.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.157 ) அந்த ஏரிகளின் படித்துறைகள் இரத்தினங்களால் கட்டப்பட்டிருந்தன, ஏரிகளோ மலர்ந்த தாமரை மலர்களால் நிரம்பியிருந்தன. அங்கே பலவிதமான பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன, அங்கிருந்த நீரானது அமிர்தம் போன்று இருந்தது.(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் /மத்திய லீலை 1.158 ) சாலை முழுவதும் குளிர்ந்த இளங்காற்று நிறைந்திருந்தது, அத...

பக்தித்தொண்டு மற்றும் தொண்டாற்றுபவர்களின் மனோநிலை

பக்தித்தொண்டு மற்றும் தொண்டாற்றுபவர்களின் மனோநிலை பகவத் சேவையின் பொருட்டு அனைவரும் நட்புறவுடன் வாழவேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களின் பகவத் சேவையை புகழ வேண்டுமேயன்றி தன்னுடைய சொந்த சேவையில் கர்வம் கொள்ளக்கூடாது. இதுதான் ஒரு வைஷ்ணவர் சிந்திக்கும் முறையாகும். இதுவே வைகுண்ட சிந்தனையுமாகும் தொண்டு செய்வதில் தொண்டர்களுக்கு இடையே போட்டிகள் இருக்கக்கூடும். ஆனால் வைகுண்ட லோகங்களில் மற்றொரு தொண்டனின் சேவை பாராட்டப்படுகிறதே ஒழிய தூஷிக்கப்படுவதில்லை. இது வைகுண்ட போட்டியாகும். தொண்டர்களுக்கிடையில் பகை என்ற கேள்விக்கே இடமில்லை. ஒவ்வொருவனும் அவனது திறமைக்கேற்ப பகவத் தொண்டு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். வைகுண்டத்திலுள்ள செயல்முறைகள் இப்படித்தான் இருக்கும். ஒவ்வொருவரும் ஒரு தொண்டனே என்பதால் ஒவ்வொருவரும் ஒரே படித்தரத்தில் தான் இருக்கின்றனர். மேலும் ஒவ்வொருவனும் அவனது திறமைக்கேற்ப பகவானுக்குத் தொண்டு செய்ய அனுமதிக்கப்படுகிறான். பகவத்கீதை (15.15 ) இதை பின்வருமாறு உறுதி செய்கிறது : _ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ மத்த ஸ்ம்ருமிதிர் ஞானம் அபோஹனம் ச :_ பகவான் ஒவ்வொருவருடைய இதயத்திலும் இருந்துகொண்டு தொண்ட...

வஸுதேவ-ஸத்வம்

  மனம் சத்வ குணத்துக்குச் சொந்தமானதாக இருப்பதால் அது தேவமயம், அல்லது தெய்வீகமானது என்றழைக்கப்படுகிறது. தான் பகவானின் நித்தியத் தொண்டன் எனும் திடமான நம்பிக்கையில் ஒருவன் நிலை பெற்றிருக்கும் பொழுது பரிபூரண மனத்தூய்மை சாத்தியமாகிறது. எனவே சாதாரண நற்குணத்தைப் பெற்றிருப்பதும் பௌதிகமானதே ஆகும். பௌதிக நற்குணம் என்ற இந்நிலையைக் கடந்து, தூய நற்குணம் அல்லது வஸுதேக-ஸத்வம் என்ற நிலையை ஒருவன் அடைய வேண்டும். பகவானின் இராஜ்யத்திற்குள் நுழைவதற்கு இந்த வஸுதேவ-ஸத்வம் உதவுகிறது. ஶ்ரீமத் பாகவதம்  2.2.30 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். சுத்த   பக்தி   வாட்ஸப்   க்ரூப்   சுத்த   பக்தி   டெலிகிராம்   க்ரூப்   உத்வேக   கதைகள் டெலிகிராம் க்ரூப்   https://www.suddhabhaktitamil.com

தூய அன்பு

 

பகவானின் விஷேச பாசம்

 

எளிதாகவும், விரைவாகவும், கிருஷ்ணரின் இராஜ்யத்திற்குத் திரும்பிச் செல்லும் வழி

 

பகவான் ஏன் ஒரு மனிதனைப் போல் பிறவி எடுப்பவராக காணப்பட்டுகிறார்

  பகவான் ஏன் ஒரு பௌதிக உருவினால் மூடப்பட்டவராக , அல்லது ஒரு மனிதனைப் போல் பிறவி எடுப்பவராக காணப்பட்டுகிறார் என்பதற்கு , அக்ரூரர் இங்கு இரு காரணங்களைக் குறிப்பிடுகிறார் . முதல் காரணம் , பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் லீலைகளை நிகழ்த்தும்பொழுது , அவரிடம் அன்புபூண்ட பக்தர்கள் அவரைத் தங்களது அன்புக் குழந்தையாகவோ அல்லது நண்பராகவோ அல்லது காதலராகவோ அல்லது வேறுமாதிரியாவோ நினைக்கின்றனர் . இந்த அன்புப் பரிமாற்றத்தின் பரவசத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை அவர்கள் கடவுளாக நினைப்பதில்லை . உதாரணமாக , கிருஷ்ணரிடமுள்ள அசாதாரணமான அன்பின் காரணத்தால் வனத்தில் அவருக்குத் தீங்கு ஏற்பட்டு விடும் என்று தாய் யாசோதை கவலைப்படுகிறாள் . அவள் இவ்வாறு உணர வேண்டுமென்பது பகவானின் விருப்பமாகும் . இது இங்கு நிகாம : எனும் சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது . பகவான் பௌதிகமானவராக காணப்படக் கூடும் என்பதற்கான இரண்டாவது காரணம் , அவி வேக : எனும் சொல்லால் சுட்டிக் காட்டப்படுகிறது : அறியாமையின் காரணத்தால் , பரமபுருஷரின் நிலையை ஒருவன் தவறாக புரிந்து கொள் ளக்கூடும் . ப...