Skip to main content

Posts

குழப்பத்திலிருந்து தெளிவு

சரஸ்வதி நதியின் கரையோரத்திலுள்ள தனியிடத்தில் அமர்ந்த வியாஸ தேவர் மிக ஆழ்ந்து யோசிக்கலானார். பின் அவர் தனக்குள்ளேயே  கூறிக்கொண்டார்... "நான் என்னுடைய ஆன்மீகக் கடமைகளை முறையாகப் பின்பற்றி வருகிறேன். பக்குவமான முறைகளில் வேதங்களையும், ஆன்மீக குருவையும் வணங்கி வருகிறேன். வேதத்தை நான்காகப் பிரித்துள்ளேன், எளிய மக்களும் புரிந்து பயன் பெறும் விதமாக மஹாபாரதத்தையும் எழுதியுள்ளேன். எனினும் என் மனம் முழுமையை உணரவில்லையே?"  "ஏன் என்னுடைய இதயம் திருப்தியை உணரவில்லை?..  இவ்வாறு நேர்மையான அவரது சுய பரிசோதனை மூலமாக ஸ்ரீல வியாஸ தேவர் தன்னுடைய அதிருப்திக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முனைந்தார். அவர் நினைத்தார், " பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத லீலைகள் மற்றும் பக்தி அதாவது  பகவான் கிருஷ்ணருக்குச் செய்யும் அன்புத் தொண்டு, அதுவே அனைத்து உயிர்வாழிகளின் இயல்பான நிலை. அத்தகைய தூய பக்திப்பாதையே தூய பக்தர்களையும் , பகவானையும் திருப்திப்படுத்தும்." இவையெல்லாம் என்னுடைய சரிதங்களில் போதுமான அளவு நான் விவரிக்கவில்லை.. ஒருவேளை அதுதான காரணமாக இருக்குமோ? ஸ்ரீல வியாஸ தேவர் இவ்வாறு எண்ணிக்கொண்டிருக...

பக்தி தொண்டின் மகிமை

  பகவானுக்குச் செய்யும் திவ்யமான தொண்டு பௌதிகமானதல்ல . பக்தனின் தொண்டு செய்யும் மனப்பான்மை படிப்படியாக வளர்ச்சியடைகிறதே தவிர , ஒருபோதும தளர்ச்சியடைவதில்லை . பொதுவாக முதுமையடைந்த ஒருவர் பௌதிக சேவையிலிருந்து ஒய்வுபெற அனுமதிக்கப்படுகிறார் . ஆனால் உன்னதமான பகவத் தொண்டில் ஒய்வு பெறுவதற்கு சிறிதும் இடமில்லை மாறாக , வயது முதிர முதிர தொண்டு செய்யும் மனப்பானமை அதிகரித்துக் கொண்டே போகிறது . பகவானின் உன்னதமான தொண்டில் சலிப்பே ஏற்படுவதில்லை என்பதால் , அதில் ஒய்வுபெறுவதற்கும் இடமில்லை . தேகத்தால் பௌதிக சேவை செய்து களைப்படைந்த ஒரு மனிதன் , ஒய்வு பெற அனுமதிக்கப்படுகிறான் . ஆனால் உன்னத தொண்டில் களைப்பே ஏள்படுவதில்லை . ஏனெனில் அது ஆன்மீகத் தொண்டாகும் , உடல் மட்டத்தில் உள்ளதல்ல . உடல் மட்டத்திலுள்ள செயல் வயது முதிர்ச்சியினால் படிப்படியாக நலிவடைந்துவிடுகிறது . ஆனால் ஆத்மா முதுமையடைவதேயில்லை என்பதால் , ஆன்மீகப் படித்தரத்திலுள்ள சேவைகள் களைப்பை ஏற்படுத்துவதில்லை . உத்தவர் வயது முதிர்ந்தவராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை . ஆன...

ஶ்ரீமதி ராதாராணியின் மகத்துவம்

  தேவீ க்ருஷ்ண-மயீ ப்ரோக்தா ராதிகா பர-தேவதா ஸர்வ-லக்ஷ்மீ-மயீ ஸர்வ- காந்தி: ஸம்மோஹினீ பரா “திவ்ய தேவதையான ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடி மறுபாகமாவாள், எல்லா லக்ஷ்மி-கணங்களுக்கும் அவளே மையமாவாள்.   எல்லாரையும் வசீகரிக்கும் முழுமுதற் கடவுளை வசீகரிப்பதற்குத் தேவையான எல்லா வசீகரமும் பொருந்தியவள். அவளே பகவானின் அந்தரங்க சக்திகளில் உயர்ந்தவளாவாள்." (பிருஹத்-கௌதமீய-தந்த்ர) “ராதா கிருஷ்ண தத்துவம் முக்தி பெற்ற நபர்களால் அறியப்பட வேண்டியதாகும், கட்டுண்ட ஆத்மாக்களால் அல்ல. நாம் முக்தர்களாக மாறும் அந்த நிலைக்காக காத்திருப்போம். அப்போது நம்மால் ராதா-க்ருஷ்ண-ப்ரணய விக்ருதிர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், ராதையும் கிருஷ்ணரும் பௌதிகத் தளத்தைச் சார்ந்தவர்கள் அல்ல... கிருஷ்ணரை சாதாரண ஆண் என்றோ, ராதையை சாதாரண பெண் என்றோ நாம் கருதக் கூடாது.   அவர்களே பரம பூரண உண்மை. ஆனால் அந்த பூரண உண்மையில், ஆனந்த சக்தி உள்ளது, அது ராதா-கிருஷ்ணரின் லீலைகளில் வெளிப்படுகிறது." 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ...

மதன தாஹன் அல்லது ராதாராணியின் அழகில் மயங்கியவர்

அதிகரித்துக் கொண்டே போகும் பகவானின் அழகினை வர்ணிக்கப் போதுமான வார்த்தைகள் கிடையாது. பகவானின் உலக மற்றும் ஆன்மீகப் படைப்புக்களிலேயே எழில் நலம் மிக்கவள் அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமியே ஆவாள்; தான் மிக்க அழகுடையவர் என்னும் உணர்வு அவளிடம் இருக்கிறது, இருந்தும் பகவான் முன்னால் அவளது அழகு தோற்கடிக்கப்பட்டது. அதாவது பகவானின் முன்னர் இலட்சுமி தேவியின் அழகு இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது என்று கூறலாம். வைணவக் கவிஞர்களின் வார்த்தைகளின்படி கண்ணைக் கவரும் பகவானின் அழுது ஆயிரம் மன்மதன்களைத் தோற்கடிக்கக் கூடியதாகும். ஆதலினாலேயே அவர் மதன மோஹனன் என்றழைக்கப்படுகிறார். மேலும் பகவான் கூட சில நேரங்களில் ராதா ராணியின் அழகில் மயங்குகிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கவிஞர்கள், அச்சூழ்நிலைகளின் கீழ் பகவான் மதன மோஹனனாக இருந்த போதிலும் கூட அவர் மதன தாஹன் அல்லது ராதாராணியின் அழகில் மயங்கியவர் என்று விளக்குகின்றனர். உண்மையில் பகவானின் எழிலானது மேன்மை மிக்கதாகும். அது வைகுண்ட லோகத்திலுள்ள இலட்சுமி தேவியின் எழிலையும் வெல்லக் கூடியதாகும். வைகுண்ட லோகத்திலுள்ள பகவானின் பக்தர்கள் பகவானை அழகில் சிறந்தவராகக் காண ...