Skip to main content

Posts

பகவானைக் காண்பதற்கு செயற்கையான வழிகள் எதுவும் கிடையாது. அது முற்றிலும் பகவானின் அகாரணமான கருணையையே சார்ந்ததாகும்.

  பகவானைக் காண்பதற்கு செயற்கையான வழிகள் எதுவும் கிடையாது . அது முற்றிலும் பகவானின் அகாரணமான கருணையையே சார்ந்ததாகும் . நாம் விரும்பியபோதெல்லாம் சூரியனை உதிக்கும்படி நாம் உத்தரவிட முடியாது . அதைப் போலவே , பகவானை நம்முன் தோன்றும்படி நாம் உத்தரவிட முடியாது . சூரியன் அதன் முறைப்படி உதயமாகிறது ; அதுபோலவேதான் பகவானும் அவரது தனிப்பெரும் கருணையினால் காட்சியளிக்க ஒப்புக் கொள்கிறார் . எனவே ஒருவர் பகவானின் பக்தித் தொண்டில் தனக்கென நியமிக்கப்பட்டுள்ள கடமையைச் செய்துகொண்டு , அத்தகைய நல்ல தருணத்திற்காகக் காத்திருக்க வேண்டும் .. பகவான் ஒருவருக்கும் கடமைப்பட்டவரல்ல . அவரை கலப்பற்ற தூய பக்தியினால் சுலபமாகக் கட்டிவிட முடியும் . ஆனால் பௌதிக புலன்களால் அவரைக் கண்டறிய முடியாது . ஒருவர் பக்தித் தொண்டில் உண்மையான முயற்சியை மேற்கொண்டு , பகவானின் கருணையை முழுமையாக நம்பியிருக்கும்பொழுது , அதனால் திருப்தியடையும் பகவான் தம்மை காட்டிக்கொடுக்க விரும்புவாரானால் , அப்போது அவரை நம்மால் காணமுடியும் . ஶ்ரீமத் பாகவதம் 1 .6.19 / பொருளுரை 🍁🍁🍁🍁?...

சித்ரா சகி (தோழி)

  ஸ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழிகளில் இவரும் ஒருவர். பிருந்தாவனத்தின் ராணியான ஸ்ரீராதைக்கு சகி (தோழி), ப்ரிய-சகி (அன்புத் தோழி), பரமப்ரேஸ்ட/வரிஷ்ட சகி (நெருங்கிய), ப்ராண சகி (உயிர்த்தோழி) மற்றும் நித்திய சகி (பிரியா தோழி) என்று 5 வகையான சகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. உஜ்வல நீலமணி (4.50) ராதாராணியை விட இவர் 26 நாட்கள் பெரியவர். குங்குமம் போன்ற சிவப்பு நிறத்தை உடையவர். ஸ்படிக நிற ஆடைகளை விரும்பி அணிகிறார். கவிதைகள் மற்றும் சாஸ்திரங்களில் உள்ள சூக்ஷ்மமான அர்த்தங்களை புரிந்துகொள்வதில் இவர் மிகவும் சாமர்த்தியம் உள்ளவர். மிகவும் சாந்த குணம் கொண்டவர். சமையற் கலையில் நல்ல அனுபவம் மிக்கவர். பலவிதமான அமுத பானங்களை தயாரித்து திவ்ய ஜோடிகளுக்கு பரிமாறுவார். மேலும் பதார்த்தங்களை கண்ணால் கண்ட மாத்திரத்தில், அதன் மூலப்பொருட்களையும் தரத்தையும் கூறிவிடுவார். கிராம்பு மற்றும் மலர் மாலைகளைக் கொண்டு வரும் சேவையில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார். தன் தந்தையைப் போலவே வானியல், ஜோதிடம் மற்றும் தோட்டக் கலை ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தவர். காதலரின் சண்டையில் சமரசம் செய்வதில் திறமையானவர். பக...

எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் தன்னை ஒருவன் விடுவித்துக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த முறை

  யத் - கீர்தனம் யத் - ஸ்மரணம் யத் - ஈக்ஷணம் யத் - வந்தனம் யச் - ச்ரவணம் யத் - அர்ஹணம் லோகஸ்ய ஸத்யோ விதுனோதி கல்மஷம் தஸ்மை ஸுபத்ர - ஸ்ரவஸே நமோ நம : மொழிபெயர்ப்பு சர்வ மங்களம் பொருந்திய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய பெருமைகள் , நினைவுகள் , அவரது தரிசனம் , பிரார்த்தனைகள் , அவரைப் பற்றி கேட்ட மற்றும் அவரது வழிபாடு ஆகியவை சாதகனின் பாவ விளைவுகளை எல்லாம் உடனே தூய்மை செய்துவிடக் கூடியவையாகும் . அவருக்கு எனது வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன் . பொருளுரை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் தன்னை ஒருவன் விடுவித்துக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த முறை மிகப் பெரிய அதிகாரியான ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது . நினைவில் கொள்ளுதல் , ஆலயத்திற்குச் சென்று விக்கிரகத்தை தரிசித்தல் , பகவான் முன்னிலையில் பிரார்த்தனைகள் செய்தல் , மற்றும் பகவானின் புகழ் பாடப்படுவதைக் கேட்டல் ஆகியவற்றை ஸ்ரீமத் பாகவதத்திலும் , பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளவாறு , கீர்த்தனமாகவும் வேறு முறைகளிலும் நிறைவேற்ற முடியும் . இன்னிசைகளுடன...