பத்ப்யாம் பகவதோ ஜக்ஞே சுஸ்ரூஷா தர்ம - ஸித்தயே தஸ்யாம் ஜாத : புரா சூத்ரோ யத் - வ்ருத்யா துஷ்யதே ஹரி : மொழிபெயர்ப்பு அதன்பிறகு , வர்ணாஸ்ரம கடமைகளைப் பாதுகாப்பதற்காக , பரமபுருஷரின் கால்களிலிருந்து சேவை தோன்றியது , பகவானின் கால்களில் உள்ள சூத்திரர்கள் அவரைச் சேவையினால் திருப்திப்படுத்துகின்றனர் . பொருளுரை சேவை செய்வதுதான் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்மையான தொழிலாகும் . ஜீவராசிகள் பகவானுக்குச் சேவை செய்ய வேண்டியவர்களாவர் . இத்தகைய சேவை மனப்பான்மையினால் அவர்களால் சமயப் பூரணத்துவம் பெற முடியும் . அனுபவமற்ற அறிவை அடையும் பொருட்டு கற்பனையில் ஈடுபடுவதால் பூரணத்துவத்தை அடைய முடியாது . ஞானிகளின் பிரிவைச் சேர்ந்த ஆன்மீகிகள் ஆத்மாவையும் , ஜடத்தையும் பிரித்தறிவதில் மட்டுமே தொடர்ந்து தங்களுடைய கற்பனையைச் செலுத்துகின்றனர் . ஆனால் அறிவினால் முக்தி பெற்ற பிறகு ஆத்மாவின் செயல்கள் என்ன என்பதைப் பற்றிய அறிவு அவர்களுக்குக் கிடையாது . விஷயங்களை உள்ளபடி அறிய மனக்கற்பனையில் மட்டும் ஈடுபடுபவர்களும் , பகவானின் உன்னத அன்புத்தொண...