Skip to main content

Posts

பௌதீக நன்மை பெறுவதற்காக பந்தப்பட்ட ஆத்மா போலி சாமியார்களையும், யோகிகளையும், துறவிகளையும் மலிவான ஆசிகளைப் பெற அணுகுகிறான்

  ஆன்மீக உணர்விற்குத் தங்கள் சொந்த வழிகளை உருவாக்கும் ஏமாற்றுக்காரர்கள் எப்போதும் இருக்கின்றனர் . சில பௌதீக நன்மை பெறுவதற்காக பந்தப்பட்ட ஆத்மா இதுபோன்ற போலி சாமியார்களையும் , யோகிகளையும் , துறவிகளையும் மலிவான ஆசிகளைப் பெற அணுகுகிறான் . ஆனால் அவன் ஆன்மீகமான அல்லது பௌதீகமான எந்தவொரு நன்மையும் அவர்களிடமிருந்து பெறுவதில்லை . இக்காலத்தில் மந்திர , தந்திரங்கள் செய்யும் ஏராளமான ஏமாற்றுக்காரர்கள் இருக்கின்றனர் . தங்கள் அடியவர்களை ஆச்சரியத்தில் ஆழ்ந்த அவர்கள் தங்கத்தை கூட உண்டாக்கிக் காட்டுகின்றனர் . அவர்கள் அடியவர்களும் அவர்களை கடவுள் என்று நம்புகின்றனர் . கலியுகத்தில் இதுபோன்ற ஏமாற்று முதன்மையாக இருக்கின்றது . அதனால்தான் விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர உண்மையான குரு யார் என்று பின்வருமாறு விளக்குகிறார் . ஸம்ஸார - தாவாவை - வீட - லோக த்ராணாய காருண்ய - கனாகனத்வம் ப்ராப்தஸ்ய கல்யாண - குணார்ணவஸ்ய வந்தே குரோ : ஸ்ரீ - சரணாரவிந்தம் பௌதீக உலகில் எரியும் நெருப்பான வாழ்க்கைப் போராட்டத்தினை அணைக்கக் கூடிய குருவை ஒருவன் அணுக...

மானிடப் பிறப்பு தன்னுணர்வு பெறுவதற்குச் சிறந்த வாய்ப்பிளைக் கொடுக்கிறது

  மானிடப் பிறப்பு   தன்னுணர்வு பெறுவதற்குச் சிறந்த வாய்ப்பிளைக் கொடுக்கிறது . ஒருவன் தேவலோகத்தில் தேவனாகப் பிறக்கலாம் . ஆயினும் வசதிகள் ஏராளமாக அங்கே இருக்கின்ற காரணத்தினால் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து ஒருவனால் விடுதலை பெற முடியாது . இப்பூலோகத்தில் கூட வசதி மிக்கவன் பொதுவாக கிருஷ்ண உணர்வினை மேற்கொள்வதில்லை . உலகப் பிடியிலிருந்து விடுதலை பெறுவதில் உண்மையான விருப்பமுடைய புத்திமான் தூய பக்தர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் . அத்தொடர்பினால் ஒருவன் பொருள் , பொன் என்னும் உலகக் கவர்ச்சியிலிருந்து படிப்படியாக விடுதலை பெற முடியும் . உலகப் பற்றின் அடிப்படை விதிகளாக இருப்பது , பணமும் , பெண்களுமே ஆவர் . ஸ்ரீ சைதன்ய மகா பிரபு அதனால்தான் வீடு பேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைய வேண்டுமென்று உண்மையில் விரும்புவோர் இறை உலகில் நுழைவதற்கானத் தகுதியைப் பெற பணம் மற்றும் பெண்களைத் துறக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார் . பணமும் பெண்களும் பகவானின் தொண்டிற்கே முற்றிலும் பயன்படுத்தப்பட வேண்டும் . இவ்வாறு பயன்படுத்துபவன் உலக...