Skip to main content

Posts

எல்லாம் நன்மைக்கே

  ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் "எல்லாம் நன்மைக்கே!" என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்து விட்டது. இரத்தம் வெளியேறி வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான். வழக்கம் போல் அமைச்சர், "அரசே! எல்லாம் நன்மைக்கே!" என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், "நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்வதா?, காவலர்களே அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடைத்து விடுங்கள்" என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை அரசனின் உத்தரவுப்படி சிறையில் கொண்டு போய் அடைத்து வைத்தனர். அப்போதும் அமைச்சர், "எல்லாம் நன்மைக்கே!" என்றார். நாட்கள் பல கடந்தன. வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான். அங்கு வந்த கோவில் பூசாரி பலி கொடுப்பதற்...

கணவன் ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவராக இருப்பாரானால், ஆன்மீக உலகினுள் பிரவேசிக்கும் வாய்ப்பு பெண்ணுக்கும் தானாகவே கிடைக்கிறது.

  ஸ்த்ரியோ வைஸ்யாஸ் ததா சூத்ராஸ் தே ‘பி யாந்தி பராம் கதிம் என்று பகவத்கீதை (9.32) குறிப்பிடுகிறது. ஆன்மீக கொள்கைகளைப் பின்பற்றுவதில் பெண்கள் அவ்வளவு சக்தியுடையவர்களாக கருதப்படுவதில்லை. ஆனால் போதிய அதிர்ஷ்டசாலியான ஒரு பெண் ஆன்மீக முன்னேற்றம் அடைந்துள்ள ஒரு கணவனைப் பெற்று, அவரது சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பாளாயின், கணவன் அடையும் அதே நன்மையை அவளும் அடைகிறாள். சபரி முனிவரின் செல்வாக்கினால் அவரது மனைவிகளும் ஆன்மீக உலகிற்குள் பிரவேசித்தனர் என்று இங்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் தகுதியற்றவர்களாக இருந்தும், தங்கள் கணவரை விசுவாசத்துடன் பின்பற்றியதால், அவர்களாலும் அவருடன் ஆன்மீக உலகினுள் பிரவேசிக்க முடிந்தது. இவ்வாறாக ஒரு பெண் தன் கணவனுக்கு விசுவாசத்துடன் சேவை செய்பவளாக இருக்க வேண்டும். கணவன் ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவராக இருப்பாரானால், ஆன்மீக உலகினுள் பிரவேசிக்கும் வாய்ப்பு பெண்ணுக்கும் தானாகவே கிடைக்கிறது. ( ஸ்ரீமத் - பாகவதம்   9 .6 .55 ) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே...

கிருஷ்ண உணர்வு நிலைத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாததற்கு காரணம் என்ன?

  பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யத் திட்டமிடும் மனிதர்கள் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ளத்தகுதி இல்லாதவர்கள் . பகவானுக்குரிய உன்னத அன்புத் தொண்டாகிய ஆட்சியில் நுழைய முடியாது . மேலும் , உள்நோக்கத்துடன் மிகவும் செயற்கையாக ஆன்மீக குருவிற்கு அடங்கி நடக்கும் மாணவர்கள் என்போர் உள்ளனர் . அவர்களால் கிருஷ்ண உணர்வு நிலை அல்லது பக்தித் தொண்டைப் புரிந்துகொள்ளவும் முடியாது . மத நம்பிக்கையின் மற்றொரு உட்பிரிவால் துவக்கப்பட்டு . பரம புருஷ பகவானை அணுகுவதற்குப் பொது மேடையாக பக்தித் தொண்டைக் கொள்ளாதவர்களும் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள முடியாது . சில மாணவர்கள் நம்முடன் சேர்வதற்கு வருகின்றனர் எனும் அனுபவம் நமக்கு உண்டு , ஆனால் சில குறிப்பிட்ட வகையான நம்பிக்கையில் ஒரு புறச் சாய்வாக இருப்பதால் அவர்கள் நமது பாசறையை விட்டுச் சென்று , பாலைவனத்தில் விடப்படுகிறார்கள் . உண்மையில் , கிருஷ்ண உணர்வு நிலை ஒரு கிளைப்பிரிவினரின் மத நம்பிக்கை இல்லை ; அது பகவானையும் அவருடனான நமது உறவையும் புரிந்து கொள்வதற்கான கற...

பக்தர்கள் சங்கத்தின்-முக்கியத்துவம்

  பதம் 25 ஸதாம் ப்ரஸங்கான் மம வீர்ய ஸம்விதோ பவந்தி ஹ்ருத் கர்ணரஸாயனா : கதா : தஜ் ஜோஷணாத் ஆஸூ அபவர்க வர்த்மனி ச்ரத்தாரதிர்பக்திர் அனுக்ரமிஷ்யதி மொழிபெயர்ப்பு தூய பக்தர்களின் தொடர்பில் , பரம புருஷ பகவானின் செயல்கள் மற்றும் லீலைகள் பற்றிக் கலந்துரையாடுவது காதுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் தருவதாகும் . அந்த அறிவு பதியவைக்கப்படுவதால் ஒருவர் படிப்படியாக முக்திக்கான வழியில் முன்னேறுகிறார் , அதன் பின்னர் , அவர் விடுதலையடைகிறார் , அவர் கவனம் நிலைபெறுகிறது . பின்னர் உண்மை பக்தியும் பக்தித் தொண்டும் தொடங்குகின்றன . பொருளுரை கிருஷ்ண உணர்விலும் பக்தித் தொண்டிலும் முன்னேறுவதன் முறை இங்கு வர்ணிக்கப்படுகிறது . முதல் கருத்து என்னவென்றால் ஒருவர் கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள் மற்றும் பக்தித் தொண்டில் ஈடுபடுபவர்களின் தொடர்பை விரும்புதல் வேண்டும் . அம்மாதிரித் தொடர்பு இன்றி ஒருவர் முன்னேற்றம் அடைய இயலாது என்பதாகும் . புத்தக அறிவு அல்லது படிப்பு இவற்றால் மட்டும் ஒருவர் போற்றத்தக்க வகையில் முன்னேற்றம்...