Skip to main content

Posts

பக்தி - முக்தியை விடச் சிறந்தது

  பக்தி - முக்தியை விடச் சிறந்தது முக்திக்கான தனி முயற்சி தேவையில்லை: ஒரு பக்தர் முக்தி அல்லது விடுதலையை அடையத் தனியாகப் பெருமுயற்சி செய்ய வேண்டியதில்லை. அவர் பரம புருஷ பகவானுக்குச் செய்யும் பக்தித் தொண்டே தானாகவே முக்தியை அடைவதற்கான வழியாகிறது. வயிற்றில் உள்ள நெருப்பு உதாரணம்: ஜீரணிக்கும் சக்தி போதுமான அளவு இருந்தால், நாம் உண்ணும் எதுவும் ஜீரணமாகிவிடும். அதுபோல, உண்மையான பக்தி இருந்தால், விடுதலை தானாகவே கைகூடும். ஸ்ரீ பில்வமங்கள தாகூரின் கூற்று: பக்தியுடன் பகவானின் தாமரைப் பாதங்களை வழிபடும்போது, முக்தி அல்லது விடுதலை, ஒரு பணியாளராக வந்து பக்தருக்குத் தொண்டு புரியும் என்று அவர் கூறுகிறார். முக்தி பக்தரின் பணிக்குக் காத்திருக்கிறது. புலன் கட்டுப்பாடு (யோக சித்தி): மாயாவாதிகள் முக்தி அடையக் கடுமையான தவம் மேற்கொள்கின்றனர். பக்தர்கள், ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரிப்பதன் மூலமும், பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமும் தங்கள் நாவைக் கட்டுப்படுத்துகிறார்கள். சுவையுணர்வு கட்டுப்படுத்தப்பட்டவுடன், பிற எல்லாப் புலன்களும் இயல்பாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன. ...

பக்தியால் முக்தி பெற்ற மான் : ஒரு தெய்வீகக் கதை

  பக்தியால் முக்தி பெற்ற மான்: ஒரு தெய்வீகக் கதை 🌟 ஒரு காலத்தில், புன்ய நதிக்கரை அருகே, தெய்வீகமான வனமொன்று அமைந்திருந்தது. அங்கே, மிகவும் சாந்த குணமுடைய ஒரு மான் வாழ்ந்து வந்தது. இந்த மான் மற்ற சாதாரண மான்களைப் போல இல்லாமல், அருகிலிருந்த முனிவர்களின் ஆசிரமத்தின் ஆன்மீகச் சூழலால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்தது. பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் மீது பக்தி தினமும் அதிகாலையில், முனிவர்கள் பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் திருநாமங்களையும் வேத மந்திரங்களையும் ஓதுவதை மான் மிகுந்த கவனத்துடன் கேட்கும். அந்தத் தெய்வீக ஒலிகளின் பலனாக நாளடைவில் விஷ்ணுவின் நாமத்தின் மீது மாபெரும் ஈர்ப்பு ஈர்ப்பு  ஏற்பட்டது, அது மெல்ல மெல்ல வளர்ந்தது. பகவான் ஶ்ரீமன் நாராயணனின் ரூபங்களும் லீலைகளும் அதன் மனதிற்குள் ஆழமாகப் பதிந்தன. மானின் அமைதியான மற்றும் சாந்தமான நடத்தையைக் கண்ட முனிவர்கள், அதனை அங்கேயே, பாதுகாப்பாக இருக்க அனுமதித்தனர். அருகில் இருந்த ஆலயத்தின் மணியோசை கேட்கும் போதும், தீபாராதனை காட்டப்படும் போதும், அந்த மான் மிகுந்த மரியாதையுடன் தலை வணங்கியது. அது மற்ற விலங்குகளைப் போல் பிரசாதத்திற்காக ஒருபோதும் ஆவலுடன் நிற்கவ...

யஜ்ஞார்தாத் கர்மணோ (அ)ன்யத்ர வோகோ அரயம் கர்ம - பந்தன; முழுமுதற் கடவுளுக்குத் திருப்தியளிப்பதற்காகவே நாம் செயல் செய்ய வேண்டும்.

  ஒரு வேள்விச் சடங்கானது முழுமுதற் கடவுளை மகிழ்விப்பதற்கென்றே செய்யப்படுகிறது. ஸ்ரீமத் - பாகவதம் முதல்காண்டம் இரண்டாம் அத்தியாயம் ஒவ்வொருவரும் தமது செயலினால் முழுமுதற் கடவுள் திருப்தியுற்றிருக்கிறாரா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அதாவது நமது செயலின் நோக்கம் முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்கானதாகவே இருத்தல் வேண்டும். எவ்வாறு ஒரு பணியாளன் தன் அலுவலகத்தில் தனது முதலாளி அல்லது உயர் அதிகாரி திருப்தியடைந்திருக்கிறாரா என்று கவனிப்பதைத் தன் கடமையாகக் கொண்டிருக்கிறானோ அதுபோல் முழுமுதற் கடவுள் தனது செயலினால் திருப்தியுற்றிருக்கிறாரா என்று பார்ப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்கான செயல்கள் எவையென்று வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அச்செயல்களின் நிறைவேற்றமே வேள்வி அல்லது யக்ஞம் என்றழைக்கப்படுகிறது. வேறொரு முறையில் முழுமுதற் கடவுளின் சார்பாகச் செயல்படுவதே வேள்வியாகும் என்றும் கூறலாம். வேள்வியினைத் தவிர வேறெச் செயலும் உலகப் பிடிப்பிற்குக் காரணமாகும் என்பதை ஒருவன் மிக நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். பகவத்கீதையிலும் (3.9) ...

கல்லாலான ஒரு படகு

  தேஷாம் குபத - தேஷ்ட்ரூணாம் பததாம் தமஸி ஹி அத: யே ஸ்ரத்தத்யுர் வசஸ் வை மஜ்ஜந்தி அஸ்ம-ப்லவா இவ மொழிபெயர்ப்பு (முந்திய சுலோகத்தில் விவரிக்கப்பட்டதுபோல்) அறியாமையில் விழுந்துவிட்டவர்களும், மக்களை அழிவுப் பாதையில் தவறாக வழிநடத்திச் செல்பவர்களுமான தலைவர்களும், குருட்டுத்தனமாக அவர்களைப் பின்பற்றுபவர்களும், உண்மையில் கல்லினால் செய்யப்பட்ட ஒரு படகில் ஏறிக் கொள்பவர்களைப் போன்றவர்களாவர். கல்லாலான ஒரு படகு மிதக்க முடியாமல் அதிலுள்ள பயணிகளுடன் நீரில் மூழ்கிவிடும். அதுபோலவே, மக்களைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்வோரும் நரகத்திற்கே செல்வார்கள். பொருளுரை ஸ்ரீமத் பாகவதம் (11.20.17) பின்வருமாறு குறிப்பிடுகிறது: ந்ரு-தேஹம் ஆத்யம் ஸுலபம் ஸுதுர்லபம் ப்லவம் ஸுகல்பம் குரு-கர்ண-தாரம் பந்தப்பட்ட ஆத்மாக்களாகிய நாம் அறியாமை எனும் கடலில் விழுந்துவிட்டோம். ஆயினும் ஒரு சிறந்த படகைப் போன்றுள்ள இந்த மனித உடலானது, அறியாமை எனும் இக்கடலைக் கடப்பதற்குச் சிறந்த வாய்ப்பை அளிக்கிறது, கப்பல் தலைவனைப்போல் செயற்படும் ஓர் ஆன்மீக குருவினால் வழிநடத்தப்படு...

துளசி இலையின் மகிமை: பக்தியால் பகவான் அடையப்படும் வழி

பக்தி மார்க்கத்தின் ஆழமான உண்மை என்னவென்றால் — பகவானை அடையப் பெரும் யாகங்கள், பெரும் தானங்கள் தேவையில்லை; ஒரு துளசி இலையும் ஒரு துளி நீரும், உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்டால், அவை அவரை அளவில்லாமல் திருப்திப்படுத்தும். “துலஸீ-தல-மாத்ரேண ஜலஸ்ய சுலுகேன வா…” என்று தொடங்கும் இந்த ஸ்லோகம் கௌதமீய தந்திர நூலிலிருந்து வந்தது. இதில், பக்தர்களிடம் அளவற்ற பாசம் கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் , துளசி இலைக்கும் சிறிதளவு நீருக்கும் தம்மையே அர்ப்பணிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்லோகத்தை ஆழமாக சிந்தித்த ஆச்சாரியர், “இவ்வளவு சிறிய அர்ப்பணிப்புக்கும் கடன் பட்டவனாக இருப்பதாக பகவான் நினைக்கிறார்” என்பதை உணர்ந்தார். அந்த உணர்வின் பேரில், அவர் துளசி இலையும் கங்கை நீரையும் தொடர்ந்து சமர்ப்பித்து, பரமபுருஷனான கிருஷ்ணரை இவ்வுலகில் அவதரிக்க அழைத்தார். இந்த நிகழ்வுகள் நமக்கு ஒரு நிலையான உண்மையை நினைவூட்டுகின்றன — பகவானை அடைய பொருள் தேவையில்லை; பக்தி, உண்மை, அன்பு மட்டுமே போதும். பக்தனின் இதயத்திலிருந்து எழும் சுத்தமான அர்ப்பணிப்பால், அனந்தமான பகவானும் அவன் பாசத்தில்  வசப்படுகிறார் ஸ்ரீ சைதன்ய சரி...