Skip to main content

Posts

Showing posts from December, 2020

புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

குருக்ஷேத்திரம்

  குருக்ஷேத்திரம்  (பகவத் கீதை பிறந்த பூமி ) வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்  🍁🍁🍁🍁🍁🍁 இந்திய தலைநகரான டெல்லியிலிருந்து 150 கி.மீ. தொலைவில் வடக்கு திசையில் ஹரியானா மாநிலத்தில் அமைந்திருப்பதே குருக்ஷேத்திரம் என்னும் திருத்தலம். பகவத் கீதையின் பிறப்பிடமாகப் போற்றப்படும் குருக்ஷேத்திரத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எண்ணற்ற லீலைகளைப் புரிந்திருக்கிறார். பதினெட்டு நாள்கள் நீடித்த மஹாபாரதப் போர், குருக்ஷேத்திரத்தில் அரங்கேறியது என்பதை அனைவரும் அறிவர். இப்புண்ணிய பூமியை தர்மக்ஷேத்திரம் என்றும் அழைப்பதுண்டு. குருக்ஷேத்திரத்தில் தற்போது காணப்படும் முக்கிய இடங்களைப் பற்றி சற்று பார்ப்போம்.  ஜோதிசர்  🍁🍁🍁🍁🍁🍁 கீதா உபதேச ஸ்தலம் என்று அழைக்கப்படுகின்ற இவ்விடத்தில்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு (அதன் மூலமாக உலக மக்களுக்கு) பகவத் கீதையை உரைத்தார். இவ்விடத்தில் ஒரு பெரிய ஆலமரம் தற்போதும் காணப்படுகிறது. இம்மரத்தின் கீழ்தான் கிருஷ்ணர் பகவத் கீதையை உரைத்ததாகக் கூறப்படுகிறது. 5,000 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த ஆலமரம், பகவத் கீதைக்கு சாட்சியாக இன்றும் போற்றப்படுகிறது. ஜோத...

நரசிம்ம அவதாரம்

  நரசிம்ம அவதாரம்  வழங்கியவர் - சுத்தபக்தி குழு 🍁🍁🍁🍁🍁🍁🍁 தன்னுடைய சகோதரனின் மரண செய்தியை கேட்ட ஹிரண்யகசிபு, மிகுந்த கோபம் கொண்டான். விண்ணை நோக்கி, "எனதன்பு அசுர  நண்பர்களே! நான் தேவர்களை தோற்கடித்து இந்த அண்டம் முழுவதையும் எனதாக்குவேன். விஷ்ணுவின் சிரம் கொய்து அவனை கொல்வேன்", என்று ஓலமிட்டான்.  சாகாவரம் பெற எண்ணிய ஹிரண்யகசிபு, ஒரு தனிமையான இடத்திற்கு சென்றான். தன் பாதத்தின் நுனியில் நின்றவாறு, கைகளை சிரஸிற்கு மேல் கூப்பி தன்னுடைய பார்வையை விண்ணை நோக்கி நிலை நிறுத்தினான். இவ்வாறு நூற்றி இருபத்தி ஐந்து வருடங்கள் இருந்தான். இந்த காலம் முழுவதும் உண்ணவும் இல்லை, உறங்கவும் இல்லை. எறும்புகள் அவனை சுற்றி புற்று கட்டி, அவனுடைய உடலையும் அரித்திருந்தது. அவனுடைய சிரத்திலிருந்து வந்த நெருப்பு ஜுவாலை, சமுத்திரத்தின் நீரை வற்ற செய்தது. மூவுலகங்களும் வெட்பத்தால் தகித்தது. பிரம்ம தேவர் உடனடியாக ஹிரண்யகசிபுவின் முன் தோன்றினார். "அசுரர் குலத்தின் அரசே! உன் உறுதியை கண்டு நான் வியக்கிறேன்! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்", என்று கூறினார். அதேசமயம், அவனுடைய உடலின் மீது சிறிது ஜலத்தை...

யார் மூல முழுமுதற் கடவுள்?

 

ஜடவுலகம் எவ்வாறு படைக்கப்பட்டது ?

 

பிறப்பு மற்றும் இறப்பு என்றால் என்ன ?

 

நான் யார் ?

 

மோக்ஷத ஏகாதசி

மோக்ஷத  ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁 மோக்ஷத ஏகாதசி -பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஶ்ரீமத் பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட சுபதினம் 🍁🍁🍁🍁🍁🍁🍁                                                                     குருக்ஷேத்திரப் போர் மோக்ஷத ஏகாதசி நாளன்று துவங்கியது. அன்றுதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார். ஒவ்வொரு வருடமும் அந்நாள், பகவத் கீதை தோன்றிய நாளாக, குருக்ஷேத்திரத்திலும் பாரதத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது  மார்கழி மாதம்   வளர்பிறையில் தோன்றக்கூடிய இந்த மோக்ஷத ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.  ஒரு முறை யுதிஸ்டிரர், பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். என்அன்பு கிருஷ்ணா, மார்கழி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மேலும் இந்த ஏகாதசியை ...

வராஹ அவதாரம்

 வராஹ அவதாரம் (வழங்கியவர் - ஜீவன கௌர ஹரி தாஸ்) ******* முந்தைய யுகத்தில் ஒரு நாள் மாலை வேளையில் மரீச்சியின் புதல்வனான கஷ்யப முனிவர், பகவான் விஷ்ணுவை வழிபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தக்ஷணின் மகளான திதி தன் கணவரான கஷ்யபரை அணுகி தன் காம இச்சைகளை உடனடியாக தணிக்கும் படி மன்றாடினாள். அந்த அமங்களகரமான மாலை வேளையில் கஷ்யப முனிவரும், திதியும் ஒன்று கூடினர். தவறான நேரத்தில் ஒன்று கூடியதை நினைத்து திதி வருத்தப்பட்டு அழுதாள். அப்போது காஷ்யப முனிவர் திதியிடம் கவலை கொள்ள வேண்டாம், உனக்கு பிறக்க இருக்கும் இரு புதல்வர்கள் உலகையே அச்சுறுத்தும் அசுரர்களாக இருந்தாலும், உன் பேரன் பிரஹ்லாதன் சிறந்த ஹரி பக்தனாக திகழ்வான் என தேற்றினார். பிரஹ்லாதனின் திவ்யமான குணங்களையும், புகழையும் கேட்ட திதி மிகவும் மகிழ்வுற்றாள். அதே சமயம் திதி தன் இரு அசுர குழந்தைகளான ஶிஶிஹிரண்யாக்ஷன்ன் மற்றும் ஹிரண்யகசிபுவை தன் கருவில் 100 வருடம் சுமந்தாள். இந்த இரு அசுர குழந்தைகளும் பூமியில் பிறப்பதற்கு காரணமாக வைகுண்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நடைபெற்றது. நான்கு குமாரர்களின் சாபம் 💐💐💐💐💐💐💐💐💐 அதன்படி நான்கு க...

கோபீ சந்தனத்தின் மகிமை

 கோபீ சந்தனத்தின் மகிமை ஆதாரம் - ஶ்ரீ கர்க ஸம்ஹிதை / ஆறாம் காண்டம் / அத்தியாயம் 15  🍁🍁🍁🍁🍁🍁🍁 நாரத முனிவர், பஹூலாஸ்வ மன்னரிடம் கூறினார் .  மன்னா! இனி கோபீபூமியின் மகிமையைக் கேள். இது பாவம் போக்கும் உத்தமமான தீர்த்தமாகும். அதைக் காதால் கேட்ட மாத்திரத்தில் கர்ம பந்தனத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது கோபிகள் அங்கு வாசம் செய்த காரணத்தாலேயே அந்த இடம் கோபி பூமி என்னும் பெயரில் பிரபலமாகி உள்ளது. அங்கு கோபிகளுடைய அங்கப் பூச்சினால் தோன்றிய உத்தமமான கோபிசந்தனம் கிடைக்கிறது. தன் அங்கத்தில் கோபி சந்தனம் தரிப்பவனுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது எப்போதும் கோபி சந்தனத்தால் அடையாளமிடப்பட்டவன், அதாவது கோபி சந்தனமுத்திரை திலகமணிபவன் ஒவ்வொரு நாளும் மஹா நதியில் நீராடிய புண்ய பலனை அடைகிறான் அவன் ஆயிரம் அச்வமேதமும் நூறு ராஜசூய யாகமும் செய்தவனாகிறான் எல்லா தீர்த்தங்களின் சேவையும் தான-விரதங்களின் அனுஷ்டானமும் செய்தவனாகிறான். நிச்சயம் அவன் கோபிசந்தனம் தரித்ததினால் மட்டுமே தன்யனாகி விடுகிறான். கங்கையின் மண்ணைக்காட்டிலும் இருமடங்கு புண்ணியம் சித்ரகூட மண்ணுக்கு உண்டு என்று கருதப்பட...

உண்மையான அறிவு

 
 
 

ஓடன சஷ்டி

(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்யலீலை 16.78 முதல் 16.81 ) 💐💐💐💐💐💐💐 குளிர் காலத்தின் தொடக்கத்தில் ஓடன ஷஷ்டி என்று அறியப்படும் விழா ஒன்று உள்ளது. அந்த நாளிலிருந்து பகவான் ஜெகன்நாதருக்கு  குளிர் காலத்திற்கு உகந்த போர்வைகளை அணிவிக்க வேண்டும் என்பதை இந்த விழா சுட்டிக்காட்டுகிறது. அந்த போர்வை நெசவாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்கப்படுகிறது. அர்ச்சன வழிமுறையின்படி, துணியை முதலில் நன்றாக துவைத்து அதிலுள்ள கஞ்சியை எடுத்து விட வேண்டும், அதன் பின்னரே அதனை பகவானுக்கு போர்த்த வேண்டும் ஆனால் பகவான் ஜெகநாதரின் பூஜாரி அந்த விதியினை புறக்கணித்து கஞ்சியுடன் கூடிய உடைகளை ஜெகநாதருக்கு அணிவித்தார். அதைப் பார்த்த புண்டரீக வித்யாநிதி, பக்தர்களிடம் குற்றம் காண்பதற்கான தனது எண்ணத்தினால், கடும் கோபம் கொண்டார்  பகவான் ஜெகன்நாதருக்கு கஞ்சியுடன் கூடிய ஆடை வழங்கப்பட்டதை கண்டபோது புண்டரீக வித்யாநிதி சற்று வெறுப்படைந்தார். அதனால் அவரது மனம் கலங்கமுற்றது. அன்றிரவில் சகோதரர்களான பகவான் ஜகன்னாதரும் பலராமரும் புண்டரீக வித்யாநிதியிடம் வந்து புன்னகைத்தபடி அவரை அறையத் தொடங்கினர். அறை வாங்கியதால் அவரது கன்னங்கள் ...

வாழைத்தண்டு பச்சடி

வாழைத்தண்டு பச்சடி   தேவையான பொருட்கள் ***************************** வாழைத்தண்டு - 1 (சிறியது) கெட்டி தயிர் - 1 கோப்பை கறிவேப்பிலை - சிறிதளவு வர மிளகாய் - 3 கடுகு - 1/4 தேக்கரண்டி உடைத்து உளுந்து - 1/4 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி பெருங்காயம் - 2 சிட்டிகை எண்ணெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை ******************** 1. வாழைத்தண்டை வட்டவட்டமாக நறுக்கி நார்களை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி மோர்த் தண்ணீரில் போடவும். 2. பிறகு இதனை பிழிந்து எடுத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். 3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம் போட்டு தாளித்து, வேக வைத்த தண்டைப் போட்டு லேசாக வதக்கி இறக்கவும். 4. பிறகு கெட்டித் தயிரில் உப்பு சேர்த்து கலக்கி வேகவைத்து, தாளித்த வாழைத்தண்டில் கொட்டி ஒரு கிளறு கிளறி பரிமாறவும். குறிப்பு ******************** 1. தயிர் கலந்த பின்பு அடுப்பில் வைக்கக் கூடாது. 2. தயிர் தண்ணியாகவும் இருக்கக் கூடாது. 3. வாழைத்தண்டு கறுக்காமல் இருப்பதற்காக மோர் தண்ணீரில் போடவும்.