Skip to main content

நாமாஷ்டகம்


 

நாமாஷ்டகம்

*****************************************************************************

பதம் 1

நிகிலா சுருதி மௌலி ரத்னா மாலா

த்யுதி நிராஜித பாத பங்கஜாந்த

அயி முக்த குலைர் உபாஸ்யமானம்

பரிதாஸ் த்வம் ஹரி நாம ஸம்ஸரயாமி

மொழிபெயர்ப்பு

ஹரி நாமமே! தங்களுடைய தாமரை மலர்பாதங்களின் விரல் நுனி, நவரத்தினங்களால் தொடுக்கப்பட்ட மாலையின் தேஜஸை போலுள்ள உபநிஷதங்களால் வணங்கப்படுகிறது. தாங்கள்  அணைத்து வேதங்களின் கிரீடம். தாங்கள் நாரதர், சுகதேவர் போன்ற முக்தி அடைந்த ஆத்மாக்களால் எப்போதும் போற்றாடுகிறீர்கள். ஹரி நாமமே! நான் தங்களிடம் முழுமையாக தஞ்சமடைகிறேன்.

 

பதம் 2

ஜய நாமதேய முனி வ்ரிந்தா ஜெய ஹி

ஜன ரஞ்சனாய பரம் அக்சராகரித்தே

த்வம் அநாதராத் அபி மனாஃ உதிரிதம்

நிகிலோக்ரா தாப பதலிம் விழும்ப்ஸி

 

மொழிபெயர்ப்பு

ஹரி நாமமே! சாதுக்களால் போற்றப்படுபவரே! தங்களுடைய நாமம் பக்தர்களிடையே பேரானந்தத்தை ஏற்படுத்துகிறது; தங்களுடைய நாமத்தை ஒருவர் ஒரு முறை உச்சரித்தால் கூட அதன் முழு பலனையும் தருபவரே; யாரேனும் உங்களது நாமத்தை விமர்சிப்பதற்காக (கேலியாக) பயன்படுத்தினாலும் கூட, அவர்களின் துன்பத்தை போக்குபவரே! தங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.

 

பதம் 3

யத் ஆபாசோ அபி உதயந் கவலித பாவ தவாந்த விபவோ

த்ரீஷாம் தத்வாந்தானாம் அபி திஸதி பக்தி பிரனாயினேம்

ஜனஸ் தாஸியோதாட்டம் ஜகதி பகவான் நாம  தரனே

க்ரிதி  தி நிர்வகத்தும் இஹ மஹிமானம் பிரபாவதி

மொழிபெயர்ப்பு

ஹரி நாமத்தின் பேரொளியே! விடியற்காலை பொழுதில் உதிக்கும் சூரியனை போலுள்ள "நாமாபாஸா", பௌதிக உலகின் இருட்டில் தவிக்கும் மக்களுக்கு, இந்த ஒளியானது, "பகவான் கிருஷ்ணருடைய பக்தி தொண்டு" என்ற உண்மையை விளக்குகிறது. தங்களுடைய திவ்யமான மகிமைகளை, இந்த உலகில் தலை சிறந்த பண்டிதரும் கூட முழுமையாக விளக்க முடியாது.

 

பதம் 4

யத் பிரம்ம சாக்சத் கிர்தி நிஸ்தயாபி

விநாசம் ஆயதி வினா போகை

அபைதி நாம ஸ்புரனென தட் தே

பிராரப்த கர்மேதி விப்ருதி வேத:

மொழிபெயர்ப்பு

ஹரி நாமமே! வேதங்கள் ஒன்றை தெளிவு படுத்துகின்றன - தியானமோ அல்லது அருவ பிரம்மனின் வழிபாடோ ஒரு ஆத்மாவிற்கு முக்தி தராது. ஆனால் யாரொருவர் தங்களுடைய நாமத்தை உச்சரிக்கிறாரோ, அவருடைய கர்மங்கள் அனைத்தும் நீங்கி நிச்சயம் முக்தி பெறுவார்.

 

பதம் 5

அகதமான யசோதா நந்தனாவ் நந்தசுனோ

கமலநாயனா கோபிச்சந்திர விரிந்தவனேந்திர

ப்ரணதகருணைக்ரிஷ்னாவ் இதி அநேக ஸ்வரூபே

த்வயி மாமா ரதிர் உச்சர் வர்ததாம் நாமதேய

 

மொழிபெயர்ப்பு

ஹரி நாமமே! தங்களுடைய பல ரூபங்கள் - அகதமனா (அகாசுரனை கொன்றவர்), யசோதா நந்தன (யசோதையின் புதல்வர்), நந்தசுனு (நந்த மஹாராஜரின் புதல்வர்), கமல நயனா (தாமரை கண்கள் உடையவர்), கோபி சந்திரா (கோபியர்கள் நிலவு), விருந்தவனேந்திரா (விருந்தாவனத்தின் அரசர்), ப்ரணத கருணா (தஞ்சமடைந்த ஆத்மாக்களுக்கு கருணை காண்பிப்பவரே), கிருஷ்ணா - இந்த ரூபங்களின் மீது எனக்கு அன்பும் பக்தியும் அதிகரித்து கொண்டே இருக்க வேண்டும்.

 

பதம் 6

வாசியம் வாசகம் இதி உதேதி பாகவதோ நாம ஸ்வரூப த்வயம்

பூர்வசமாத் பரம் ஈவா ஹந்த கருணம் தத்ராபி ஜானிமாஹே

எஸ் தஸ்மின் விஹிதபராத நிவஹ ப்ராணி சமந்தாத்  பவேத்

ஆசியேநெதம் உபாஸ்ய சோ அபி ஹி சதானந்தாம் பூதள மஜ்ஜதி

 

 

மொழிபெயர்ப்பு

ஹரி நாமமே! தாங்கள் இரு விதமாக வியாபித்திருக்கிறீர்கள் - ஹரி நாமத்தில் உள்ள முழுமுதற் கடவுள், ஹரி நாமத்திலிருக்கும் ஒலி அதிர்வு. இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில், முதலாவதை காட்டிலும் இரண்டாவது மிகவும் கருணை வாய்ந்தது. ஏனெனில், முழுமுதற் கடவுளை அபராதம் (
குற்றம்) செய்தாலும் கூட, ஒருவர், ஹரி நாமத்தின் ஒலி அதிர்வில்  தன்னை ஈடுபடுத்தினால் நிச்சயம் பயனடைவான்.

 

பதம் 7

சூதிதாசரித்த ஜனார்த்தி ராஸயே

ரம்ய சித் கன சுக ஸ்வரூபினே

நாம கோகுல மஹோட்சவாய தி

கிருஷ்ணா பூர்ண வபுஸ் நமோ நமஹ

மொழிபெயர்ப்பு

பூரணமான ஹரி நாமமே! தீவிரமான ஆன்மீக பேரானந்தத்தின் இருப்பிடம் தாங்கள். தங்களிடம் தஞ்சமடைந்தவர்களின் துன்பங்களை நீக்குபவர் தாங்கள். கோகுலத்தில் தாங்கள் என்றென்றும் ஒரு திருவிழாவின் ஆனந்தம். நான் தங்களுக்கு மீண்டும் மீண்டும் எனது வணக்கங்களை செலுத்திகிறேன்.

 

பதம் 8

நாரத வீணோஜீவன

சுதோர்மி நிர்யாச மாதுரி பூர

த்வம் கிருஷ்ணா நாம காமம்

ஸ்புர மீ ரசனே ரசேன சதா

 

மொழிபெயர்ப்பு

கிருஷ்ணரின் நாமமே! நாரதருடைய வீணையின் உயிர் நாடியே! அமிர்தத்தை போன்ற சுவையுடையவரே! தாங்கள் விரும்பினால், பகவானுடைய அன்புடன் என்னுடைய நாவில் தோன்றும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...