ஹோலி பண்டிகை 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹோலி பண்டிகை இந்தியாவில் பல இடங்களில் கொண்டாடும் திருவிழா. குறிப்பாக . வட இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா ஆகும். பங்குனி மாதம் பௌர்ணமி அன்று, ஹோலி கொண்டாடப்படுகிறது. வண்ணமிக்க வசந்தகாலம் துவங்குவதைக் கொண்டாடும் விழா ஹோலி. வ்ரஜ பூமி ப்ருந்தாவனம், மதுரா, நந்தி கிராமம், பர்சானா ஆகிய இடங்களில் ஹோலி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அசுரன் ஹிரண்யகசிபு பிரம்மாவைக் குறித்து கடுந்தவம் செய்தான். பிரம்மா அவன் முன் தோன்றியபோது இரவிலோ, பகலிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, பூமியிலோ, ஆகாயத்திலோ, மனிதனாலோ, மிருகங்களாலோ, ஆயுதங்களாலோ தனக்கு சாவு ஏற்படக்கூடாது என்று வேண்டி வரம் பெற்றான். தன்னை யாராலும் கொல்ல முடியாது என்ற மமதையில் தேவர்களையும், ரிஷிகளையும், சாதுக்களையும் துன்புறுத்தினான். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னையே கடவுளாக வணங்க வேண்டுமென்று கட்டளையிட்டான். அவனுடைய சகோதரன் ஹிரண்யாட்ஷனை பகவான் விஷ்ணு வதம் செய்துவிட்டதால் அவர் மேல் மிகவும் கோபம் கொண்டு விஷ்ணுவை யாரும் வணங்கக்கூடாது என்று அனைவருக்கும் கட்டளையிட்டான். ஆனால் அவனது மகன் பிரஹலாதன்...