Skip to main content

சத்தியவிரத ராஜனின் பிரார்த்தனைகள்


ஸ்ரீமத்-பாகவதம்

காண்டம் 8 / அத்தியாயம் 24/ பதம் 46-53

*************************************************************************

பதம் 46

ஸ்ரீ ராஜேவாச

அனாதி - அவித்யோபஹதாத்ம - ஸம்விதஸ்
தன் - மூல - ஸம்ஸார - பரிஸ்ரமாதுரா
யத்ருச்சயோபஸ்ருதா யம் ஆப்னுயுர்
விமுக்திதோ : பரமோ குருர் பவான்


மொழிபெயர்ப்பு

அரசர் கூறினார்: நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து தங்கள் சுய அறிவை இழந்து, இந்த அறியாமையினால் துன்பம் நிறைந்த, பௌதிகமான பந்தப்பட்ட வாழ்வில் சிக்கிக் கொண்டவர்கள், பகவானின் கருணையால் அவரது பக்தர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அப்பரமபுருஷரை நான் பரம ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்கிறேன்.

 

பதம் 47

ஜனோபுதோயம் நிஜ - கர்ம - பந்தன:
ஸகேச்சயா கர்ம ஸமீஹதேஸுகம்
யத் - ஸேவயா தாம் விதுனோதி அஸன் - மதிம்
க்ரந்திம் பிந்யாத் த்ருதயம் நோ குரு:


மொழிபெயர்ப்பு

முட்டாளான பந்தப்பட்ட ஆத்மா ஜட உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நம்பிக்கையில், துன்பத்தை மட்டுமே அளிக்கக்கூடிய பலன் நோக்குக் கருமங்களைச் செய்கிறான். ஆனால் பரமபுருஷ பகவானுக்குத் தொண்டு செய்வதன் மூலமாக, ஒருவன் இன்புற்றிருக்க வேண்டும் என்ற இத்தகைய பொய்யான ஆசைகளிலிருந்து விடுபடுகிறான். எனது பரம ஆன்மீக குரு என் இதயத்திலுள்ள பொய்யான ஆசைகளின் முடிச்சை வெட்டி வீழ்த்துவாராக.

 

 

பதம் 48

யத் - ஸேவயாக்னேர் இவ ருத்ர - ரோதனம்
புமான் விஜஹ்யான் மலம் ஆத்மனஸ் தம:
பஜேத வர்ணம் நிஜம் ஏஷ ஸோவ்யயோ
பூயாத் ஈச: பரமோ குரோர் குரு:


மொழிபெயர்ப்பு

ஜட சிக்கலிலிருந்து விடுபட விரும்பும் ஒருவன் பரமபுருஷரின் தொண்டை மேற்கொண்டு, பாவ, புண்ணியச் செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ள, அறியாமை எனும் களங்கத்தைக் கைவிடவேண்டும். இவ்வாறாக, தங்கம் அல்லது வெள்ளிக் கட்டி நெருப்பால் பதனிடப்படும் போது, அதிலுள்ள அழுக்குகள் அனைத்தும் உதிர்ந்து அது தூய்மையடைவதைப் போலவே, ஒருவன் தனது ஆதியான சொரூபத்தை திரும்ப பெறுகிறான். பரமபுருஷ பகவான் மற்றெல்லா ஆன்மீக குருமார்களுக்கும் மூல குருவாக இருப்பதால், முடிவற்றவரான அந்த பகவான் நமது ஆன்மீக குரு ஆவாராக.

 

பதம் 49

நயத் - ப்ரஸாதாயுத - பாக - லேசம்
அன்யே தேவா குரவோ ஜனா: ஸவயம்
கர்தும் ஸமேதா: ப்ரபவந்தி பும்ஸஸ்
தம் ஈஸ்வரம் த்வாம் சரணம் ப்ரபத்யே


மொழிபெயர்ப்பு

தேவர்களாலோ, அல்லது பெயரளவேயான குருமார்களாலோ அல்லது மக்களாலோ, தனிப்பட்ட முறையிலோ அல்லது மொத்தமாகவோ, உங்களால் வழங்கப்படும் கருணையில் பத்தாயிரத்தில் ஒரு பாகத்திற்கு ஈடான கருணையைக் கூட வழங்க முடியாது. ஆகவே உங்களுடைய தாமரைப் பாதங்களில் நான் சரணடைய விரும்புகிறேன்.

 

பதம் 50

அசக்ஷுர் அந்தஸ்ய யதாக்ரணீ: க்ருதஸ்
ததா ஜனஸ்யாவிதுஷோபுதோ குரு:
த்வம் அர்க - த்ருக் ஸர்வ - த்ருசாம் ஸமீக்ஷணோ
வ்ருதோ குருர் : ஸ்வ - கதிம் புபுத்ஸதாம்


மொழிபெயர்ப்பு

குருடனொருவன், காண இயலாதிருப்பதால், மற்றொரு குருடனைத் தனது தலைவனாக ஏற்றுக் கொள்கிறான். வாழ்வின் இலட்சியத்தை அறியாத மக்கள், மூடனும், அயோக்கியனுமான ஒருவனை குருவாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நாங்களோ தன்னுணர்வில் ஆர்வம் கொண்டுள்ளோம். ஆகவே, தாங்கள் எல்லாத் திசைகளிலும் காணக்கூடியவராகவும், சூரியனைப் போல் எல்லாம் அறிந்தவராகவும் இருப்பதால், பரம புருஷராகிய தங்களையே எங்களுடைய ஆன்மீக குருவாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்

 

பதம் 51

ஜனோ ஜனஸ்யாதிஸதேஸ்தீம் கதிம்
யயா ப்ரபத்யேத துரத்யயம் தம:
த்வம் து அவ்யயம் ஞானம் அமோகம் அஞ்ஜஸா
ப்ரபத்யதே யேன ஜனோ நிஜம் பதம்


மொழிபெயர்ப்பு

பெயரளவாக மட்டுமே உள்ள பௌதிகவாதியான ஒரு குரு தனது சீடர்களுக்குப் பொருளாதார முன்னேற்றத்தையும், புலன் நுகர்வையும் பற்றி உபதேசிக்கிறார். இத்தகைய உபதேசங்களினால், மூடர்களான சீடர்கள் அறியாமை மிகுந்த பௌதிக வாழ்வையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர். ஆனால் பெருமானாகிய தாங்கள் நித்தியமான அறிவை வழங்குகிறீர்கள். மேலும் இத்தகைய அறிவைப் பெறும் புத்திசாலி விரைவாக தனது இயற்கையான மூல நிலையில் நிலை பெறுகிறான்.

 

பதம் 52

த்வம் ஸர்வ - லேகஸ்ய ஸுஹ்ருத் ப்ரியேஸ்வரோ
ஹி ஆத்மா குருர் ஞானம் ஆபீஷ்ட - ஸ்த்தி:
ததாபி லோகோ பவந்தம் அந்த - தீர்
ஜானாதி ஸந்தம் ஹ்ருதி பத்த - காம:

 

மொழிபெயர்ப்பு

எம்பெருமானே, தாங்கள் எல்லோருடைய நலத்திலும் அக்கறை கொண்ட மிகச் சிறந்த நண்பரும், பரம ஆளுனரும், பரமாத்மாவும், பரம போதகரும், உன்னத அறிவை வழங்குபவரும் மற்றும் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவரும் ஆவீர். ஆனால் மூடர்களின் இதயங்களிலும் தாங்கள் இருந்த போதிலும், அவர்களுடைய இதயத்திலுள்ள சிற்றின்ப ஆசைகளின் காரணத்தால், தங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

 

பதம் 52

த்வம் த்வாம் அஹம் தேவ - வரம் வரேண்யம்
ப்ரபத்ய ஈசம் ப்ரதிபோதனாய
சிந்தி அர்த - தீபைர் பகவன் வசோபிர்
க்ரந்தீன் ஹ்ருதய்யான் விவ்ருணு ஸ்வம் ஓக:


மொழிபெயர்ப்பு

பரமபுருஷரே, தேவர்கள் உங்களை அனைத்திற்கும் பரம ஆளுனராக வழிபடுகின்றனர். தன்னுணர்வைப் பெறுவதற்காக தங்களிடம் நான் சரணடைகிறேன். வாழ்வின் இலட்சியத்தை வெளிப்படுத்தும் தங்களது உபதேசங்களால் என்னுடைய இதயத்திலுள்ள முடிச்சை வெட்டி வீழ்த்த வேண்டும். என்னுடைய வாழ்வின் இலட்சியத்தை நான் அறியும்படி செய்ய வேண்டும்.

 





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...