Skip to main content

தேவேந்திரனின் பிரார்த்தனை


 

ஸ்ரீமத்-பாகவதம்

காண்டம் 10 / அத்தியாயம் 27 / பதம் 4-13

**************************************************************************************************************

பதம் 4

இந்த்ர உவாச

விஸூத்த-ஸத்தவம் தவ தாம ஸாந்தம்
தபோ-மயம் த்வஸ்த-ரஜஸ்-தமஸ்கம்
மாயா-யோ ()யம் குண-ஸம்ப்ரவாஹோ
வித்யதே தே ()க்ரஹணானுபந்த:

மொழிபெயர்ப்பு

தேவேந்திரன் கூறினான்: சத்துவ குணத்தின் வெளிப்பாடான உமது உன்னத வடிவம் எந்தவிதமான மாற்றமில்லாததும், ஞான ஒளியுடையதும், ரஜோ, தமோ குணங்கள் அற்றதுமாகும். மாயை மற்றும் அறியாமையினை அடிப்படையாகக் கொண்ட ஜட இயற்கையின் ஆற்றல் மிக்கப் பிரவாகம் உம்மிடம் வெளிப்படுவதில்லை.

 

பதம் 5

குதோ நு தத் -தேதவ ஈஸ தத்-க்ருதா
லோபாதயோ யே ()புத-லிங்க-பாவா:
ததாபி தண்டம் பகவான் பிபர்தி
தர்மஸ்ய குப்த்யை கல-நிக்ரஹாய


மொழிபெயர்ப்பு

பிறகு எவ்வாறு உம்மிடம் காமம், குரோதம், லோபம் என்னம் சாதாரண மனிதனின் அடையாளங்கள் இருக்க முடியும்? இவை ஒருவனின் முந்தைய பௌதீக வாழ்வின் ஈடுபாட்டின் காரணமாக உண்டாவதோடு அவன் மேலும் உலகியல் வாழ்வில் சிக்கிக் கொள்ள வதற்குக் காரணமும் ஆகின்றன. மேலும் தாங்கள் பரமபுருஷ பகவான் ஆதலினால் துஷ்டர்களை அழித்து தர்ம நெறிகளைக் காக்கின்றீர்

 

 

பதம் 6

பிதா குருஸ் த்வம்-ஜகதாம் அதீஸோ
துரத்யய: கால உபாத்த-தண்ட:
ஹிதாய சேச்சா-தனுபி: ஸமீஹஸே
மானம் விதுன்வம் ஜகத்-ஈஸ-மானினாம்


மொழிபெயர்ப்பு

இப்பிரபஞ்சத்தின் தந்தையும் ஆன்மீகக் குருவும், பரமநெறியாளரும் நீரே கடப்பதற்கரிய காலமும் நீரே, பாவிகளின் நன்மைக்காக அவர்களைத் தண்டிப்பவரும் நீரே. உமது விருப்பத்திற்கேற்ப நீர் மேற் கொள்ளும் பல்வேறு அவதாரங்களிலும், தம்மை இவ்வுலகின் தலைவன் என்று கருதுபவர்களின் வீண் ஆணவத்தினை நீக்குவதற்காக உறுதியுடன் செயல்படுகின்றீர்.

பதம் 7

யே மத்-விதாஜ்ஞா ஜகத்-ஈஸ-மானினஸ்
த்வாம் லீக்ஷ்ய காலே () பயம் ஆஸீ தன்-மதம்
ஹித்வார்ய-மார்கம் ப்ரபஜந்தி அபஸ்மயா
ஈஹா கலானாம்அபி தே () னுஸாஸனம்


மொழிபெயர்ப்பு

தம்மை அப்பிரபஞ்சத்தின் தலைவர்களாகக் கருதும் என்னைப் போன்ற மூடர்கள் கூடக் காலத்திற்கும் அஞ்சாதவராக நீர் இருப்பதைக் காணும்பொழுது உடனடியாகத் தமது எண்ணத்தினை உதறித்தள்ளி நேரடியாக ஆன்மீக வளர்ச்சிப் பாதையினை மேற்கொள்கின்றனர். இவ்வாறு நீர் தீயவர்களையும் கூட அவர்களுக்கு உபதேசிப்பதின் மூலம் தண்டிக்கின்றீர்.

பதம் 8

த்வம் மனமஸ்வர்ய-மத-ப்லுதஸ்ய
க்ருதாகஸஸ் தே ()வி துஷ: ப்ரபாவம்
க்ஷந்தும் ப்ரபோ ()தார்ஹஸிமூட-சேதஸோ
மைவம் புனர் பூன் மதிர் ஈஸ மே () ஸதீ

 

மொழிபெயர்ப்பு

எனது ஆட்சி அதிகாரத்தின் ஆணவத்தில் அமிழ்ந்து, உமது மாண்பினை அறியாது உம்மிடம் தவறிழைத்து விட்டேன். , பிரபுவே என்னை மன்னித்தருள்வீராக. எனது புத்தி குழம்பி இருந்தது. அதனால் எனது உணர்வு மீண்டும் மாசு பெறாதிருப்பதாக.

 

பதம் 9

தவாதாரோ ()யம் அதோக்ஷஜேஹ
புவோ பிராணாம் உரு-பார-ஜன்மனாம்
சமூ-பதீனாம் அபவாய தேவ
பவாய யுஷ்மச்-சரணானுவர்தினாம்


மொழிபெயர்ப்பு

, உன்னத பகவானே, இப்புவியின் பாரத்தினை அதிகரித்து இதற்குப் பல்வேறு இடையூறுகளைச் செய்யும் போர்வெறிபிடித்த தலைவர்களை அழிப்பதற்காக நீர் இவ்வுலகில் அவதரிக்கின்றீர். , பகவானே, அதே சமயம் நீர் உமது தாமரைத் திருவடிகளுக்கு நம்பிக்கையுடன் தொண்டு செய்பவர்களின் நன்மைக்காகவும் செயல்படுகின்றீர்.

 

பதம் 10

நமஸ் துப்யம் பகவதெ புருஷாய மஹாத்மனே
வாஸூதேவாய க்ருஷ்ணாய ஸாத்வதாம் பததே நம:


மொழிபெயர்ப்பு

முழுமுதற்கடவுளே, மகாத்மாவே, எங்கும் வியாபித்திருப்பவரே, எல்லா உயிர்களின் இதயங்களிலும் இருப்பவரே உமக்கு எனது வந்தனங்கள். யதுகுலத்தின் தலைவரான கிருஷ்ணரே உமக்கு எனது வந்தனங்கள் உரித்தாகுக.

 

பதம் 11

ஸ்வச்சந்தோபத்தா-தேஹாய விஸீத்த-ஜ்ஞான-மூர்தயே
ஸர்வஸ்மை ஸர்வ-பீஜாய ஸர்வ-பூதாத்மனே நம:

 

மொழிபெயர்ப்பு

தமது பக்தர்களின் விருப்பங்களுக்கேற்ப உன்னத உடல்களை மேற்கொள்பவருக்கும், தூய உணர்வுடைய வடிவம் உடையவருக்கும், எல்லா உயிர்களுக்கம் வித்தாகவும், ஆத்மாவாகவும் இருக்கும் அவருக்கு நான் எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

 

பதம் 12

மயேதம் பகவன் கோஷ்ட-நாஸாயாஸார-வாயுபி:
சேஷ்டிதம் விஹதே யஜ்ஞே மானினா தீவ்ர-மன்யுனா


மொழிபெயர்ப்பு

போற்றுதற்குரிய பகவானே, எனது வேள்வி தடை செய்யப்பட்டது கண்டு அகந்தையின் காரணமாக நான் கடுஞ்சினங் கொண்டேன். அதனால் உமது ஆயர்குலத்தினைக் கடுமையான மழை மற்றும் சூறைக் காற்றினால் நான் அழித்துவிட முயன்றேன்

 

பதம் 13

த்வயேஸானுக்ருஹீதோ ()ஸ்மி த்வஸ்த-ஸ்தம்போ வ்ருதோத்யம:
ஈஸ்வரம் குரும் ஆத்மானம் த்வாம் அஹம் ஸரணம் கத:


மொழிபெயர்ப்பு

எனது ஆணவத்தினை அழித்து எனது முயற்சியினை (விருந்தா வனத்தினைத் தண்டித்தல்) தோல்வியுறச் செய்ததின் மூலம் , பகவானே, நீர் எனக்குக் கருணை காட்டியுள்ளீர். பரமபுருஷ பகவானம், ஆன்மீக குருவும் பரமாத்மாவும் ஆனவரே உம்மைச் சரணடைவதற்காக இப்போது நான் வந்திருக்கின்றேன்.





 

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...