Skip to main content

Posts

Showing posts from January, 2023

ஆன்மீக உலகமே தனது நித்யமான வாசஸ்தலம் என்று அறியாத கட்டுண்ட ஜீவராசிகள்.

  பொதுவாக மக்கள் வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளை அடைவது என்னும் தங்கள் வாழ்க்கை நலனை அறியாதிருக்கின்றனர். ஆன்மீக உலகிலுள்ள தங்கள் உண்மை வீட்டினைப்பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆன்மீக உலகில் பல வைகுண்ட லோகங்கள் உள்ளன. அவற்றுள் மிகச் சிறந்ததாக இருப்பது கிருஷ்ண லோகம் எனப்படும் கோலோக பிருந்தாவனமேயாகும். சமுதாயத்தின் முன்னேற்றம் அபரிதமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டாலும் இங்கு ஆன்மீக உலகிலுள்ள வைகுண்ட லோகத்தைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இன்றைய தினம் நாகரீகத்தில் முன்னேறியிருப்பதாகச் சொல்லும் மனிதர்கள் பிறஉலகங்களுக்குச் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தாங்கள் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்த உலகமான பிரம்ம லோகத்திற்குச் சென்றாலும் கூட மீண்டும் இப்பூமிக்கு திரும்பி வேண்டியதிருக்கும் என்பது பற்றி ஒன்றும் தெரியாது. இதனை பகவத்கீதை (8.16) உறுதி செய்கின்றது: ஆப்ரஹ்ம-புவனால் லோகா: புனர் ஆவர்தினோ (அ)ர்ஜுன மாம் உபேத்ய து கௌந்தேய புனர் ஜன்ம ந வித்யதே “குந்தியின் மகனே! உலகில் உயர்ந்த தேவலோகத்திலிருந்து தாழ்ந்தபாதாள லோகம் வரை உள்ள எல்லா லோகங்களும் பிறப்பு இறப்ப...

ஜட உடலிலிருந்து விடுபட்ட பிறகு, ஆன்மா எங்கே போகிறது?

  நி : ஸ்ரேயஸ என்றால் “ இறுதியாகச் சேரும் இடம் ” என்று பொருள் ஸ்வஸம்ஸ்தான என்றால் மாயாவாதிகளுக்குத் தங்குவதற்குக் குறிப்பிட்ட இடம் இல்லை என்று பொருள் . மாயாவாதிகள் தங்கள் தனித்தன்மையைத் தியாகம் செய்கின்றனர் . அதனால் வாழும் பொறி பகவானின் திவ்யமான உடலிலிருந்து வெளிப்படும் மாய ஒளியில் கலக்க முடியும் . ஆனால் பக்தருக்கென்று குறிப்பிட்ட இடம் உண்டு . கோள்கள் சூரியஒளியினை நம்பியுள்ளன , ஆனால் சூரியஒளிக்கு என்று குறிப்பிட்ட நம்பகமான இடம் கிடையாது . ஒருவர் ஒரு குறிப்பிட்ட கோளை அடையும் பொழுது , அவருக்குத் தங்கும் இடமுண்டு . கைவல்ய என்று அறியப்படும் ஆன்மீக வானம் எல்லாப் பக்கங்களிலும் இன்ப ஒளியாக , பரம புருஷ பகவானின் பாதுகாப்பின் கீழ் உள்ளது . பகவத் கீதையில் (14.27) குறிப்பிடப்பட்டுள்ளதுபோல , ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம் : மாயையாகிய பிரம்ம ஒளி பரம புருஷ பகவானின் உடலில் தங்கும் . அதாவது பரம புருஷ பகவானின் உடலொளியே கைவல்யம் அல்லது மாய பிரம்மன் . அந்த மாயா ஒளியில் வைகுந்தங்கள் எனப்படும் ஆன்மீகக் கோள்கள் உள்ளன , அதன் ...

மாயா சக்தி, பொய் அகங்காரத்திற்கு சிக்கவைத்து விடுகிறது.

  பொய் அகங்காரத்தின் முக்கிய காரியம் நாஸ்திகமாகும் . தான் நித்தியமாக பரமபுருஷருக்குக் கீழ்ப்படிந்துள்ள அவரது பின்னப்பகுதி என்பதை மறந்து , சுதந்திரமாக மகிழ்ச்சியடைய விரும்பும் ஜீவன் , இரு வழிகளில் செயற்படுகிறான் . முதலில் அவன் சுய லாபத்திற்காக அல்லது புலன் நுகர்வுக்காக பலனை எதிர்பார்த்து செயற்படுகிறான் . நீண்ட காலமாக பலன் கருதும் செயலில் ஈடுபட்டுக் களைப்படைந்த பின் , அவன் மனோ தத்துவக் கற்பனையாளனாக மாறி , தான் கடவுளுக்குச் சமமான நிலையில் இருப்பதாக நினைக்கிறான் . பகவானுடன் ஒன்றாகி விடுவதெனும் தவறான இந்த எண்ணம்தான் மாயா சக்தியால் விரிக்கப்படும் கடைசி வலையாகும் . இந்த மாயா சக்தி , பொய் அகங்காரத்திற்கு சிக்கவைத்து விடுகிறது . பரபிரம்மத்தைப் பற்றிய தத்துவார்த்தமான கற்பனைகளை விட்டுவிடுவதுதான் , பொய் அகங்காரத்திலிருந்து விடுபடுவதற்குரிய மிகச் சிறந்த வழியாகும் . மனோ தத்துவக் கற்பனைகளால் பரபிரம்மத்தை உணர முடியாதென்பதை உறுதியாக ஒருவன் அறிய வேண்டும் . பரபிரம்மத்தை , அல்லது பரமபுருஷ பகவானைப் பற்றி , தகுதியுள்ள ஒர் அ...

பக்தர்கள் சங்கம்

  பகவத் பக்தர்கள் மற்றும் நாஸ்திகர்கள் என இருவகை மனிதர்கள் உள்ளனர் . பகவத் பக்தர் தெய்வீக குணங்களை வெளிப்படுத்துவதால் தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் . ஆனால் நாஸ்திகர்களோ அசுரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் . அசுரனால் பரம புருஷரான விஷ்ணுவின் முன் நிற்க முடியாது . அசுரர்கள் பரம புருஷரை அழிக்க முயல்வதிலேயே எப்பொழுதும் சுறுசுறுப்பாக உள்ளனர் . ஆனால் உண்மையில் பரம புருஷர் தமது உன்னதமான நாமமாகவோ , உருவமாகவோ , குணங்களாகவோ , லீலைகளாகவோ அல்லது பல வகைப்பட்ட உபகரணங்களாகவோ தோன்றிய உடனேயே அசுரர்கள் முற்றிலும் முறியடிக்கப்பட்டு விடுகின்றனர் . பகவானின் புனித நாமத்தைப் பாடுவதால் பேயும் பறந்துவிடும் என்று கூறப்படுகிறது . பகவானுடைய உபகரணங்களின் பட்டியலில் சிறந்த முனிவர்களும , பகவத் பக்தர்களும் கூட அடங்குவர் . எனவே சாதுவான பக்தரொருவர் தோன்றிய உடனேயே பிசாசு போன்ற பாவங்கள் உடனே அழிந்து விடுகின்றன . இதுவே வேத சாஸ்திரங்களின் தீர்ப்பாகும் . எனவே , அசுரர்களும் , பேய் பிசாசுகளும் தங்களுடைய கெட்ட ஆதிக்கத்தைச் செலுத்த முடியாதபட...