Skip to main content

ஜட உடலிலிருந்து விடுபட்ட பிறகு, ஆன்மா எங்கே போகிறது?

 


நி:ஸ்ரேயஸ என்றால்இறுதியாகச் சேரும் இடம்என்று பொருள் ஸ்வஸம்ஸ்தான என்றால் மாயாவாதிகளுக்குத் தங்குவதற்குக் குறிப்பிட்ட இடம் இல்லை என்று பொருள். மாயாவாதிகள் தங்கள் தனித்தன்மையைத் தியாகம் செய்கின்றனர். அதனால் வாழும் பொறி பகவானின் திவ்யமான உடலிலிருந்து வெளிப்படும் மாய ஒளியில் கலக்க முடியும். ஆனால் பக்தருக்கென்று குறிப்பிட்ட இடம் உண்டு. கோள்கள் சூரியஒளியினை நம்பியுள்ளன, ஆனால் சூரியஒளிக்கு என்று குறிப்பிட்ட நம்பகமான இடம் கிடையாது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட கோளை அடையும் பொழுது, அவருக்குத் தங்கும் இடமுண்டு. கைவல்ய என்று அறியப்படும் ஆன்மீக வானம் எல்லாப் பக்கங்களிலும் இன்ப ஒளியாக, பரம புருஷ பகவானின் பாதுகாப்பின் கீழ் உள்ளது. பகவத் கீதையில் (14.27) குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம்: மாயையாகிய பிரம்ம ஒளி பரம புருஷ பகவானின் உடலில் தங்கும். அதாவது பரம புருஷ பகவானின் உடலொளியே கைவல்யம் அல்லது மாய பிரம்மன். அந்த மாயா ஒளியில் வைகுந்தங்கள் எனப்படும் ஆன்மீகக் கோள்கள் உள்ளன, அதன் தலைமையானது கிருஷ்ண லோகமாகும். சில பக்தர்கள் வைகுந்தக் கோள்களுக்கு உயர்த்தப்படுகிறார்கள், சிலர் கிருஷ்ண லோகக் கோளுக்கு உயர்த்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட பக்தரின் விருப்பப்படி, ஸ்வஸம்ஸ்தான எனப்படும், அவரின் விருப்பமான இருப்பிடம், குறிப்பிட்ட இருப்பிடம் வழங்கப்படுகிறது. பகவானின் அருளால், பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள தன்னை உணர்ந்த பக்தர் பூதவுடலில் இருந்தபோதிலும் அவர் சேருமிடத்தை அவர் புரிந்துகொள்கிறார். அதனால் அவர் சந்தேகப்படாமல், நிலையாக பக்திச் செயல்களைச் செய்கிறார், அவருடைய ஜடவுடலை நீத்த பிறகு, உடனே அவர் தான் சென்று அடைய வேண்டிய இடத்திற்கு, தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டபடி சென்று அடைகிறார். அந்த இருப்பிடத்தை அடைந்த பின்னர், இந்த ஜடவுலகிற்கு அவர் ஒருபோதும் திரும்பி வருவதில்லை.

இங்கு பயன்படுத்தப்படும் சொற்களாகிய லிங்காத்விநிர்கமே என்றால்நுட்பம், தூலம் என்ற இரண்டு வகையான ஜடவுடல்களிலிருந்து விடுபட்ட பின்னர்என்று பொருள். நுட்பமான உடல், மனம், அறிவுக்கூர்மை, போலி ஆளுமை மற்றும் மாசடைந்த உணர்வுநிலை இவற்றால் ஆனது.

தூல உடல் என்பது, பூமி, நீர், நெருப்பு, காற்று, வான் ஆகிய ஐந்து மூலப்பொருட்களால் ஆனது. ஒருவர் ஆன்மீக உலகிற்கு மாற்றப்படும்பொழுது, அவர் இந்த ஜடவுலகின் நுட்பமான, தூலமான உடல்கள் இரண்டையும் துறக்கிறார். அவர் தன்னுடைய தூய, ஆன்மீக உடலுடன் அகநிலை ஆகாயத்தில் நுழைகிறார், ஆன்மீகக் கோள்களில் ஒன்றில் அவர் நிலைக்கிறார். மாயாவாதிகளும் நுட்பமான மற்றும் தூய உடல்களை நீத்த பின்னர் ஆன்மீக வானை அடைந்தாலும், அவர்கள் ஆன்மீகக் கோள்களில் இருத்தப்படுவதில்லை; அவர்கள் விரும்புவதுபோல, பகவானின் திவ்ய உடலில் இருந்து வெளிப்படும் தெய்வீக ஒளியில் கலப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஸ்வ ஸ்ம்ஸ்தானம் எனும் சொல்லும் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஸ்வ ஸம்ஸ்தானம் எனும் சொல்லும் மிகவும் குறிப்பிடத்தக்கது. உயிரினம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறது போலவே அதனுடைய இருப்பிடமும் அமைகிறது. மாயையாகிய பிரம்ம ஒளி மாயாவாதிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் பரம புருஷ பகவானுடன், அவருடைய உன்னத வடிவமாகிய நாராயணனாக வைகுந்தங்களிலும் அல்லது கிருஷ்ணலோகத்தில் கிருஷ்ணருடனும் தொடர்புகொள்ள விரும்புபவர்கள், அந்த இருப்பிடங்களுக்குச் செல்வர், அங்கிருந்து அவர்கள் ஒருபோதும் பூமிக்குத் திரும்புவதில்லை.


(ஸ்ரீமத்-பாகவதம் 3.37.28-29  / பொருளுரை )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆





ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Telegram

🍁🍁🍁🍁🍁

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


ஆன்மீக கதைகளை படிக்க 👇


Whatsapp :- 

🍁🍁🍁🍁🍁


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...