Skip to main content

Posts

Showing posts from June, 2023

அதர பான்

  அதர  பான் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர்  ரத யாத்திரைக்கு பின் குண்டிசா கோவிலில் ஒரு வார காலம் உல்லாசமாக இருந்து, மீண்டும் ஶ்ரீ கோவிலை நோக்கி  உல்டா ரதயாத்திரை நிகழ்வு நடப்பது ஐதீகம்.  இந்த உல்டா ரதயாத்திரைக்கு அடுத்த நாள் அதாவது 11 ஆவது நாளான ஏகாதசி அன்று மூன்று விக்கிரகங்களுக்கும் அதர பான என்ற புத்துணர்ச்சி ஊட்டும்   பானம் வழங்கப்படுகிறது. அதர என்றால் உதடு, பான என்றால் பால்  சர்க்கரை, பாலாடை ,வாழைப்பழம், கற்பூரம், உலர் கொட்டைகள், மற்றும் மிளகு போன்றவற்றை கொண்டு உண்டாக்கப்பட்ட இனிப்பான வாசனையான பானம் என்று பொருள்படும். இந்தப் பொருள்கள் தவிர துளசி போன்ற புனிதமான மூலிகைச் சாறுகள் இந்த பானத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த பானங்கள் மூன்று விக்கிரகங்களின் உதடுகளை சென்றடையும் வகையில் மிகப்பெரிய மண் குவளைகளின் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பானம் ஓன்பது குவளைகளில் நிரப்பப்பட்டு ஒவ்வொரு விக்கிரகங்களுக்கும் தலா மூன்று குவளைகள் வீதம் அந்தந்த தேர்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.   கோயில் பூஜாரிகளால் சோடச உபசார் எனும் பூஜையின் மூலம் விக்கிரகங்களுக்...

பிரசாதத்தின் மகிமை

 

பிரசாதத்தின் மகிமை

 

பிரசாதத்தை ஏற்றுக்கொள்ளும் முறை

 

பிரசாதத்தை ஏற்றுக்கொள்ளும் முறை

 

நமது அர்ப்பணிப்பின் உண்மையான நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்

  கோவில் தெய்வ வழிபாட்டிற்காக அறுபத்து நான்கு விதிமுறைகள் உள்ளன . தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படும் பல பொருட்கள் உள்ளன . சில மதிப்பு மிகுந்தவை , சில குறைவான மதிப்புடையவை . “ ஒரு பக்தர் எனக்குச் சிறிய மலர் , இலை , சிறிது நீர் அல்லது சிறிய பழத்தை அர்ப்பணித்தால் , நான் அதை ஏற்றுக்கொள்வேன் ” என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது . உண்மையான நோக்கம் என்னவென்றால் பகவானிடம் ஒருவருக்குள்ள அன்பான பக்தியை வெளிப்படுத்துவதாகும் ; அர்ப்பணிக்கப்படுபவை இரண்டாமிடம் பெறுகின்றன . ஒருவர் பகவானிடம் அன்பான பக்தியை வளர்க்காமல் , பலவித உணவுப் பொட்கள் , பழங்கள் , மற்றும் மலர்களை உண்மையான பக்தியின்றி அளிப்பாரானால் அது பகவானால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது . நாம் பரம புருஷ பகவானுக்கு இலஞ்சம் கொடுக்க முடியாது . அவர் மிகவும் சிறந்தவராதலால் , நமது இலஞ்சத்திற்கு மதிப்பில்லை , அவருக்கு எந்தத் தட்டுப்பாடும் கிடையாது . அவர் அவரிடமே நிறைந்திருப்பதால் , நாம் அவருக்கு என்ன கொடுக்க முடியும் ? எல்லாம் அவரால் உருவாக்கப்படுகின்றன . நாம் பகவானிடம் நமது அ...

கருணை

அதிகாலை பொழுதில் இமயமலைப் பகுதியில் உள்ள பத்ரிகாஸ்ரமத்தில் சூரியன் உதிக்கும் நேரம். அவ்வேளையில் வியாச முனிவர் சரஸ்வதி நதியில் குளித்து தனது நித்யானுஷ்டானங்களை முறையாக செய்த பின்னர், தனியாக அமர்ந்து தியானம் செய்தார். முக்காலமும் அறிந்த மகாமுனியான அவர் ஞான திருஷ்டியில் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தையும் அவரால் பார்க்க முடிந்தது. அப்போது  துவாபர யுகத்தின் முடிவு காலம் .  வெகுவிரைவில் கலியுகம் நெருங்கிக் கொண்டிருப்பதையும், கலியுகத்தில் பிறக்கப்போகும் மக்களிடம் பல்வேறு குறைகளைக் கண்டார். மாமுனிவர் வியாசர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சத்யாவேஷ  அவதாரம். கலியுக மக்களுக்கு நன்மை செய்ய நினைத்த அவர் "கலியுகத்தின் மக்கள் பெரும்பாலும் அற்ப ஆயுளுள்ளவர்களாகவும், சண்டைப் பிரியர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், அதிர்ஷ்டமற்றவர்களாகவும், அனைத்திற்கும் மேலாக எப்பொழுதும் அமைதியற்றவர்களாகவும் உள்ளனர் என்பதை கண்ட அவர், மனிதகுலத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வுகள் மற்றும் நல்வழிகள் வேதங்களில் மட்டுமே சிறப்பாக உள்ளது, ஆதலால், வேதங்களின் அறிவை  மிகவும் எளிமையான வடிவத்தில் அ...

அலர்நாத் திருக்கோயில்

  அலர்நாதரின் வரலாறு  வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி பக்தி உணர்ச்சியை தூண்டக்கூடிய சின்னஞ்சிறிய இக்கோயில் ஆன்மீக ஏக்கத்தின் இருப்பிடமாகத் திகழ்கிறது. ஜகந்நாத் புரியில் வருடாந்திர ரத யாத்திரைக்கு முன்பாக பகவான் ஜகந்நாதர் இரண்டு வாரம் ஓய்வெடுக்கும் காலம் அனவஸர எனப்படும். அச்சமயத்தில் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அலர்நாத்தில் தங்கியிருப்பார். தனது அன்பிற்குரிய ஜகந்நாதரின் தரிசனமின்றி பகவான் சைதன்யரால் புரியில் தனிமையில் வசிக்க இயலாது. பகவானை பிரிந்த ஏக்கத்தால் எழும் உயர்ந்த ஆன்மீக உணர்ச்சிகளை அவர் அலர்நாத்தில் வெளிப்படுத்துவார். அலர்நாத் திருக்கோயில் புரிக்குப் பதினேழு கிலோ மீட்டர் மேற்கில், கடலுக்கு ஐந்து கிலோ மீட்டர் உட்புற நிலத்தில் அமைந்துள்ளது. . அலர்நாத் செல்வதற்கு பகவான் சைதன்யர் கடற்கரையின் ஓரமாக நடந்து செல்வார், ஆனால் இன்று பெரும்பாலான யாத்திரிகள் பேருந்தில் செல்கின்றனர். 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 பகவான் அலர்நாதர் நான்கு கரங்களுடைய மஹாவிஷ்ணுவாக வீற்றுள்ளார், அவரது வாகனமான கருடன் கைகூப்பி குனிந்து அவரது பாதத்தில் பிரார்த்தனை செய்கிறார், அவரது துணைவியர்களான ஸ்ரீதேவி...

நான்கு சம்பிரதாயங்கள் அடிப்படை விளக்கம்

  ஸம்ப்ரதாய விஹினா யே மந்த்ராஸ் தே நிஷ்ஃபலா: மத: அத: கலௌ பவிஷ்யந்தி சத்வார: ஸம்ப்ரதாயின:  ஸ்ரீ-ப்ரஹ்ம-ருத்ர-சனகா வைஷ்ணவா: க்ஷிதி-பாவனா: சத்வாரஸ் தே கலௌ பாவ்யா ஹி உத்கலே புருஷோத்தமாத்  ராமானுஜம் ஸ்ரீ: ஸ்வீ-சக்ரே மத்வாசார்ய சதுர்முக: ஸ்ரீவிஷ்ணு-ஸ்வாமினாம் ருத்ரோ நிம்பாதித்யம் சது:ஸன: குருசீடப் பரம்பரையில் இடம்பெறாத மந்திரங்கள் பலனை அளிக்காது. ஆகையால் நான்கு சீடப் பரம்பரையின் ஸ்தாபகர்களான  ஸ்ரீலக்ஷ்மி,  பிரம்மதேவர், ருத்திரர்  (சிவபெருமான் ), நான்கு குமாரர்கள் ஆகியோர் கலியுகத்தில் இவ்வுலகினைத் தூய்மைப்படுத்த புருஷோத்தம க்ஷேத்ரமான  உத்கலத்தில்(ஒரிஸா )தோன்றி லக்ஷ்மி ராமானுஜரையும் நான்கு முகம் கொண்ட பிரம்ம தேவர் மத்வாசாரியரையும் ருத்ரர் விஷ்ணுஸ்வாமியையும் நான்கு குமாரர்கள் நிம்பாதகத்யரையும் ஏற்றுக் கொள்வர்  (பத்ம புராணம் ) ருத்ர சம்பிரதாயம்:  💐💐💐💐💐💐💐💐💐💐💐 இது சிவபெருமானால் விஷ்ணு ஸ்வாமியை ஆச்சாரியராகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டதாகும். மிகச்சிறந்த வைஷ்ணவரான சிவபெருமான் எப்பொழுதும் ராம நாமத்தை ஜபம் செய்வதாகவும் அதுவே தனக்கு திருப்தியளிப்பதாக...