Skip to main content

நமது அர்ப்பணிப்பின் உண்மையான நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்

 


கோவில் தெய்வ வழிபாட்டிற்காக அறுபத்து நான்கு விதிமுறைகள் உள்ளன. தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படும் பல பொருட்கள் உள்ளன. சில மதிப்பு மிகுந்தவை, சில குறைவான மதிப்புடையவை. “ஒரு பக்தர் எனக்குச் சிறிய மலர், இலை, சிறிது நீர் அல்லது சிறிய பழத்தை அர்ப்பணித்தால், நான் அதை ஏற்றுக்கொள்வேன்என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. உண்மையான நோக்கம் என்னவென்றால் பகவானிடம் ஒருவருக்குள்ள அன்பான பக்தியை வெளிப்படுத்துவதாகும்; அர்ப்பணிக்கப்படுபவை இரண்டாமிடம் பெறுகின்றன. ஒருவர் பகவானிடம் அன்பான பக்தியை வளர்க்காமல், பலவித உணவுப் பொட்கள், பழங்கள், மற்றும் மலர்களை உண்மையான பக்தியின்றி அளிப்பாரானால் அது பகவானால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நாம் பரம புருஷ பகவானுக்கு இலஞ்சம் கொடுக்க முடியாது. அவர் மிகவும் சிறந்தவராதலால், நமது இலஞ்சத்திற்கு மதிப்பில்லை, அவருக்கு எந்தத் தட்டுப்பாடும் கிடையாது. அவர் அவரிடமே நிறைந்திருப்பதால், நாம் அவருக்கு என்ன கொடுக்க முடியும்? எல்லாம் அவரால் உருவாக்கப்படுகின்றன. நாம் பகவானிடம் நமது அன்பையும் நன்றியையும் காட்டும் பொருட்டு பற்பல பொருட்களை அர்ப்பணிக்கின்றோம்.

பகவானுக்குக் காட்டும் இந்த நன்றியும் அன்பும், ஒவ்வொரு உயிரினத்திலும் பகவான் வாழ்கிறார் என்பதை அறியும் தூய பக்தரால் வெளிப்படுத்தப்படுகிறது. கோவில் வழிபாடு பிரசாதம் வழங்குதலையும் நிச்சயமாக உள்ளடக்கியது. ஒருவர் தன் சொந்த வீட்டில் அல்லது சொந்த அறையில் கோவில் கட்டி, பகவானுக்குச் சிலவற்றை அர்ப்பணித்து, பின்னர் உண்ண வேண்டும் என்பதல்ல. ஆம், அது வெறும் சமையல் செய்து, பகவானுடன் ஒருவர் கொண்டுள்ள தொடர்பைப் புரிந்துகொள்ளாமல் உண்பதை விட மேலானது; இந்த விதத்தில் செயல்புரியும் மக்கள் விலங்குகள் போன்றவர்கள். ஆனால் இறைவனைப் புரிந்துகொள்ளுதலின் மேலான நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள விரும்பும் பக்தர் பகவான் எல்லா உயிரினத்திலும் உள்ளார் என்று அறிய வேண்டும். முந்தைய ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, ஒருவர் பிற உயிரினங்களிடம் கருணையுள்ளவராக இருக்க வேண்டும். ஒரு பக்தர் பகவானை வழிபட வேண்டும், அதே நிலையில் உள்ளவர்களிடம் நட்புடன் இருக்க வேண்டும், அறியாமையில் உள்ளவர்களிடம் கருணையுடன் இருக்க வேண்டும். ஒருவர் பிரசாதம் வழங்குவதன் மூலம் அறியாமை நிறைந்த உயிர்களிடம் தன் கருணையை வெளிப்படுத்த வேண்டும். அறியாமையுள்ள மக்களுக்கு பிரசாதம் வழங்கும் செயல் பரம புருஷ பகவானுக்கு வழிபாடு செய்யும் மனிதர்கள் ஆற்ற வேண்டிய முக்கியமான பணியாகும்.

உண்மையான அன்பும் பக்தியும் பகவானால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மிகுந்த மதிப்புள்ள உணவுப் பொருட்கள் ஒருவருக்குப் பரிசளிக்கப்படலாம். ஆனால் அந்த மனிதருக்குப் பசி இல்லையென்றால், அந்தப் படையல்கள் அவருக்குப் பயனற்றவை. அதுபோல, நாம் தெய்வத்திற்குப் பல மதிப்புள்ள பொருட்களை அர்ப்பணிக்கலாம். ஆனால் நமக்கு உண்மையான பக்தி உணர்வும், எங்கும் பகவான் நிறைந்திருக்கிறார் என்ற உணர்வும் இல்லையென்றால், நமது பக்தித் தொண்டில் குறைபாடு உள்ளது என்று பொருள். அந்த அறியாமையுள்ள நிலையில் நாம் பகவானால் ஏற்றுக்கொள்ளக் கூடிய எதையும் அர்ப்பணித்துப் பயனில்லை.


ஶ்ரீமத் பாகவதம் 3.29.24 / பொருளுரை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏




Comments

  1. Hare Krishna dear admin.. why now a days not able copy paste articles?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...