Skip to main content

அர்த்தமற்ற பேச்சு

 


விலஜ்ஜமானயா யஸ்ய ஸ்தாதும் ஈஷா-பதேமுயா
விமோஹிதா விகத்தந்தே மமாஹம் இதி துர்திய:


மொழிபெயர்ப்பு

பகவானின் மாயா சக்தி, தனது தாழ்ந்த நிலையைக் குறித்து வெட்கம் அடைந்திருப்பதால், அவளால் உயர்ந்த ஸ்தானத்தை ஏற்க முடியவில்லை. ஆனால் அவளால் குழப்பத்திற்கு ஆளானவர்கள், “நான்”, “எனதுஎன்று எண்ணங்களில் ஆழ்ந்திருப்பதால் எப்பொழுதும் அர்த்தமற்ற பேச்சிலேயே ஈடுபட்டுள்ளனர்.


பொருளுரை

முழுமுதற் கடவுளின் வெல்லுதற்கரியதும், சக்தி வாய்ந்ததுமான மாயா சக்தியால் அல்லது அறியாமையைப் பிரதிநிதிக்கும் தாழ்ந்த சக்தியால், உயிரோட்டம் கொண்ட அகில உலகையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட முடியும். இருப்பினும் பரமபுருஷரின் எதிரே நிற்பதற்குரிய போதுமான வலிமை அதற்கு இல்லை. அறியைமை முழுமுதற் கடவுளின் பின்புறத்தில் உள்ளது. அங்கு ஜீவராசிகளைத் தவறான வழியால் திருப்புவதற்குப் போதுமான வலிமையை அது பெற்றிருக்கிறது. அர்த்தமற்ற பேச்சைப் பேசுவதே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளவர்களுக்குரிய முக்கிய அறிகுறியாகும். அர்த்தமற்ற பேச்சுக்கள் வேத இலக்கியங்களால் ஆதரிக்கப்பட வில்லை. மேலும் அர்த்தமற்ற பேச்சுக்கு முதற்படியாக இருப்பதுநான, எனதுஎன்ற எண்ணமாகும். இறை உணர்வற்ற நாகரீகம் இத்தகைய போலி எண்ணங்களால் ஆளப்படுகிறது. மேலும் உண்மையான இறை உணர்வைப் பெறாத இத்தகைய மனிதர்கள் பொய்யான ஒரு கடவுளை ஏற்றுக் கொள்கின்றனர். அல்லது மாயா சக்தியால் ஏற்களவே குழம்பிப் போயிருக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக, தாங்களே கடவுள் என்று பொய்யாக அறிவிக்கின்றனர். ஆனால் பகவானின் எதிரே இருப்பவர் களும், அவரிடம் சரணடைபவர்களும் மாயா சக்தியால் வசியப்படுத்தப்பட முடியாது: எனவேநான், எனதுஎனும் தப்பான கருத்துக்களிலிருந்து அவர்கள் விடுபட்டவர் களாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் ஒரு பொய்க் கடவுளை ஏற்பதுமில்லை, தங்களை பரமபுருஷருக்குச் சமமானவர்களாக காட்டிக் கொள்வதுமில்லை. குழப்பத்தில் ஆழ்ந்துள்ளவனின் அடையாளம் இப்பதத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.


ஶ்ரீமத் பாகவதம் 2.5.13


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...