Skip to main content

ஸ்ராத்தம் (திவசம்) என்றால் என்ன ?

 


ஸ்ராத்தம் என்பது வேதத்தைப் பின்பற்றுபவர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சடங்கு முறையாகும். இது ஓர் ஆண்டில் 15 நாட்கள் நடைபெறும். அப்பொழுது சடங்கு முறைகளைச் செய்யும் மதவாதிகள், பிரிந்து சென்ற ஆன்மாக்களுக்குப் படையல் கொடுக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர். இவ்வாறு அந்த பிதாக்களும் முன்னோர்களும், இயற்கையின் மாற்றங்களால், ஜடவுலக இன்பம் அனுபவிக்க முழுமையான உடல் இல்லாத நிலையில் அவர்கள் சந்ததியினரால் தரப்படும் ஸ்ராத்தப் படையலினால் மீண்டும் அத்தகைய உடல்களைப் பெற முடியும். ஸ்ராத்தம் அல்லது பிரசாதத்துடன் தரும் படையல் நிகழ்ச்சி இன்றும் இந்தியாவில், சிறப்பாக கயா நகரில் இருக்கின்றது. அங்கு புகழ் வாய்ந்த கோயிலில் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் படையல் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு பகவான் சந்ததிகளின் பக்தித் தொண்டினால் மகிழ்வதால், அவருடைய அருளால் முழு உடலற்ற முன்னோர்களின் கண்டனத்துக்கு உரிய ஆன்மாக்களை விடுவிக்கிறார். ஆன்மீக முன்னேற்ற வளர்ச்சிக்காக, அவர்கள் மீண்டும் முழு உடலைப் பெறுவதற்கு உதவுகிறார்.

துரதிர்ஷ்டவசமாக, மாயையின் பாதிப்பினால், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா, புலன் திருப்திக்காக தான் பெற்ற உடலை உபயோகிக்கிறது. இப்படிச் செய்வதால், அந்த ஆன்மா அருவ உடலுக்குத் திரும்பிவிடும் என்பதை அது மறந்துவிடுகிறது. பகவானின் பக்தன் அல்லது கிருஷ்ணரைப் பற்றிய உணர்வில் இருப்பவர், ஸ்ராத்தம் போன்ற சடங்கு முறைகளை நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், அவர் எப்போதும் பகவானை மகிழ வைக்கிறார். அதனால் அவருடைய பிதாக்களும் முன்னோர்களும் துன்பத்தில் இருந்திருந்தால் தானாவே அதிலிருந்து விடுதலை பெறுவார்கள். இதற்குத் தக்க சான்று பிரஹ்லாத மஹாராஜா ஆவார். பிரஹ்லாத மஹாராஜா பாவம் செய்த தன் தந்தையை விடுவிக்கும்படி பலமுறை பகவானின் தாமரைப் பாதங்களை வேண்டினார். பிரஹ்லாதரைப் போன்ற வைஷ்ணவர் பிறந்த குடும்பத்தில், அவருடைய தந்தை மட்டும் அல்லாமல் அவர் தந்தையின் தந்தை, அவர்களின் பிதாக்கள், பதினான்காவது தந்தை வரை, தானாகவே விடுவிக்கப் பெறுவார்கள் என்று பகவான் பதிலளித்தார். அதனால், முடிவு என்னவென்றால், எல்லா உயிர்ப் பொருள்களுக்கும், சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் கிருஷ்ணரைப் பற்றிய ஒட்டு மொத்தமான உணர்வு தேவை. சைதன்ய சரிதாம்ருதத்தில் ஆசிரியர் கூறுகிறார்: கிருஷ்ணர் பற்றிய உணர்வு நிலையைக் கற்று அறிந்தவர் எந்த சடங்குகளையும் செய்யமாட்டார். ஏனென்றால் கிருஷ்ணர் பற்றிய முழு உணர்வு நிலையில் கிருஷ்ணருக்குத் தொண்டு செய்தால் எல்லா சடங்குகளும் தானாகவே செய்யப்பட்டுவிடும்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 3 .20.43 / )



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...