Skip to main content

பித்ரு வ்ரதம் / கயா ஸ்ராத்தம்



பகவத் கீதையில் (9.25) “பித்ரூன் யாந்தி பித்ரு வ்ரதா:” என்று கூறப்பட்டிருக்கிறது. குடும்ப நலத்தில் அக்கறை கொண்டவர்கள் “பித்ரு வ்ரதா:” என்று அழைக்கப்படுகின்றனர். பித்ரு லோகம் என்றொரு உலகம் இருக்கிறது. அதன் தலைவன் அர்யமான் ஆவான். அவனும் ஒரு தேவனைப் போன்றவன்தான். மேலும் அவனை திருப்திப்படுத்துவதின் மூலம் ஒருவன் பேய்களாய்த் திரியும் தனது குடும்ப உறுப்பினர்கள் பூத உடல் பெறுமாறு உதவலாம். தனது குடும்பத்திடமும், கிராமத்திடமும், நாட்டிடமும் மிகுந்த பற்றுக் கொண்டு, பாவமும் செய்தவர்கள் பஞ்சபூதங்களினாலான பூத உடலைப் பெறுவதில்லை. மாறாக மனம், புத்தி, ஆணவம் என்பவற்றினாலான நுண்ணுடலையே பெறுகின்றனர். இந்நுண்ணுடல்களில் இருப்பவர்களே பேய்கள் எனப்படுவர். இந்தப் பேய்களின் நிலை மிகவும் துன்பமானது, அவர்களிடம் மனம், புத்தி, ஆணவம் போன்றவை இருந்தும் பூதஉடல் இல்லாததினால் அவர்கள் பௌதீக இன்பங்களை விரும்பி தொல்லைகள் கொடுக்கின்றனர். அக்குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக மகன் அர்யமான் தேவன் அல்லது பகவான் விஷ்ணுவிற்கு நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். காலங்காலமாகவே இந்தியாவில் ஒரு குடும்பத்தின் மூத்த மைந்தன் கயா என்ற ஊருக்குப் போய் அங்கிருக்கும் விஷ்ணு கோவிலில் பேயாக அலையும் தன் தந்தையின் நன்மைக்காக பொருள்களைப் படைக்கிறான். அதற்காக எல்லோரின் தந்தையரும் பேய்களாக அலைகின்றனர் என்று அர்த்தமல்ல. பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளுக்கு பிண்டங்களை அர்ப்பணிப்பதின் மூலம் அவனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் பேய்களாக மாறியிருந்தால் அவர்கள் பூதஉடல் பெறுவதற்கு அவன் உதவி செய்கிறான். ஆயினும் ஒருவன் பகவான் விஷ்ணுவின் பிரசாதத்தினை வழக்கமாக உண்டு கொண்டிருந்தான் என்றால் அவன் பேயாக அல்லது இழிபிறவியாக மாறும் வாய்ப்பே இல்லை. வேத நாகரீகத்தில் “சிரார்த்தம்” என்றழைக்கப்படும் ஒரு விழா இருக்கிறது. அதில் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் உணவுகள் அளிக்கப்படுகின்றன. ஒருவன் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பகவான் விஷ்ணுவின் திருவடித் தாமரைகளுக்கோ அல்லது அவரது பிரதிநிதியான பித்ரு லோகத்தைச் சேர்ந்த அர்யமானுக்கோ பிண்டங்களைப் படைத்தல், அவனது மூதாதையர்கள் மீண்டும் பூதஉடல்களைப் பெற்று அவர்கள் அனுபவிக்க வேண்டிய உலக இன்பங்களை எல்லாம் அனுபவிப்பர். அதாவது அவர்கள் மீண்டும் பேய்களாக மாறமாட்டார்கள் என்று கூறலாம்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 4 .18.18  / )



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...