Skip to main content

மகா பிரசாதத்தின் மகிமை


 மகா பிரசாதத்தின் மகிமை




புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு நைவேதித்த பிரசாதமானது விமலா தேவிக்கு அர்ப்பணிக்கும் போது அது மகா பிரசாதமாக மாறி விடுகிறது. இந்த மஹா பிரசாதத்தை உலர்த்தி, சிறிய துணி கிழிகளில் கட்டி , உலர்ந்த நிர்மால்ய பிரசாதமாக விற்பனைக்கு வைத்திருப்பார்கள் .பகவான் ஶ்ரீ ஜெகன்நாதருடைய பக்தர்கள் மணிக்கணக்கில் மிக நீண்ட வரிசையில் நின்று இந்த நிர்மால்ய மகா பிரசாதத்தை விரும்பி வாங்குவார்கள். ஏனென்றால் மகா பிரசாதத்தை ஏற்பதன் மூலம் அவர்கள் மிகப்பெரிய புண்ணியத்தை அடைவதாக நினைக்கின்றார்கள்.

ஒடிசா மக்கள் தங்கள் தினசரி பூஜைக்கு பிறகு கடுகளவேணும் நிர்மால்ய பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதற்காக அதை பாதுகாத்து வைக்கிறார்கள். ஒரிசா மக்களிடம் ஒரு முக்கியமான பழக்கம் என்னவென்றால் திருமணப் பேச்சு வார்த்தையின் போது மணப்பெண் மற்றும் மணமகன் நிர்மால்யத்தை தங்களது கைகளால் பற்றிக்கொண்டு , இந்தப் பேச்சு வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதாகவும் இதிலிருந்து மாற மாட்டோம் என்று சத்தியம் செய்கிறார்கள். மேலும் மரண சமயத்தில் நிர்மால்ய பிரசாதத்தையும், புனித துளசியும் தண்ணீருடன் சேர்த்து வாயில் ஊற்றப்படுகிறது. அதன் அடிப்படை நம்பிக்கை என்னவென்றால் மரணத்திற்குப் பிறகு இதை உட்கொண்டதால் ஆத்மா எமனுடைய தண்டனையிலிருந்து காப்பாற்றப்படும். இது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

மகா பிரசாதத்திற்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது திரேதாயுகத்தில் பத்து தலை அசுரனான இராவணனை வென்ற பிறகு பிரபு இராமச்சந்திர மூர்த்தியும் லக்ஷ்மணனும் மற்றவர்களும் அப்போதுதான் அயோத்திக்குத் திரும்பினார்கள். அயோத்தியா வாசிகளும் அவர்களுடைய வீரதீர செயல்களை கேட்டு மகிழ்ச்சியில் இருந்தனர்...லக்ஷ்மணனுடைய மனைவி ஊர்மிளா மிகவும் அமைதியாக அவர்கள் பேசுவது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தாள்.... எல்லோரும் லக்ஷ்மணன் இந்திரஜித்தை கொன்றதையும், இந்திரஜித்தின் பலத்தையும், அவன் பெற்றிருந்த ஒரு வரத்தை பற்றியம் பேசி கொண்டிருந்தார்கள். இந்திரஜித் பெற்ற வரம் என்னவென்றால், எவனொருவன் பதினான்கு வருடம் தொடர்ந்து சாப்பிட வில்லையோ.... எவன் ஒருவன் தொடர்ந்து பதினான்கு வருடங்கள் தூங்கவில்லையோ .அவன் மட்டுமே இந்திரஜித்தை கொல்ல முடியும் என்பதாகும்.

அரண்மனையில் அன்று மாலையே இந்த செய்திக்குப் பின் உள்ள உண்மையை பற்றி அறிய ஒரு கூட்டம் கூடியது பிரபு ராமர் லட்சுமணனை பார்த்து, லக்ஷ்மணா! நீ பதினான்கு வருடங்களாக உணவு உண்ணாவில்லை என்றால் பஞ்சவடியில் நாம் தங்கியிருந்த போது நான் தந்த உணவு பொட்டலங்களை என்ன செய்தாய் என்று வினவினார் ? லக்ஷ்மணன் பிரபுவே நான் அந்த உணவு பொட்டலங்களை பஞ்சவடியில் ஷமி மரத்தில் உள்ள ஒரு பெரிய துவாரத்தில் வைத்திருக்கிறேன் என்றார் . இதை மெய்ப்பிப்பதற்க்காக இராமர் ஹனுமானை நீ இப்போது பஞ்சவடிக்கு சென்று ஷமி மரப்பொந்தில் வைக்கப்பட்டிருக்கும் உணவு பொட்டலங்களை எடுத்து வா என்றார் .

புத்திசாலியான ஹனுமானுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இருந்தும். யுத்த பூமியில் இந்திரஜித்தின் அம்பால் மயக்கமடைந்த லஷ்மணனை காக்க சஞ்ஜீவினி மலையை ஒற்றை கையால் கொண்டு வந்த நான், அந்த உணவு பொட்டலங்களை கொண்டு வர வேண்டுமா என்று சிறுது தயக்கத்துடன் எடுத்து வர புறப்பட்டார்.

பஞ்சவடியை அடைந்த ஹனுமான் அந்த உணவு பொட்டலங்களை பார்த்தார் ...ஆனால் அதை அவரால் எடுக்க முடியவில்லை. இறுதியில் மிகவும் பணிவாக தனது எஜமானிடம் தனது இயலாமையை பணிவுடன் தெரிவித்தார் ஹனுமான் .அவரால் அந்த உணவு பொட்டலங்களை தனது அஹங்காரத்தினால் சுமக்க முடியாமல் போனது என்று பிரபு ராமன் புரிந்துகொண்டார். இறுதியில் லக்ஷ்மணன் கூறினார் மரியாதைக்குரிய எனது சகோதரனே நான் அந்த உணவு பொட்டலங்களை பஞ்சவடியில் இருந்து கொண்டு வருகிறேன் என்றார்.

லக்ஷ்மணன் தனது பலம் பொருந்திய அம்பினால் அந்த உணவு பொட்டலங்களை கொண்டுவந்தார் அவை எல்லாம் ஸ்ரீராமர் முன்பாக சமர்ப்பிக்கபட்டது. பிரபு ஸ்ரீராமச்சந்திரன் அதிசய பட்டவராக ஆஞ்சநேயரிடம் பதினான்கு வருடங்களாக சேமிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை சரி பார்க்க சொன்னார் . அப்படி சரிபார்த்தபோது அதில் ஏழு பொட்டலங்கள் மட்டும் குறைவதாக கூறினார்.

பிரபு ராமர் லக்ஷ்மணனிடம் இருந்து ஏழு உணவுப் பொட்டலங்கள் குறைந்ததைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டார். லக்ஷ்மணன் மிகவும் பணிவாக அதன் காரணத்தை விளக்குகின்றேன் என்று கூறினார். நாம் இருவரும் காட்டில் இருக்கும்போது, தந்தையின் மரணச் செய்தியைக் கேட்ட போது தாங்கள் அன்று எனக்கு முதல் முறையாக உணவு அளிக்க வில்லை. இராவணன் பஞ்சவடியில் இருந்து சீதையை கடத்திக் கொண்டு சென்ற போது தாங்கள் எனக்கு இரண்டாவது முறையாக உணவு அளிக்க வில்லை. மூன்றாவது முறை லங்கேஸ்வரிக்கு முன்பு பலிகொடுக்க பாதாளம் சென்ற போது நாம் இருவரும் உணவு உட்கொள்ளவில்லை . இந்திரஜித்தின் பானத்தால் மயங்கி விழுந்த நான் அன்று நான்காவது முறையாக உணவு உட்கொள்ளவில்லை . இந்திரஜித் தலை துண்டிக்கப்பட்ட போது நான் ஐந்தாவது முறையாக உணவு உட்கொள்ளவில்லை. நீங்கள் ராவணனை சிரச்சேதம் செய்த போது ஆறாவது முறையாக உணவு உட்கொள்ளவில்லை. புலஸ்தியர் ரிஷியின் மைந்தனான, இராவணன். பிராமணன்னாவான் அந்த இராவணனை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்ததாக நீங்கள் எண்ணினீர்கள். அப்போது ராவணனின் மரணத்திற்கு இலங்கையில் துக்கம் அனுஷ்டித்த போது அதில் கலந்து கொண்டு உணவு உண்ணாமலே நாம் லங்கையை விட்டு கிளம்பினோம்.

பிரபு இராமர் லக்ஷ்மணனுடைய மிக உயர்ந்த தியாகத்தினாலும் அர்ப்பணிப்பு உணர்வினாலும் தழுதழுத்து லக்ஷ்மணனுடைய தியாகம் ஈடு இணை இல்லாதது என்று கூறினார். பின்பு மிகவும் உன்னதமான தியாகம் புரிந்த லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவை புகழ்ந்து கூறினார். லக்ஷ்மணன் இல்லாமல் பதினான்கு வருடங்கள் ஊர்மிளா கழிக்க நேர்ந்தது.

நான் எனது மனைவியுடன் பதினான்கு வருடங்கள் காட்டில் கழித்தேன் ஆனால் ஊர்மிளா மிகவும் உயர்ந்த தியாகம் செய்திருக்கின்றாள்..…. இந்த பதினான்கு வருடங்களும் லக்ஷ்மணனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள் எல்லா புகழும் ஊர்மிளாவிற்கே என்று கூறினார்.

அயோத்தியாவில் நமக்கு மூன்று சிம்மாசனங்கள் இருக்கிறது ஒன்று எனக்கு மற்றொன்று சீதைக்கு மற்றொன்று லக்ஷ்மணனுக்கு. இன்றிலிருந்து ஊர்மிளாவிற்காக நான்காவது சிம்மாசனம் ஏற்பாடு ஆகட்டும் என்று ஆணையிட்டார்.

ஊர்மிளா கூப்பிய கரங்களுடன் ராஜா ராமரிடம் கூறினாள் .....எனக்கு சிம்மாசனத்தின் மீது எந்த பற்றுதலும் இல்லை..... எனக்கு உங்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் மட்டும் அளிக்க வேண்டும் எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை என்றாள்.

ராமர் மிகவும் மகிழ்ந்து அவளிடம் வேறு ஏதாவது வரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறினார்.... அப்போது மிகவும் பணிவுடன் இருகரம் கூப்பி தாங்கள் எனக்கு ஏதாவது வரம் தர நினைத்தால் இனி வரும் காலங்களில் எனக்காக கோவில்களோ அல்லது வழிபாடோ கூடாது. நான் எல்லோருக்கும் மனம் தரும் ஒரு ஊதுபத்தியாக இருக்க விரும்புகின்றேன். இனிவரும் காலங்களில் நான் தங்களது தாமரை பாதத்திற்கு கீழ் நிவேதனமாக இருக்க விரும்புகின்றேன் எனக் கூறினாள்

பகவான் ஶ்ரீ ராமசந்திரன் ஊர்மிளாவின் பக்தியை கண்டு பின்வருமாறு கூறினார் .... வரப்போகும் கலியுகத்தில் நான் பூரி க்ஷேத்திரத்தில் அவதரிக்கும் போது லக்ஷ்மிதேவி எனது அருகில் இருக்க மாட்டாள் . லக்ஷ்மணன் எனது மூத்த சகோதரராக பலராமர் என்ற பெயருடன் என் அருகில் இருப்பார். எனக்கு நெய்வேதியம் செய்யப்படும் எந்த பிரசாதமும் விமலாதேவிக்கு நைவேத்தியம் செய்யப்படும். பிறகுதான் அது மகா பிரசாதமாக மாறுகிறது .நீ மகா பிரசாதமாக இருப்பாய். உமது இனிய நறுமணத்தால் தெய்வீகத்தை பரப்புவாய்.... .நீ மகா பிரசாதமாகவும் நிர்மால்யமாகவும் வரும் காலங்களில் விளங்குவாய். பக்தர்கள் உன்னை வழிபட்டு புண்ணியம் அடைவார்கள். ராமர் மேலும் கூறினார் கலியுகத்தில் நீ அன்ன பிரம்மமாக வழிபட படுவாய் ஊர்மிளா மேலும் வேண்டினாள் ...நீங்கள் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் போது நான் வங்கக் கடலில் ஒரு நீர்க்குமிழியாக வந்து தங்களது பொற்பாதங்களை தொட வேண்டும்... இந்த வரங்களை ஊர்மிளாவிற்கு வழங்கிய ஶ்ரீராமர் கூறினார் ஊர்மிளா உன்னுடைய தன்னலமற்ற அன்பும் தியாகமும் ஈடு இணையற்றது.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...