Skip to main content

காளியன் யமுனை நதியில் வசிக்க காரணம்

 


காளியன் யமுனை நதியில் வசிக்க காரணம்


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



பஹுலாஸ்வ மன்னன் கேட்டான், 'ரமணகத் தீவில் வாழ்ந்த மற்ற பாம்புகளை விட்டு விட்டு காளிய நாகத்திற்கு மட்டும் கருடனிடம் பயம் உண்டானது ஏன்? இந்த விஷயத்தைக் கூறுங்கள்


ஸ்ரீ நாரதர் கூறினார் : மன்னா ! நாகங்களை அழிப்பவரான கருடன் ரமணகத் தீவிற்கு ஒவ்வொரு நாளும் சென்று ஏராளமான பாம்புகளை அழித்து வந்தார். அதனால் பயமும் கவலையுமடைந்த அங்கிருந்த நாகங்கள் ஒருநாள் கருடனிடம் இவ்வாறு கூறின." 'கருடனே, உனக்கு வணக்கம். நீ சாக்ஷாத் பகவான் விஷ்ணுவின் வாஹனமாவீர். இவ்விதம் நீங்கள் சர்ப்பங்களைச் சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்களானால் எங்கள் வாழ்விற்குப் பாதுகாப்பு ஏது? ஆகவே ஒவ்வொரு மாதமும் ஒருமுறை ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு சர்ப்பத்தை பலியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் வனஸ்பதி அல்லது அமுதத்திற்கு நிகரான இனிப்பு அன்னமும் உங்களுக்கு அளிக்கப்படும். அவற்றை முறைப்படி நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.


கருடன் கூறினார்: 'நீங்கள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பாம்பை பலியாக ஒவ்வொரு நாளும் அளித்து வாருங்கள். பாம்பைத் தவிர நான் வேறு எந்த பலியாலும் என் வயிறு நிறையப் போவது இல்லை. 


நாரதர் கூறினார்: 'கருடன் இவ்வாறு கூறவே எல்லா சர்ப்பங்களும்  தங்களைக் காத்துக் கொள்வதற்காக ஒவ்வொன்றாக கருடனுக்கு தினமும் திவ்ய பலி அளிக்கலாயின அரசே! காளியனின் வீட்டு பலி கிடைக்க வேண்டிய சமயம் வந்தபோது அவன் கருடனுக்கு அளிக்கப்படும் பொருட்கள் அனைத்தையும் தானே சாப்பிட்டுத் தீர்த்தான். அப்போது மிகுந்த கோபத்தோடு கருடன் வந்தார். வந்ததுமே காளிய நாகத்தைத் தன் கையால் அடித்தார். கருடனின் அந்தப் அடியால் காளியன் மூர்ச்சித்து விட்டான். பிறகு எழுந்து பெருமூச்சு விட்டபடியும்.  நாக்கால் வாயை நக்கியபடியும், பலசாலியான காளியன் தனது நூறு படங்களையும் விரித்து விஷப்பற்களால் கருடனை தீண்டினான்.


பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் திவ்ய வாகனனாகிய கருடன் அவனை அலகால் பற்றி பூமியின் மீது அறைந்தார். சிறகுகளால் தொடர்ந்து அடிக்கலானார். கருடனின் அலகிலிருந்து நழுவிய சர்ப்பம் தொடர்ந்து சீறியபடி அவரது சிறகுகளை இழுக்கலானான். . ரோஷம் நிறைந்த கருடன் மறுபடி காளியனை அலகால் பற்றி பூமியின் மீது அடித்தார். அவன் உடலை இழுக்கலானார். அப்போது பயந்த காளியன் கருடனின் அலகிலிருந்து விடுபட்டு ஓடலானான். அடக்கவொண்ணா ஆற்றல் கொண்ட பக்ஷிராஜன் கருடனும் அவனைப் பின்தொடர்ந்தார். ஏழு தீவுகள், ஏழு கண்டங்கள், ஏழு கடல்கள் வரை அவன் சென்ற இடங்களில் எல்லாம் கருடன் பின்தொடரக் கண்டான். அந்த நாகம் பூலோகம், புவர்லோகம் ஸ்வர்லோகம் மஹர்லோகம் எல்லாவற்றிற்கும் வரிசையாகச் சென்றான். அங்கிருந்து ஜனலோகம் சென்றான். அங்கும் கருடன் பின் தொடர்ந்தார்.  ஆகவே அவன் மறுபடி கீழே உள்ள லோகங்களுக்கும் சென்றான். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணனிடம் உள்ள பயத்தால் யாரும் அவனுக்கு உதவவில்லை எங்குமே தனக்கு ஆதரவு கிட்டாததால் அவன் தேவாதி தேவனான ஆதிசேஷ பகவானிடம் வந்தான். அவரை வணங்கி வலம்வந்து கைகுவித்து பெருத்த சரீரமுடைய காளியன் தீனனாக பயத்தோடு நடுங்கியவாறு கூறினான். 'புவனேஸ்வரா!, பூமியின் பாரம் போக்கும் பிரபோ உங்களுடைய விளையாட்டுகள் எல்லையற்றவை. நீங்கள் எல்லாம் வல்லவர். பூரண பராத்பர புராண புருஷர். என்னைக் காப்பாற்றுங்கள்


நாரதர் கூறுகிறார்: 'காளியனை தீனனாக பயத்தால் பீடிக்கப்பட்டவனாகக் கண்ட ஆதிசேஷன் இனிய சொற்களால் அவனை மகிழ்வித்தவாறு கூறலானார். காளியா!, உத்தமமான என் பேச்சை கேள். உலகில் எங்கும் உனக்குப் பாதுகாப்பு கிடையாது என்பதில் ஐயம் இல்லை. ஒரே உபாயம்தான் உள்ளது. அதைக் கூறுகிறேன் முன் காலத்தில் சௌபரி என்னும் பெயருடைய முனிவர் இருந்தார். அவர் பிருந்தாவனத்தில் யமுனை நீரினுள் பத்தாயிரம் ஆண்டுகள் தவமிருந்தார். அந்த நீரில் மீன் அரசனின் விளையாட்டை கண்டு அவர் மனதிலும் குடும்பம் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று விழைவுண்டாயிற்று. அவர் மகாராஜா மாந்தாதாவினுடைய நூறு புதல்விகளை மணந்து கொண்டார். ஸ்ரீஹரி அவருக்கு பரம ஐஸ்வர்ய, ஷாலினி, வைஷ்ணவி, போன்ற செல்வத்தை அளித்தார். அதைக்கண்ட மாந்தாதாவே அசந்து போய்விட்டார். செல்வம் பற்றிய அவரது ஆணவம் முழுவதும் வீணாகிவிட்டது. யமுனை நீரில் சௌபரி முனியின் நீண்டகாலத் தவம் தொடர்ந்து கொண்டிருந்த போது கருடன் அவ்விடத்தில் உணவுக்காக மீன்களை கொன்று தின்றார்.  மீன்களின் குடும்பம் மிகவும் துயரமுறுவதைக் கண்ட சௌபரி முனிவர், மற்றவர் துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல் கோபமுற்று கருடனுக்கு சாபமளித்தார். " பக்ஷி ராஜனே இன்றைய தினத்திலிருந்து நீ இந்தக் குண்டத்தினுள் பலவந்தமாக மீனை உண்பாயாகில் என் சாபத்தினால் அக்கணமே உன் உயிருக்கு முடிவுண்டாகிவிடும். என்றார்


 'அன்றைய நாளில் இருந்து கருடன் அங்கு ஒருபோதும் வருவதில்லை. களியா நீ என் சொற்படி உடனே ஸ்ரீ ஹரிக்குச் சொந்தமான வ்ருந்தாவனத்திற்குச் சென்றுவிடு அங்கு பயமின்றி யமுனையில் உன் இருப்பிடத்தை நியமித்துக்கொள். அங்கு உனக்கு கருடனால் பயமுண்டாகாது என்று ஆதிசேஷன் கூறினார்.


நாரதர் கூறுகிறார்: மன்னா, ஆதிசேஷ நாகம் இவ்வாறு கூறியதும் பயனடைந்த காளியன் தன் மனைவி மக்களோடு காளிந்தியில் வசிக்கத் தொடங்கினான். பிறகு ஸ்ரீ கிருஷ்ணன் அவனை யமுனையிலிருந்து கிளப்பி வெளியே அனுப்பினார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...