சீமந்தத்வீபத்தில் வீற்றிருக்கும் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம் வழங்கியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பாகம் 3 பகவான் ஶ்ரீ ஜகந்நாதரின் மறு அவதாரம் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத: த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி ஸோ’ர்ஜுன “எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின் மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகிறான்.” ( ஶ்ரீமத் பகவத்கீதை 4.9) பகவான் ஜகன்னாதர், பலருக்கும் புரியாத வகையில் தன்னுடையை இனிய விருப்பத்தால் தோன்றி மறைகிறார். யார் ஒருவர் இந்த அற்புதமான லீலைகளை புரிந்து கொள்கிறாரோ அவர்கள் மீண்டும் இந்த ஜட உலகில் பிறப்பதில்லை என்று பகவான் ஜகன்னாதர் (ஶ்ரீ கிருஷ்ணர்) பகவத்கீதையில் கூறுகிறார். ஜகதீசகங்குலியின் குடும்பம் மறைந்து பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர், முன்பு பகவான் ஜகன்னாதரின் கோவில் இருந்த இடத்தில் அடர்ந்த புதரின் நடுவில் நிறைய பாம்பு புற...