Skip to main content

Posts

மன்னர் ருக்மாங்கதன்

  மன்னர் ருக்மாங்கதன் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 மன்னன் ரிதத்வஜாவுக்குப் பின் அயோத்தியை அரசாண்டவன் ருக்மாங்கதன். முற்பிறவியில் அவன் ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன். ஒரு அந்தணருடன் ஏற்பட்ட நட்பால் அவருடன் தீர்த்த யாத்திரை சென்று, ஏகாதசி விரதத்தை அனுசரித்ததால் கிடைக்கப் பெற்ற புண்ணியத்தால் மறுபிறவியில் பார்புகழும் மன்னனாய்ப் பிறந்தான். அவனது பட்டத்து ராணி சந்தியாவளி, இளவரசன் தர்மாங்கதன். அரசன் ஆழ்ந்த விஷ்ணு பக்தன். மன்னன் எவ்வழி, மக்களும் அவ்வழி என்ற கொள்கையைத் தீவிரமாகக் கடைபிடிக்க வைத்தான். அதன்படி ஏகாதசி விரதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தான். விரதநாளுக்கு முன், யானை மீதேறி ராஜாங்கம் முழுதும் ஏகாதசி தினம் என்றைக்கு வருகிறது என முரசொலித்து அறிவிக்கச் செய்வான். அன்றைக்கு 8-லிருந்து 85 வயதானவர்கள் வரை அனைவரும் உள்ளத்தூய்மையுடன் விரதமேற்க வேண்டும் என ஆணையிடுவான்.  அரச கட்டளையால் மக்களும் உறுதியுடன் விரதம் மேற்கொண்டதால், யமதர்மராஜனுக்கு  வேலை பளு அறவே குறைந்து விட்டது. பாபம், புண்ணியங்களைக் கணக்கெடுக்கும்  சித்தி...

சபலா ஏகாதசி

 சபலா ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁 இந்த சபலா ஏகாதசி, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றுகிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார். ஓ! கிருஷ்ணா, மார்கழி மாத (டிசம்பர் / ஜனவரி) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் அதனை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பதை எனக்கு விவரமாகக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். பரத வம்சத்தில் சிறந்தோனே. பாம்புகளின் ஆதிசேஷன் எவ்வாறு சிறந்ததோ, பறவைகளில் கருடன் எவ்வாறு சிறந்ததோ, யாகங்களில் எவ்வாறு அஸ்வமேத யாகம் சிறந்ததோ, நதிகளில் கங்கை எவ்வாறு சிறந்ததோ, அனைத்து தேவர்களிலும் விஷ்ணு எவ்வாறு சிறந்தவரோ, மற்றும் மனிதர்களில் அந்தணர்கள் எவ்வாறு சிறந்தவர்களோ, அவ்வாறே அனைத்து விரதங்களிலும் ஏகாதசி விரதம் மிகச் சிறந்தது. ஓ, மன்னர்களில் சிறந்தோனே. யாரொருவர் ஏகாதசியை அனுஷ்டிக்கிறாரோ, அவர் எனக்கு மிகவும் பிரியமானவர். ஐந்தாயிரம் ஆண்டுகள் தவம் மேற்கொள்வதால் அடையும் புண்ணிய பலனை ஒருவர் ஏகாதசி விரதத்தை அ...

முடிவான சமயக் கோட்பாடு

 

ஸர்வ பூத நிவாஸாய

 

கமல நாபாய

 

பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம்

  பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம்  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம் இரு வகையாக பிரிக்கப்படுகிறது. அவை நேர்முகப் பக்தி தொண்டு மற்றும் மறைமுக பக்தி தொண்டாகும். நேர்முக பக்தி தொண்டு ஐந்து வகையானப் பரமபாவஙகள் அல்லது ரஸங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அதேபோல மறைமுக பக்திதொண்டு,  ஏழு வகையானப் பரம பாவங்களாகப் பிரிக்கப் படுகின்றன.  நேர்முகப் பக்தி தொண்டுகள் பின்வருமாறு :  சாந்தம் , தாஸ்யம் , சக்யம் , வாத்ஸல்யம் , சிருங்காரம் என்பவையாகும். மறைமுக பக்தி தொண்டு ஹாஸ்யம் , தயா, ரௌத்ரம், வீரம், பயானகம் (அச்சம்) , அற்புதம் (ஆச்சரியம்) பிபத்ஸம் (அதிர்ச்சியடைதல் ) என்று ஏழு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. ஆதலினால் பக்தி தொண்டு இவ்வாறு பன்னிரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.   தாங்கிக் கொள்ளுதல்,  வெளிப்படுதல்,  விரிவடைதல், பிரதிபலித்தல், துக்கித்தல்  என்னும் ஐந்தும் மெய்மறந்த காதலில் தெளிவாகப் புலப்படும் அடையாளங்களாகும். ஆகையினால் பக்தித் தொண்டின் தகுதியானது இந்த ஐந்து அடையாளங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.  🌱) சாந்த பாவ...

புலியும், பசுவும்

  புலியும், பசுவும் ஆதாரம் : பத்ம புராணம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 முன் காலத்தில் பிரபஞ்சன் என்ற ஒரு அரசன் இருந்தான் மகாபலசாலியாகிய அந்த மன்னன் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான் ஒரு புதரின் மறைவில் ஒளிந்து கொண்டிருந்தபோது சற்று தூரத்தில் ஒரு மான் வருவதைக் கண்டான் உடனே அந்த மானை நோக்கி ஒரு கூரிய அம்பை எய்தான் துள்ளிக் குதித்து விழுந்த மான் வேகமாகச் சுற்றுமுற்றும் பார்த்த போது கைகளில் வில் அம்புடன் ஓடி வந்து கொண்டிருந்த மன்னனைப் பார்த்தது . உடனே அந்த மான், "அடே முடா , என்ன காரியம் செய்துவிட்டாய் நான் தலையைக் குனிந்தபடி என் குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதைக் கவனிக்காமல் என்னுடைய மாமிசத்தைத் தின்பதற்கு ஆசைப்பட்டு என்மேல் அம்பு எய்துவிட்டாயே? பால்கொடுக்கும் தாயைக் கொல்லக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா ? இரக்கமில்லாத ராட்சசனைப்போல் இக்கொடிய காரியத்தைச் செய்த நீ அரக்க சுபாவத்துடன் அலையும் கொடிய புலியாக மாறிவிடக்கடவாயாக" என்று சபித்தது அரசன் அதிர்ச்சியடைந்து போய் நின்றுவிட்டான். அந்த மானைப் பார்த்து இருகரங்களும் கூப்பியவனாய், "ம...

சீதை இராவணனின் மகளா?

  சீதை இராவணனின் மகளா? வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁  சீதை இராவணனின் மகள் என்றும் அதனால்தான் அவன் சீதையைக் கொண்டு சென்றான் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். ஆம், சரியாகத்தான் படித்துள்ளீர். இந்தக் கருத்தும் சமூகத்தில் ஆங்காங்கே உலாவுகிறது. பரவலான ஐயமாக இல்லாவிட்டாலும், சில நேரங்களில் இக்கேள்வி எழுப்பப்படுகிறது. இதைச் சற்று விளக்குவோம். இதிகாசம் என்றால் என்ன?  🍁🍁🍁🍁🍁🍁 இதி–ஹ–ஆஸம் = இதிஹாசம், இதி–ஆஸம் என்பதற்கு “இவ்வாறு நடந்தது” என்று பொருள், ஹ என்பதற்கு “உறுதியாக” என்பது பொருள். வரலாற்று சம்பவத்தில் எந்தவொரு பொய்யும் கலக்காமல் உள்ளது உள்ளபடி எழுதப்பட்டதே இதிகாசமாகும். பாரதத்தின் இருவேறு இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணம் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டு உலகெங்கும் பரப்பப்பட்டது.  சமண இராமாயணத்தின் பிழைகள்   🍁🍁🍁🍁🍁🍁 பன்னெடுங் காலமாக இருந்து வந்த வால்மீகி இராமாயணம், வேறுபட்ட கருத்துகள் கொண்டவர்களால் பலவகை இடைச்செருகலுடன் கலி யுகத்தில் பல்வேறு மொழிகளில் இயற்றப்பட்டது. அவற்றில் சமணர்களால் எழுதப்பட்ட இராமாயணங்கள் பற்பல தவறான மாற்றுக் கருத்துகளுடனும் க...

ஸ்ரீ ராதா ரமணன் விக்ரகம்

 ஸ்ரீ ராதா ரமணன் விக்ரகம்  🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஶ்ரீ ராதா ரமணர் கோவில், ஶ்ரீல கோபாலபட்ட கோஸ்வாமியினால்  தோற்றுவிக்கப்பட்டதாகும். இவர் பிருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராவார். ஸ்ரீல கோபாலபட்ட கோஸ்வாமி, சைதன்ய மகாபிரபுவின் போதனைகளை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றி வந்தார். இவர் வழிபட்ட சாளகிராமத்திலிருந்து தோன்றிய ஶ்ரீ ராதா ரமணர்  விக்கிரகமானது மிகவும் அழகாகவும், மந்தகாசப் புன்னகையுடன் கூடியதுமாகும். 500 ஆண்டுகளுக்கு முன் பிருந்தாவனத்தில் சாளகிராமத்திலிருந்து சுயம்புவாக ஶ்ரீல கோப்பாலபட்ட கோஸ்வாமியின் வேண்டுதலுக்கிணங்கி ஶ்ரீ ராதா ரமணன் விக்ரகமாக மாறினார். இங்கு மிக உயர்ந்த தரத்திலான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.   ஸ்ரீ ராதா ரமணன் விக்ரஹம் 30 செ.மீ  உயரமுள்ளது. கோபால பட்ட கோஸ்வாமியின் பிற சாள கிராமங்களும் இங்கு ஒன்றாக வழிபடப்படுகின்றன. ஸ்ரீ ராதா ரமணரின்  விக்ரஹம் பிருந்தாவன கோஸ்வாமிகளின் விக்ரஹங்களில் தொன்மையானதாகும். இத்திருக்கோயிலில் ஸ்ரீமதி ராதாராணியின் அர்சா விக்ரகம்   இல்லை. ஸ்ரீமதி ராதாராணியின் பெயரே வழிபாட்டில் உள்ளது. ஏனென...

மகிழ்ச்சி

 மகிழ்ச்சி 🍁🍁🍁🍁🍁🍁🍁 முழுமுதற் கடவுள் புருஷோத்தமர் அதாவது எல்லா உயிர்களிலும் மிகச் சிறந்தவர் என்று அறியப்படுகிறார். எல்லா உயிர்களைப் போலவே இவரும் இருப்பார். எனினும் இவரே அவைகளில் எல்லாம் மேம்பட்டவராகவும் தலைவராகவும் விளங்குகிறார். இவரே நித்தியமானவற்றுள் எல்லாம் உயர்ந்தவராகவும், உயிர்களுக்கெல்லாம் சிறந்தவராகவும், மற்றும் முழுதுமானப் பூரணர் ஆகவும் விளங்குகின்றார். மற்ற உயிர்களின் செயல்களில் குறுக்கிட்டு இவர் அடைகின்ற பலன் ஏதும் இல்லை எனினும் அவர் நெறிமுறைப்படுத்திக் காக்கின்றவர். ஆதலினால் அவைகளை உயர்நிலைக்கு ஏற்றி அவை மகிழ்ச்சியுறமாறுச் செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது. ஒரு தந்தை கூட தன் மக்கள் எல்லோரும் தன் விருப்பத்திற்கேற்றவாறு நடந்து மகிழ்ச்சியடைவதையே விரும்புகிறான். அது போல் கடவுள் அல்லது முழுமுதற் கடவுள் அல்லது கிருஷ்ணர் உயிர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனவா என்று பார்க்கும் உரிமை படைத்தவராக இருக்கின்றார். இப்பௌதீக உலகில் மகிழ்ச்சியுடனிருப்பது நடவாத காரியம். தந்தையும் தனயர்களும் நித்தியமானவர்கள், ஆனால் ஓர் உயிர் அறிவு, ஆனந்தம் என்னும் நித்திய வாழ்வு நிலைக்கு உயராவிட்டால்...