வசந்த பஞ்சமி சரஸ்வதி தேவி தோன்றிய நன்நாள் 🍁🍁🍁🍁🍁🍁 வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். வசந்த பஞ்சமி நாளை ரிஷி பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைப்பர். வட இந்தியாவில், மக (மாசி) மாதம் (ஜனவரி - பிப்ரவரி) சுக்ல பட்ச (வளர்பிறை) ஐந்தாம் நாளான (பஞ்சமி) வசந்த பஞ்சமியன்று, சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரஸ்வதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி திருநாளை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும், சமுதாயத் திருநாளாகக் கொண்டாடப்படுகிற்து. மேற்குவங்கம், ஶ்ரீ தாம் மாயாப்பூாில் உள்ள ராதா மாதா அஷ்ட சகி திருக்கோயிலில் வசந்த பஞ்சமி நாளான்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணா் மற்றும் அஷ்ட சகி விக்கிரகங்களுக்கு மஞ்சள்பொடி பூசப்பட்டு, மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள்மலா் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. கருவறை மண்டபங்கள் அனைத்துமே மஞ்சள் நிறமலா்களால் அலங்காிக்கப்படுகின்றன. இந்த சிருங்கார தரிசனத்தை காண இரு கண்கள் போதாது. இந்தக் க...