Skip to main content

Posts

கிருஷ்ணரின் ஆனந்தமான ஹோலி விளையாட்டு

  கிருஷ்ணரின் ஆனந்தமான ஹோலி விளையாட்டு 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 விருந்தவனம் / விரஜபூமியில் ஹோலி என்பது மிகவும் வண்ணமயமான ஒரு பண்டிகையாகும். கிருஷ்ணர் இப்பண்டிகையை மிகவும் சந்தோஷமாக கோபர்கள் மற்றும் கோபியர்களுடன் பங்கு கொள்ளுவார்.  ஒரு சமயம் கோபர்கள் ஒன்று சேர்ந்து நந்தபவனத்தை நோக்கி ஹோலி விளையாட ஆரவாரத்துடன் வந்தனர். கோப சகாக்கள் வாயிலில் நின்று கொண்டு "கண்ணா, கண்ணா வெளியில் வா! நாம் எல்லாரும் சேர்ந்து ஹோலி விளையாடலாம், ஏ!! லாலா வெளியில் வா!" என அழைத்தனர்.  இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர்கள் கிருஷ்ணரின் மீது வர்ணம் கலந்த நீரை பீச்சாங்குழலில் ஊற்றி பீச்சி விளையாட ஆவலாக இருந்தார்கள் கிருஷ்ணர் ஆரவாரத்தை கேட்டவுடன் வீட்டிற்க்குள் ஓடி தாய் யசோதையின் மடியில் சென்று ஒளிந்து கொண்டார். அவர் அன்னை யசோதையிடம்  'அம்மா! அம்மா ! எனக்கு வர்ணம் என்றால் ஒரே அச்சம். மேலும் நானோ தனியாக உள்ளேன் சகாக்களோ நிறைய பேர் உள்ளனர். என் மீது மிக அதிகமான வண்ணம் தூவுவர். ஆகவே நான் ஒளிந்து கொள்கிறேன்' . அம்மா நீங்கள் வெளியில் சென்று, நான் வீட்டில் இல்லை என கூறுங்கள் என்றார்.  தாய் யசோதா இனிமையான கிர...

ஹோலி பண்டிகை

  ஹோலி பண்டிகை 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹோலி பண்டிகை இந்தியாவில்  பல இடங்களில் கொண்டாடும் திருவிழா. குறிப்பாக . வட இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா ஆகும். பங்குனி மாதம் பௌர்ணமி அன்று, ஹோலி கொண்டாடப்படுகிறது. வண்ணமிக்க வசந்தகாலம் துவங்குவதைக் கொண்டாடும் விழா ஹோலி. வ்ரஜ பூமி ப்ருந்தாவனம், மதுரா, நந்தி கிராமம், பர்சானா ஆகிய இடங்களில் ஹோலி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அசுரன் ஹிரண்யகசிபு பிரம்மாவைக் குறித்து கடுந்தவம் செய்தான். பிரம்மா அவன் முன் தோன்றியபோது இரவிலோ, பகலிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, பூமியிலோ, ஆகாயத்திலோ, மனிதனாலோ, மிருகங்களாலோ, ஆயுதங்களாலோ தனக்கு சாவு ஏற்படக்கூடாது என்று வேண்டி வரம் பெற்றான். தன்னை யாராலும் கொல்ல முடியாது என்ற மமதையில் தேவர்களையும், ரிஷிகளையும், சாதுக்களையும் துன்புறுத்தினான். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னையே கடவுளாக வணங்க வேண்டுமென்று கட்டளையிட்டான். அவனுடைய சகோதரன் ஹிரண்யாட்ஷனை பகவான் விஷ்ணு வதம் செய்துவிட்டதால் அவர் மேல் மிகவும் கோபம் கொண்டு விஷ்ணுவை யாரும் வணங்கக்கூடாது என்று அனைவருக்கும் கட்டளையிட்டான். ஆனால் அவனது மகன் பிரஹலாதன்...

கௌர பூர்ணிமா நல்வாழ்த்துக்கள்

 

பஜ கௌரங்க, கோஹோ கௌரங்க

 

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அவதார ரகசியம்

 பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அவதார ரகசியம்  வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁      பகவானுடைய பக்தர்கள் எப்போதும் அடுத்தவர்களிடம் அன்போடும் கருணையோடும் இருப்பார்கள்; உயிர்வாழிகள் துன்பப்படுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலும் மனிதர்கள், இந்த பௌதிக உலகம், ஒரு நரகம் என்பதை மறந்து விடுகிறார்கள். இந்த உலகத்தில் நாம் அகப்பட்டுள்ளோம் என்பதை மறந்து, இந்த உலக சுகங்களை அனுபவிக்க முயல்கிறார்கள். வலியை இன்பமாக கருதுகிறார்கள். இந்த உலகத்தை விட்டு ஆன்மீக உலகை அடைவதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்க மறுக்கிறார்கள். இத்தகைய மக்களை பார்க்கும்போது, அவர்களை இந்த நரக வாழ்விலிருந்து விடுவிக்கக்கூடிய வழியை பக்தர்கள் காட்டுகின்றனர். அவ்வகையில் பக்தர்களுள் சிறந்தவரான நாரத முனிவர், கலியுக மக்களின் நிலைமை கண்டு மிகவும் வேதனையடைந்தார். ஆகையால் அவர்களுக்கு கருணை காட்டவேண்டும் என்று எண்ணினார்.       முழுமுதற் கடவுளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டுமே, இந்த மக்களை விடுவிக்க வல்லவர் என்று முடிவு செய்தார் நாரதர். கருணை உள்ளம் வாய்ந்த நாரதர், பகவ...

சாந்திபுரம் பண்டிகை

  சாந்திபுரம் பண்டிகை  வழங்கியவர் - திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁 சாந்திபுரம், அத்வைத ஆச்சாரியரின் விசேஷ வசிப்பிடம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 இன்றைய இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலுள்ள மாயாபுரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதே சாந்திபுரம் என்னும் திருத்தலம். சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் தோன்றுவதற்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்த அத்வைத ஆச்சாரியர் இவ்விடத்தில் வசித்ததால், இத்திருத்தலம் கௌடீய வைஷ்ணவர்களுக்கு மிகவும் புனிதம் வாய்ந்ததாகும். அத்வைத ஆச்சாரியர் மஹாவிஷ்ணுவிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதால், இத்திருத்தலம் வைகுண்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது. அத்வைதரின் தோற்றம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 அத்வைத ஆச்சாரியர் 1434ஆம் ஆண்டில், தற்போதைய வங்கதேசத்தின் சில்லட் நகரத்திற்கு அருகிலுள்ள நவகிராமத்தில், ஸ்ரீ குபேர பண்டிதருக்கும் ஸ்ரீமதி நாபதேவிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். இந்திய எல்லையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள அத்வைத ஆச்சாரியரின் பிறப்பிடத்தில் சிறு கோயில் எழுப்பப்பட்டுள்ளது, அது தற்போது இஸ்கான் இயக்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது, குறுகிய காலத்தில் அத்வைத ஆச்சாரியர் கங்கைக் கர...

பகவான் சைதன்யர்

 

ஆமலகீ ஏகாதசி

 ஆமலகீ ஏகாதசி    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பங்குனி மாத (பிப்ரவரி/ மார்ச்) வளர்ப்பிறையில் தோன்றக்கூடிய அமலகி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் மன்ததா மன்னருக்கு வசிஸ்ட முனிவருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.  ஒருமுறை மன்ததா மன்னர், வசிஸ்ட முனிவரிடம் கேட்டார், ஓ! அதிர்ஷ்டசாலியே, தாங்கள் என்னிடம் மகிழ்ச்சியும் கருணையும் கொண்டவராயின். தயவு செய்து, அனைத்து மங்களங்களும் அடையக்கூடிய ஒரு விரதத்தைப் பற்றி எனக்கு விளக்குங்கள்.  வசிஸ்ட முனிவர் பதிலளித்தார்: ஓ, மன்னா, ஒருவருக்கு அனைத்து மங்களங்களையும் கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த விரதத்தின் பெருமைகளையும், வரலாற்றையும் கூறுகிறேன்.  ஓ, மன்னா, இந்த விரதத்தின் பெயர் அமலகி ஏகாதசி. இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளை அழித்து, முக்தியை கொடுப்பதுடன் ஆயிரம் பசுக்களை தானமளிக்கும் பலனையும் கொடுக்கிறது.  பழங்காலத்தில் வைடிசா என்ற ஒரு நகரம் இருந்தது. செல்வ செழிப்பு மிக்க பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைஸ்யர்கள் மற்றும் சூத்திரர்கள் அந்நகரில் வசித்து வந்தனர்.  ஓ, மன்னா இந்த அழகிய நகரில் நாத்திகரோ...

பகவான் சைதன்யர்

 

பகவான் சைதன்யர்

 

பகவான் சைதன்யர்

 

பகவான் சைதன்யர்

 

பகவான் சைதன்யர்