Skip to main content

Posts

பிரகலாத மகாராஜனின் பிரார்த்தனைகள்

 

பிரகலாத மகாராஜனின் பிரார்த்தனைகள்

 

விருந்தினரை வரவேற்கும் முறை

ஓர் எதிரியை வீட்டிற்கு வரவேற்பதென்றாலும் அதை மரியாதையுடன் செய்யவேண்டுமென்பது வேதக் கட்டளையாகும். எதிரியின் வீட்டிலிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் அவரை நன்கு உபசரிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுடனும், பீமனுடனும் மகத ராஜனான ஜராசந்தனை அணுகியபோது, மதிப்பிற்குரிய எதிரிகளை ஜராசந்தன் ராஜ மரியாதையுடன் வரவேற்றான். எதிரி விருந்தினராக இருந்த பீமன் ஜராசந்தனுடன் சண்டை செய்வதாக இருந்தது. இருப்பினும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவில் அவர்கள் நண்பர்களைப் போலவும், விருந்தினர்களைப் போலவும் ஒன்றாக அமர்ந்திருப்பது வழக்கம். பகலிலோ வாழ்வா, சாவா என்ற ஆபத்தான சூழ்நிலையுடன் அவர்கள் போர் செய்தனர். அதுதான் உபசரணை விதியாகும். ஒருவன் பரம ஏழையாக இருந்தாலும், குறைந்தது ஒரு புல்லாசனம், குடிப்பதற்கு சிறிது நீர் மற்றும் இனிய வார்த்தைகள் ஆகியவற்றையாவது தன் விருந்தினருக்கு அளிக்க வேண்டும் என்பது உபசரணை விதி. எனவே ஒரு விருந்தினர் நண்பராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்த செலவும் இல்லை. நற்பண்புதான் இதற்குத் தேவை.  ( ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம்...

அறிவுரையை யாரிடம் கேட்க வேண்டும்

பந்தப்பட்ட ஆத்மா நான்கு வழிகளில் குறைபாடுடையவனாக இருக்கிறான். அவை அவன் மாயை வசப்பட்டவன், தவறு செய்பவன், குறை அறிவு உடையவன், ஏமாற்றம் எண்ணம் உடையவன் என்பவையாகும். பௌதீக பந்தத்திலிருந்து ஒருவன் விடுதலை பெறாதவரையில் இந்நான்கு குற்றங்களும் கண்டிப்பாக இருக்கும். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மனிதனிடமும் ஏமாற்றும் எண்ணம் இருக்கிறது. இந்த எண்ணம் தொழில் மற்றும் பண வரவு செலவுகளில் நடை முறைப்படுத்தப்படுகிறது. இரண்டு நண்பர்கள் இணைந்து அமைதியுடன் வாழ்ந்தபோதிலும் அவர்களிடையே வரவு செலவு என்று வரும்பொழுது, அவர்களிடம் இருக்கும் ஏமாற்றும் மனப்பான்மையின் காரணமாக அவர்கள் பகைவர்களாகின்றனர். ஒரு தத்துவவாதி ஒரு பொருளாதார நிபுணனை ஏமாற்றுக்காரன் என்று குற்றம் சொல்கிறான், ஒரு பொருளாதார நிபுணனோ, ஒரு தத்துவவாதி பணத்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது அவனும் ஏமாற்றுக்காரனாகிறான் என்று தத்துவவாதியைக் குற்றம் சொல்கிறான். எது எப்படியிருந்த போதிலும் பௌதீக வாழ்க்கையின் நிலை இதுவேயாகும். மிகப் பெரிய தத்துவத்தை ஒருவன் கற்றுக் கொடுக்கலாம் ஆனால் அவனுக்குப் பணம் தேவைப்படும்பொழுது அவன் ஏமாற்றுக்காரானாகிறான். இப்பௌதிக உலகில் விஞ்ஞானிகளு...

ஶ்ரீபாத ராமனுஜ ஆச்சாரியார்

வைணவ தர்மத்தைப் பரப்பிய ஆச்சாரியர்களில் மிகவும் முக்கியமானவராக விளங்கியவர் ஶ்ரீபாத இராமானுஜர். ஆதிசேஷனின் அவதாரமான இவர் கலி யுகத்தில் 1017ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் கேசவ சோமயாஜிக்கும் காந்திமதிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். இராமானுஜரின் தோற்றம், செயல்கள், உபதேசம், மறைவு என அனைத்துமே திவ்யமான லீலைகளாகும். 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼  ஸ்ரீ ஸம்பிரதாயம் எனப்படும் இராமானுஜ பரம்பரையில் பகவத் கைங்கரியத்தோடு இணைந்து வைஷ்ணவ கைங்கரியத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு பக்தன் தனது ஆச்சாரியருக்கும் சக வைஷ்ணவர்களுக்கும் சேவை செய்வதில் மிகுந்த முனைப்புடன் இருக்க வேண்டும். அத்தகு மனப்பான்மையினை இராமானுஜரின் வாழ்விலும் அவரைச் சார்ந்த இதர பக்தர்களின் வாழ்விலிருந்தும் சில உதாரணங்களை வைத்து அறிவோமாக. திருக்கச்சி நம்பிகள் புரிந்த வைஷ்ணவ சேவை 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 காஞ்சிபுரத்தில் இராமானுஜர் வாழ்ந்த சமயத்தில் வரதராஜ பெருமாளுக்கு திருக்கச்சி நம்பிகள் (காஞ்சிபூர்ணர்) என்ற மாபெரும் பக்தர் தினந்தோறும் சாமரம் வீசும் சேவையை ஏற்றிருந்தார். வரதராஜ பெருமாளுடன் அவர் சகஜமாக பேசக்கூடியவர், அதனால...

பக்தி தொண்டு

 

" ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம் " (ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தின் உயிர் ஆகும்)

  சில சமயம் நம் முன் வினா எழுப்பப்படும், “நீங்கள் எங்களைப் புலால் உண்ணக் கூடாது என்று கூறுகிறீர்கள், ஆனால் நீங்கள் காய்களை உண்கிறீர்கள். இது வன்முறை இல்லை என்று நினைக்கிறீர்களா?” பதில் என்னவென்றால், காய்களை உண்பதும் வன்முறையே, சைவ உணவு உண்பவர்களும் பிற உயிரினங்களுக்கு எதிராக வன்முறை புரிகின்றார்கள். ஏனெனில், காய்களுக்கும் உயிர் உண்டு. பக்தரல்லாதார், பசுக்கள், ஆடுகள் மற்றும் பல பிற விலங்குகளயைும் உண்ணும் பொருட்டு கொல்கின்றனர். சைவ உணவு உண்பவராக இருக்கும் பக்தரும் தாவர உயிர்களை கொல்கிறார். ஆனால் இங்கு ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினத்தைக் கொல்வதன் மூலம் வாழவேண்டி உள்ளது என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது; இதுவே இயற்கையின் நியதி ஆகும். ‘ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம் ஒரு ஜீவராசி மற்றொரு ஜீவராசிக்கு உணவாகும்.” (பாகவதம் 1.13.47) ஒரு ஜீவன் மற்றொரு ஜீவனுக்கு உணவாகும் வகையில் இந்த ஜட உலகை பகவான் படைத்துள்ளார் ஆனால் ஒரு மனிதன் வன்முறையை எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவிற்கு மட்டுமே செயல் புரிய வேண்டும். ஒரு மனித உயிர் பரம புருஷ பகவானுக்கு அர்ப்பணிக்கப்படாத எதையும் உண்ணக் கூடாது. யக்ஞா ஸிஷ்டாஸுன: ஸந்...

யோக எனும் சொல் இணைப்பைக் குறிக்கிறது.

 

ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்

  ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பிரேமையின் உயர்நிலை 🍁🍁🍁🍁🍁🍁🍁 தமது அவதாரத்தின் இறுதி பதினெட்டு வருடங்களில் பகவான் சைதன்யர் புரியை விட்டு எங்கும் செல்லவில்லை. அச்சமயத்தில் கிருஷ்ணரின் பிரிவினால் எழக்கூடிய கசப்பும் இனிப்பும் கலந்த பரவசத்தில் மேன்மேலும் மூழ்கியபடி இருந்தார். பகலில் பல்வேறு செயல்கள் அவரது மனதை ஓரளவிற்கு திசை திருப்பும், ஆனால் இரவில் கிருஷ்ணரின் பிரிவு அவருக்கு சொல்லவியலா பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அத்துன்பம் கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு மதுராவிற்குச் சென்றதால் ராதாராணி அனுபவித்ததைப் போன்றதாகும். அக்காலக் கட்டத்தில், சில நேரங்களில் பகவான் வெளிப்புற உணர்வை வெளிப்படுத்தி, உலக நடைமுறைக்கு ஏற்ப மக்களிடம் பேசவும் பழகவும் செய்வார்; மற்ற நேரங்களில் பகலா இரவா என்பதைக்கூட அறியாமல் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பற்றி சற்றும் அறியாத அளவிற்கு கிருஷ்ணரின் நினைவில் மூழ்கியிருப்பார்; சில சமயங்களில் இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட உணர்வில் இருந்தார். ஸ்வரூப தாமோதரர், இராமானந்த ராயர், கோவிந்தர் ஆகிய மூவரும் அவரது நிலையான தோழர்கள். இரவில் இராமானந்த ராயர் அல்லது ஸ்...

ஹரிதாஸ தாகூரின் மறைவு

  ஹரிதாஸ தாகூரின் மறைவு 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒருமுறை மஹாபிரபுவின் சேவகரான கோவிந்தர் வழக்கம்போல ஜகந்நாதரின் பிரசாதத்தை ஹரிதாஸ தாகூருக்கு கொண்டு வந்தார். அப்போது, பார்ப்பதற்கு உடல் நிலை சரியில்லாத நிலையில், ஹரிதாஸர் மெதுவாக ஜபம் செய்தபடி படுத்திருப்பதைக் கண்டு, கோவிந்தர் வினவினார், “என்ன பிரச்சனை?” “என்னால் எனது ஜபத்தை நிறைவு செய்ய முடிவதில்லை,” என்று ஹரிதாஸர் பதிலளித்தார். பிரசாதத்தை அங்கு வைத்துவிட்டு, மஹாபிரபுவிடம் திரும்பிய கோவிந்தர், ஹரிதாஸரின் நிலையை அவருக்கு எடுத்துரைத்தார். மறுநாள் அங்கு வந்த பகவான் சைதன்யர் ஹரிதாஸரின் உடல்நலனை விசாரித்தபோது, “நான் ஜபிக்க வேண்டிய சுற்றுகளை நிறைவு செய்ய இயலவில்லை, இதுவே எனது நோய்,” என்று ஹரிதாஸர் மீண்டும் உரைத்தார். மஹாபிரபுவோ, “தற்போது உங்களுக்கு வயதாகிவிட்டது. மேலும், ஏற்கனவே பக்குவமடைந்த பக்தர் என்பதால், நீங்கள் இத்தனைச் சுற்றுகள் ஜபிக்க வேண்டிய தேவையில்லை,” என்று பதிலளித்தார். மறைவதற்கான விருப்பம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 “எம்பெருமானே, தயவுசெய்து எனது உண்மையான விருப்பத்தைக் கேளுங்கள். நீங்கள் இவ்வுலகில் நீண்ட காலம் தங்கப் போவதில்லை, நீங்களின்றி இங்கு வாழ்...