மன்னன் ஒருவர் தன் அரசவை அறிஞர்களிடம், “நான் எனக்காக ஒரு மோதிரம் செய்யப் போகிறேன். இக்கட்டான கட்டத்தில் படித்தால், எனக்கு உதவக்கூடிய ஒரு சுருக்கமான செய்தியை அதில் வைத்திருக்க விரும்புகிறேன். அப்படி ஒரு செய்தி வேண்டும்” என்று கேட்டார். பலமுறை முயன்றும் அரசவை அறிஞர்களால் இக்கட்டான கட்டத்தில் படித்தால் மன்னருக்கு உதவக்கூடிய ஒரு சுருக்கமான செய்தியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மன்னரிடம் ஒரு வயதான வேலையாள் இருந்தார். மன்னர் அவரை ஒரு வேலையாளாகக் கருதுவதில்லை. வயதின் நிமித்தம் அவரிடம் மிகவும் மரியாதை வைத்திருந்தார். அந்த வயதானவர் மன்னருக்கு உதவ முன் வந்தார். அவருக்கு ஞானி ஒருவர் கொடுத்த (இக்கட்டான கட்டத்தில் படித்தால் உதவக்கூடிய) செய்தியை மன்னருக்குக் கொடுத்தார். கொடுக்கும்போது “இதைப் படிக்க வேண்டாம். மோதிரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமே முடிந்து விட்டது, வேறு வழியேயில்லை எனும் சமயத்தில் இதைத் திறந்து பாருங்கள்” என்றார். அந்த இக்கட்டான கட்டம் வந்தது. நாட்டின்மீது படையெடுப்பு நடந்தது. மன்னர் நாட்டைப் போரில் இழந்து, தனது குதிரையில் தப்பித்து ஓடினார். பின்னால் எதிரிப் படையினர் துரத்தி வந்து ...