Skip to main content

Posts

துவித மனிதக் குரங்கின் முக்தி

  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கொன்ற நரகாசுரன் என்ற அசுரனுக்கு துவிதன் என்றொரு வானர நண்பன் இருந்தான் . தன் நண்பனின் மரணத்துக்குப் பழிவாங்க விரும்பிய துவிதன் , இடையர்களின் வீடுகளுக்குத் தீ மூட்டினான் . பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆனர்த்த தேசத்தை நாசப்படுத்தினான் . மேலும் தன் வலிமைமிக்க கரங்களால் சமுத்திர நீரைக் கடைந்து கொந்தளிக்கச் செய்து கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான் . அந்த அயோக்கியன் பிறகு மாமுனிவர்களின் ஆசிரமங்களிலுள்ள மரங்களை நாசப்படுத்தியதுடன் , அவர்களுடைய வேள்வித் தீயில் மலஜலமும் கழித்தான் . அவன் ஆண் பெண்களை கடத்திச் சென்று மலைக் குகைகளில் அடைத்து வைத்தான் . முழு நிலப்பரப்பையும் இவ்வாறு நாசமாக்கி , கௌரவமான குடும்பங்களைச் சேர்ந்த பல இள மங்கைகளைக் கற்பழித்தபின் , துவிதன் ரைவதக மலைப்பக்கம் வந்தான் . அங்கு பகவான் பலராமர் அழகு மங்கையிரின் கூட்டத்திற்கு கிடையயில் களிப்புற்றிருப்பதைக் கண்டான் . வாருணி மது வருத்தி போதையேறிவர் போல் காணப்பட்ட பகவான் பலதேவரை அலட்சியப்படுத்தி , அவர் முன்னிலையிலே...

தாய்க்கு இயற்கையாகவே குழந்தை மீது பற்று இருப்பது போல, இறைவன் ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் எப்போதும் அளவுகடந்தபாசம் கொண்டவர் ஆவார்

  அளவற்ற அறிவு மற்றும் முடிவற்ற ஆனந்தம் ஆகியவற்றைக் கொண்ட நித்திய வாழ்வின் உண்மையான இன்பத்தை நம்மில் ஒவ்வொருவரும் தேடிக் கொண்டிருக்கிறோம் . ஆனால் சாராம்சத்தைப் பற்றிய அறிவற்ற மூடர்கள் நிஜ வாழ்வை மாயையில் தேடி அலைகின்றனர் . இந்த ஜட உடல் நித்தியமாக நீடித்திருக்காது . மேலும் மனைவி , மக்கள் , சமூகம் மற்றும் தேசம் போன்ற இந்த நிரந்தரமற்ற உடலோடு சம்பந்தம் உள்ளவை அனைத்தும் உடல் மாற்றமடையும் பொழுது மாறிவிடுகின்றன . இது பிறப்பு , இறப்பு மூப்பு மற்றும் நோய் ஆகியவற்றின் தொடர்ச்சி அல்லது சம்சாரம் என்றழைக்கப்படுகிறது . வாழ்வின் இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு விடையைக் கண்டுபிடிக்க நாம் விரும்புகிறோம் . ஆனால் அதற்குரிய வழி நமக்குத் தெரியவில்லை . வாழ்வின் இத்துன்பங்களாகிய பிறப்பு , இறப்பு , மூப்பு , நோய் ஆகியவற்றின் தொடர்ச்சியை ஒரு முடிவுக்கு கொண்டுவர விருப்பமுள்ள எவரும் , பிறரை அல்லாது பரமபுருஷரை வழிபடும் முறையைப் பின்பற்ற வேண்டுமென்று இங்கு அறிவுறுத்தப்படுகின்றனர் . பகவத் கீதையிலும் (18.65) இது சுட்டிக் காட்டப்பட்ட...