விசோ ’ வர்தந்த தஸ்யோர்வோர் லோக - வ்ருத்திகரீர் விபோ : வைஸ்யஸ் தத் - உத்பவோ வார்தாம் ந்ருணாம் ய : ஸமவர்தயத் மொழிபெயர்ப்பு அனைவருக்கும் ஜீவனோபாயமாக உள்ள தானிய உற்பத்தியும் , பிரஜைகளுக்கு அவற்றை விநியோகித்தலும் , பகவானின் பிரம்மாண்ட ரூபத்தின் தொடைகளிலிருந்து உற்பத்தியானது . இதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுள்ள வர்த்தகப் பிரிவினர் , வைசியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் . பொருளுரை விவசாயமும் ( விச ), விவசாய உற்பத்திப் பொருட்களை வினியோகிக்கும் தொழிலும்தான் மனித சமூகத்தின் ஜீவனோபாயத்திற்குரிய வழி என்று இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . இயந்திரத் தொழில் நுட்பமானது வாழ்க்கைத் தேவைக்குரிய செயற்கையான ஒரு வழிமுறையாகும் . குறிப்பாக பெரிய அளவிலான இயந்திரத் தொழிற் சாலைகள் தான் எல்லா சமூகப் பிரச்சினைகளுக்கும் பிறப்பிடமாக உள்ளன . பசு பராமரிப்பையும் , விவசாயத்தையும் மற்றும் வணிகத் தொழிலையும் கவனித்துக் கொள்ள வேண்டியது வைசியர்களின் கடமை என்று பகவத்கீதை குறிப்பிடுகிறது . மனிதன் தன் வாழ்க்கைத் தேவைகளுக்காக பசுவையும்...