மொழிபெயர்ப்பு
அனைவருக்கும் ஜீவனோபாயமாக உள்ள தானிய உற்பத்தியும், பிரஜைகளுக்கு அவற்றை விநியோகித்தலும், பகவானின் பிரம்மாண்ட ரூபத்தின் தொடைகளிலிருந்து உற்பத்தியானது. இதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுள்ள வர்த்தகப் பிரிவினர், வைசியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
விவசாயமும் (விச), விவசாய உற்பத்திப் பொருட்களை வினியோகிக்கும் தொழிலும்தான் மனித சமூகத்தின் ஜீவனோபாயத்திற்குரிய வழி என்று இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயந்திரத் தொழில் நுட்பமானது வாழ்க்கைத் தேவைக்குரிய செயற்கையான ஒரு வழிமுறையாகும். குறிப்பாக பெரிய அளவிலான இயந்திரத் தொழிற் சாலைகள் தான் எல்லா சமூகப் பிரச்சினைகளுக்கும் பிறப்பிடமாக உள்ளன. பசு பராமரிப்பையும், விவசாயத்தையும் மற்றும் வணிகத் தொழிலையும் கவனித்துக் கொள்ள வேண்டியது வைசியர்களின் கடமை என்று பகவத்கீதை குறிப்பிடுகிறது. மனிதன் தன் வாழ்க்கைத் தேவைகளுக்காக பசுவையும், விவசாய நிலத்தையும் முழுமையாக நம்பியிருக்கலாம் என்பதை நாம் முன்பே விளக்கி இருக்கிறோம்.
போக்குவரத்து மற்றும் வங்கியில் கொடுக்கல், வாங்கல் விவகாரம் போன்றவைகளின் மூலமாக உற்பத்திப் பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதும் வைசியர்களுக்குரிய கடமையே. வைசியர்கள் பல உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மிராசுதாரர்கள் (க்ஷேத்ரீ) என்று அழைக்கப்படுகின்றனர். சிலர் உழவர்கள் (க்ருஷண) என்றும், சிலர் தானிய உற்பத்தியாளர்கள் (தில-வணிக்) என்றும், சிலர் வாசனைத் திரவிய வணிகர்கள் (கந்த-வணிக்) என்றும், சிலர் தங்க வியாபார்கள் (ஸுவர்ண-வணிக்) என்றும் அழைக்கப்படுகின்றனர். பிராமணர்கள் ஆன்மீக குருமார்களாகவும், போதகர்களாகவும் இருககின்றனர். க்ஷத்திரியர்கள் பிரஜைகளை துஷ்டரகளிடமிருந்து காப்பாற்றுகின்றனர். வைசியர்கள் உணவு உற்பத்திக்கும், விநியோகத்திகும் பொறுப்பாக உள்ளனர். அறிவற்றவர்களும், சுதந்திரமாகச் செயல்பட முடியாதவர்களுமான சூத்திரர்கள், முன் குறிப்பிட்ட மூன்று உயர் பிரிவினருக்கும், உதவியாக இருந்து தங்களுடைய வாழ்க்கைத் தேவைகளைத் தேடிக்கொள்ள வேண்டும்.
முன்பு பிராமணர்களுக்கு எல்லா வாழ்க்கைத் தேவைகளும் க்ஷத்திரியர்களாலும், வைசியர்களாலும் அளிக்கப்பட்டு வந்தன. ஏனெனில், வாழ்க்கைத் தேவைகளைத் தேடிக்கொள்ள அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. க்ஷத்திரியர்கள் வைசியர்களிடமிருந்தும், சூத்திரர்களிடமிருந்தும் வரி வசூலிப்பது வழக்கம். ஆனால் பிராமணர்கள் எவ்வித வரியையும் கட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அத்தகைய வாழ்வுமுறை மிகச் சிறந்ததாக இருந்ததால், அப்பொழுது அரசியல், சமூக மற்றும் பொருளாதார கிளர்ச்சிகள் இருக்கவில்லை. எனவே ஒர் அமைதியான மனித சமூகத்தை ஏற்படுத்துவதற்கு வெவ்வேறு வர்ணங்கள் அத்தியாவசியமாகும்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 3.6.32 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

Comments
Post a Comment