Skip to main content

க்ஷத்திரியர்களின் கடமை

 


பாஹுப்யோவர்தத க்ஷத்ரம் க்ஷத்ரியஸ் தத் அனுவரத:
யோ ஜாதஸ் த்ராயதே வர்ணான் பௌருஷ: கண்டக-க்ஷதாத்


மொழிபெயர்ப்பு

அதன்பிறகு பிரம்மாண்டமான விராட்-ரூபத்தின் கரங்களிலிருந்து பாதுகாக்கும் சக்தி உற்பத்தியானது. இத்தகைய சக்தியின் தொடர்பாக க்ஷத்திரியர்களும் தோற்றத்திற்கு வந்தனர். இவர்கள் க்ஷத்திரியத் தொழில்களைப் பின்பற்றுவதன் மூலம் சமூகத்தை, திருடர்கள் மற்றும் துஷ்டரகள் ஆகியோரின் தொல்லைகளிலிருந்து காப்பாற்றினர்.

பொருளுரை

உன்னதமான வேத ஞானத்தில் நாட்டம் கொண்டிருப்பதெனும் இத் தகுதியைக் கொண்டு பிராமணர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அது போலவே திருடர்களையும், துஷ்டர்களையும் போன்ற தீயவர்களிடமிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் சக்தியைக் கொண்டு க்ஷத்திரியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அனுவ்ருத: எனும் சொல் குறிப்பிடத்தக்கதாகும். சமூகத்தைத் திருடர்களிடமிருந்தும், துஷ்டர்களிடமிருந்தும் பாதுகாப்பதன் மூலம் க்ஷத்திரியக் கொள்கைகளைப் பின்பற்றும் ஒருவர் க்ஷத்திரியர் என்று அழைக்கப்படுகிறார், ஒரு க்ஷத்திரிய குடும்பத்தில் பிறந்ததால் அல்ல. வர்ணாஸ்ரம் முறையானது பிறப்பின் தகுதியைப் பொறுத்ததல்ல; குணத்தைப் பொறுத்ததாகும். அதற்கடுத்தாக வருவது தான் பிறப்பு; இது வர்ணாசிரம முறையின் முக்கிய அம்சமல்ல. பிராமணர், கூத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் ஆகியோருக்குரிய தகுதி முறைகள் பகவத் கீதையில் (18.41-44) குறிப்பிடப்பட்டுள்ளன. ஒருவர் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்று அழைக்கப்படுவதற்கு முன் இத்தகைய தகுதிகளையெல்லாம் அவர் பெற்றிருக்க வேண்டும்.

பகவான் விஷ்ணு எல்லா வேத இலக்கியங்களிலும் புருஷர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். ஜீவராசிகள் புருஷ-சக்தியாக (பரா சக்தி அல்லது பரா ப்ரக்ருதியாக) இருப்பினும், சில சமயங்களில் அவர்கள் புருஷர்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். புருஷரின் புறச்சக்தியினால் மாயைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜீவராசிகளுக்கு உண்மையில் எந்தத் தகுதிகளும் இல்லை என்ற போதிலும், தங்களை அவர்கள் புருஷர்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பகவானுக்கு பாதுகாக்கும் சக்தி உண்டு. பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரர் ஆகிய மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கு படைக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவிற்கு காக்கும் சக்தி உண்டு. மகேஸ்வரருக்கு அழிக்கும் சக்தி உண்டு. இப்பதத்தில் புருஷ எனும் சொல் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் புருஷரான பகவானைப் பிரதிநிதித்து, பிரஜைகளுக்கு (நீரிலோ அல்லது நிலத்திலோ பிறந்துள்ள எல்லா ஜீவராசிகளுக்கும்) பாதுகாப்பு அளிப்பதில் க்ஷத்திரியர்கள் பகவானின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர். எனவே பாதுகாப்பு, மனிதன் மற்றும் மிருக்ம் ஆகிய இருவருக்குமே உரியதுதான். இன்றைய சமூகத்திலுள்ள பிரஜைகள் துஷ்டர்களிடமிருநூது பாதுகாக்கப்படுவதில்லை. கூத்திரியர்கள் இல்லாத இன்றைய குடியாட்சி முறையானது, வைசியர்களையும், சூத்திரர்களையும் கொண்ட ஒர் அரசாங்கமாக உள்ளது. இத்தகைய அரசாங்கத்தில் முன்பு இருந்தது போல், பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் இல்லை. யுதிஸ்டிர மகாராஜனும், அவரது பேரனான பரீட்சித்து மகாராஜனும் க்ஷத்திரிய அரசர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினர். அவர்கள் எல்லா மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் சமமாகப் பாதுகாப்பை வழங்கினர். கலி புருஷன் ஒரு பசுவைக் கொல்ல முயன்றபொழுது, அந்த துஷ்டனைக் கொன்றுவிட பரீட்சித்து மகாராஜன் தனது வாளை உருவினார். இவ்வாறாக கலி புருஷன் பரீட்சித்து மகாராஜனின் இராஜ்யத்திலிருந்து விரட்டப்பட்டான். இதுதான் பகவான் விஷ்ணுவின் பிரதிநிதிக்குரிய அல்லது புருஷருக்குரிய அறிகுறியாகும். ஒரு தகுதியுள்ள க்ஷத்திரிய அரசர் பகவானின் பிரதிநிதியாக இருந்து பிரஜைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதால், அவருக்கு, பகவானுக்கு அளிக்கப்படும் அதே மரியாதை அளிக்கப்படுகிறது. இன்றைய நாட்டுத் தலைவர்களால் திருடர்களிடமிருந்து கூட பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்பதால், ஒருவன் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து பாதுகாப்பைத் தேட வேண்டியுள்ளது. தகுதியுள்ள பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் இல்லாததுதான் நவீன மனித சமூகத்திலுள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்.



(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 3.6.31)


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...