Skip to main content

Posts

இறையுணர்வு கொண்ட பிரிவினர் எப்பொழுதும் மகிழ்ச்சியும், வெற்றியும் உடையவர்களாகத் திகழ்கின்றார்கள்.

  அரசியல், அரசியல் தந்திரம், ஏமாற்றும் தன்மை, மற்றும் இரு பிரிவுகளுக்கு இடையிலான தனிநபர் அல்லது சமூக பேச்சு வார்த்தை ஆகியவை இவ்வுலகில் இருப்பதை நாம் காண்கிறோம். இவை உயர்கிரக அமைப்புக்களிலும் உள்ளன என்பது இச்சுலோகத்திலிருந்து தெளிவாகிறது. தேவர்கள் அமிர்தத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பலி மகாராஜனிடம் சென்றனர். ஆனால், தேவர்கள் ஏற்கனவே பலவீனம் அடைந்துள்ளதால், அமிர்தம் உற்பத்தியானதும் அதை தேவர்களிடமிருந்து பறித்துக் கொண்டு, தங்களது சுய நோக்கங்களுக்காக அதை உபயோகித்துக் கொள்ளலாம் என்றெண்ணிய அசுரர்கள் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தனர். உண்மையில் தேவர்களுக்கும் அதே எண்ணம் தான் இருந்தது. தேவர்கள் முழுமுதற் கடவுளாகிய பகவான் விஷ்ணுவின் பக்தர்களாக இருந்தனர். ஆனால் அசுரர்களோ பகவான் விஷ்ணுவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இதனால் பகவான் விஷ்ணு தேவர்களுக்குத் துணையாக இருந்தார். இதுவே இவர்களுக்கிடையிலுள்ள ஒரே வேறுபாடாகும். பிரபஞ்சம் முழுவதிலும் இரு பிரிவினர் உள்ளனர் விஷ்ணு குழுவினர், அல்லது இறையுணர்வு கொண்ட குழுவினர் ஒரு பிரிவும், நாஸ்திகர்கள் மற்ற பிரிவுமாவார். நாஸ்திக பிரிவினர் சந்தோஷம...

எல்லா வகையான வழிபாட்டிலும் பகவான் விஷ்ணு வழிபாடு சிறந்ததாகும்

  பத்ம புராணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம் தஸ்மாத் பாதரம் தேவி ததீயானாம் ஸமர்சனம் “எல்லா வகையான வழிபாட்டிலும் பகவான் விஷ்ணு வழிபாடு சிறந்ததாகு ம் . பகவான் விஷ்ணுவின் வழிபாட்டை விடச் சிறந்தது அவரது பக்தர்களான, வைஷ்ணவர்களை வழிபடுவதாகும்.” பௌதிக ஆசைகளில் பற்றுக் கொண்டவர்களால் வழிபடப்படும் தேவர்கள் பலர் உள்ளனர் (காமைஸ் தைஸ் தைர் ஹ்ருத - ஞானா: ப்ரபத்யந்தே ‘ன்ய - தேவதா:) மக்கள் பலவிதமான பௌதிக ஆசைகளால் சங்கடத்திற்கு ஆளாகும் போது, அவர்கள் வெவ்வேறு பலன்களை அடைவதற்காக சிவபெருமான், பிரம்ம தேவர், காளி, துர்கா, கணேஷர் மற்றும் சூரியன் ஆகியோரை வழிபடுகின்றனர். ஆயினும், பகவான் விஷ்ணுவை வழிபடுவதாலேயே ஒருவரால் இப்பலன்கள் அனைத்தையும் ஒரே சமயத்தில் அடைந்து விட முடியும். பாகவதத்தில் (4.31.14) குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல்: யதா தரோர் மூல - நிஷேசனேன த்ருப்யந்தி தத் - ஸ்கந்த - புஜோபசாகா: ப்ராணோபஹாராச் ச யதேந்ரியாணாம் ததைவ ஸர்வார்ஹணம் அச்யுதேஜ்யா “ஒரு மரத்தின் வேருக்கு நீரூற்றுவதாலேயே, அதன் அடிமரம், இலைகள், பழங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை ஒருவர் வ...

உள்ளத்தூய்மை மற்றும் பிராயச்சித்தம்

நைகாந்திகம் தத் தி க்ருதே ‘பி நிஷ்க்ருதே மன: புனர் தாவதி சேத் அஸத் - பதே தத் கர்ம - நிர்ஹாரம் அபீப்ஸதாம் ஹ ரேர் குணானுவாத: கலு ஸத்வ - பாவன:  மொழிபெயர்ப்பு சமய சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பிராயச்சித்த சடங்கு முறையில் இதயத்தை தூய்மைப்படுத்துவதற்குப் போதுமானவையல்ல. ஏனெனில் பிராயச்சித்தம் செய்த பிறகும், மனம் மீண்டும் பௌதிகச் செயல்களை நோக்கியே ஓடுகிறது. அதனால்தான், பௌதிக செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபட விரும்புபவனுக்கு, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஜபிப்பது அல்லது பகவானின் நாமம், புகழ், மற்றும் லீலைகளைத் துதித்துப் போற்றுவது, பரிபூரண பிராயச்சித்த முறையாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய நாம ஜபமும், துதியும் ஒருவனது இதயத்திலுள்ள அழுக்கை முழுமையாகப் போக்கிவிடுகிறது. பொருளுரை இச்சுலோகத்திலுள்ள கூற்றுகள், ஸ்ரீமத் பாகவதத்தில் (1.2.17) ஏற்கனவே பின்வருமாறு உறுதி செய்யப்பட்டுள்ளன: ஸ்ருண்வதாம் ஸ்வ கதா: க்ருஷ்ண: புண்ய ஸ்ரவண கீர்தன: ஹ்ருதி அந்த: ஸ்தோ ஹி அபத்ராணி விதுனோதி ஸுஹ்ருத் ஸதாம்  “எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக இருப்பவரும், உண்மையான பக்தர்களை ஆதரிப்பவரும், ...

வில்லிதாசர்

  வில்லிதாசர் என்பவர் அவருடைய மனைவி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார். இவருடைய இயற்பெயர் தனுர்தாசர் அவருடைய மனைவியின் கண்கள் மிகவும் பிரகாசமாக அழகுடன் இருந்தது இதனால் தன் மனைவியிடம் மிகவும் அன்புடன் இருந்தார் பெரிய செல்வந்தரான இவர் உறையூர் அரசவையின சிறந்த மல்யுத்த வீரராகவும் இருந்தார் அந்த ராஜ்யத்தில் வீரம் பொருந்தியவராக இருந்ததால் நாட்டில் நன்மதிப்புடன் விளங்கினார் ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களுடன் நடந்து சென்ற பொழுது வில்லிதாசர் தன் மனைவி பொன்னாச்சிக்கு வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக ஒரு கையால் குடை பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் அவள் நடக்கும் பொழுது அவளது கால்கள் புண்ணாகாமல் இருப்பதற்குத் தரையில் ஒரு துணியை விரித்துக் கொண்டும் செல்வதைக் கவனித்தார வில்லிதாசருடைய அன்யோன்யமான இச்செயலைக் கண்டு வியப்படைந்த ராமானுஜர் வில்லிதாசரை அழைத்து அந்த பெண்மணிக்கு சேவை செய்வதற்குக் காரணம் என்ன என்று கேட்டார் அதற்கு வில்லிதாசர் அவளுடைய கண்களின் அழகில முழுமையாக அடிமையாகி விட்டேன் மேலும் அந்தக் கண்களின் அழகை பாதுகாக்கத் தான் எதையும் செய்யத் தயார் என்றும் கூறினார் இதனைக்...

அரசன் யக்ஞத்துவஜா

யக்ஞத்துவஜா என்ற அரசன், தான் வாழ்ந்த காலத்தில் பல இடங்களில் விஷ்ணு கோயில் கட்டினான். ரேவா நதிக் கரையிலும் ஒரு கோயில் கட்டினான். அவன் கட்டிய எல்லாக் கோயில்களிலும், கோயிலைச் சுத்தம் செய்யும் பணியும், இரவில் விளக்கேற்றும் பணியும் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்பதற்காகப் பெருமுயற்சி செய்தான்.  விதஹோத்ரா என்பவர் அந்த கோவில்  புரோகிதராக இருந்தார் அவர் யக்ஞத்துவஜாவிடம், “அரசே! விஷ்ணு கைங்கர்யம் என்பதைப் பல வழிகளில் செய்யலாம். அவற்றை எல்லாம் விட்டுவிட்டுக் திருக்கோயிலைத் தூய்மை செய்தல், விளக்கேற்றுதல் ஆகிய இரு காரியங்களுக்காக மட்டும் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமா? அது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை?” என்று கேட்டான். இதைக் கேட்ட யக்ஞத்துவஜா அந்த புரோகிதரை நோக்கிச் பதில் உரைக்க ஆரம்பித்தார்.. "விதஹோத்ரரே ! எனக்கு ஜதீஸ்மரா என்ற முற்பிறப்பை உணரும் ஆற்றல் உண்டு. அதனால்தான் இவ்வாறு செய்கிறேன். சத்திய யுகத்தில் ரைவதா என்ற ஒரு பிராமணன் இருந்தான். வேத சாஸ்திரங்கள்  அனைத்தும் கற்று தேர்தவராக விளங்கினர். ஆனால் அவர் கற்றதை அவனது வாழ்கையில் செயல்படுத்தியதே இல்லை . எத்தனை குற்றங்கள் புரிய முடிய...

கிருஷ்ண உணர்விற்குப் புதிதாக வரும் ஒருவன் பெருந்தீனி தின்பதினால் பக்தியில் சீர்குலைகிறான்

  த்ருப்தோ ஹ்ருஷ்ட: ஸுத்ருப்தஸ்ச கந்தர்பாக்ருஷ்ட-மானஸ: ந வ்ய சஷ்ட வராரோஹாம் க்ருஹிணீம் க்ருஹ-மேதினீம் மொழிபெயர்ப்பு உணவு உண்டு தனது தாகம் தணிந்தபின் மன்னர் புரஞ்சனன் தம் மனமெங்கும் மகிழ்ச்சி பரவுவதை உணர்ந்தார். உயர் உணர்விற்கு உயர்த்தப்படுவதற்குப் பதிலாக அவர் மன்மதலால் கவரப்பட்டார். தன்னை இல்லற வாழ்வில் மிகவும் திருப்தியுடன் வைத்திருக்கும் தன் மனைவியைத் தேடும் ஆசையினால் அவர் உந்தப்பட்டார். பொருளுரை தன்னை கிருஷ்ண உணர்வு நிலைக்கு உயர்த்தக்கொள்ள விரும்புபவனுக்கு இச்சுலோகம் மிகவும் இன்றியமையாததாகும். ஒருவன் தன் ஆன்மீக குருவினால் தீட்சையளிக்கப்படும் பொழுது அவன்தன் பழக்கவழக்கங்கள் மாற்றுகிறான். விரும்பத்தகாத உணவுகளை உண்பது அல்லது புலால் உண்பது, மது வருந்துதல், தவறான பாலுறவு கொள்ளுதல், சூதாடுதல் போன்றவற்றில் அவன் ஈடுபடுவதில்லை. “ ஸாத்துவிக ஆகாரம்” என்று சாத்திரங்களில் கோதுமை, அரிசி, காய்கறிகள், பழங்கள், பால், சர்க்கரை போன்றவைகளினாலான உணவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆயினும் சில நேரங்களில் தீட்சை பெற்றவன் பிரஸாதம் என்ற பெயரில் ஆடம்பரமான உணவுகளை உண்கிறான். அவன் தனது கடந்தகால பாவ வாழ்...