ப்ராருத்வ்யம் ஏனம் தத் அதப்ர - வீர்யம் உபேக்ஷயாத்யேதிதம் அப்ரமத்த குரோர் ஹரேஸ் சரணோபா ஸனாஸ்த்ரோ ஜஹி வ்யவீகம் ஸ்வயம் ஆத்ம - மோஷம் மொழிபெயர்ப்பு அடக்க முடியாத இந்த மனமே உயிர் வாழியின் ஆற்றல் மிகுந்த பகைவனாவான் . ஒருவன் இதனைப் புறக்கணித்தாலோ அல்லது இதற்குச் சந்தர்ப்பம் அளித்தாலோ , இது மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெறும் நிலையினை எய்துகிறது . உண்மையன்று என்ற போதிலும் இது மிகவும் வலிவுடையதாகும் . இது ஆத்மாவின் சட்டபூர்வ நிலையினை மறைத்திருக்கிறது . ஒ , மன்னனே ! ஆன்மீக குரு மற்றும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்வது என்னும் ஆயுதத்தினால் இம் மனத்தை மிகுந்த கவனமுடன் வெற்றி கொள்ள முயல்வாயாக . இதனைச் செய்வாயாக . பொருளுரை மனிதனை வெல்லவோ புறக்கணிக்கவோ ஒரே ஒரு எளிமையான கருவிதான் இருக்கிறது . மனம் எப்போதும் நம்மிடம் இதைச் செய் , அதைச் செய் என்று கூறிக்கொண்டிருக்கிறது . எனவே மனதின் கட்டளைகளுக்குப் பணியாதிருக்க நாம் மிக்க தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் . படிப்படியாக மனம் ஆத...